டார்கெட் பிக்ஸ்ட்! எடப்பாடிக்கு டீம்க்கு தேதி குறித்த சசிகலா? ஓடி வந்த வைத்தியலிங்கம்! ‘அங்க’ தான்.!
சென்னை : அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சசிகலா ஓ.பன்னீர்செல்வம் தரப்பு இணைவது உறுதியாகி உள்ள நிலையில் கொங்கு மண்டலத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் சிலருடன் பேச்சுவார்த்தை சுமூகமாக நிறைவடைந்து இருப்பதாகவும் விரைவில் கொங்கு மண்டலத்தில் நடைபெற இருக்கும் மாநாட்டில் இணைப்பு விழா பிரம்மாண்டமாக இருக்கும் என்கின்றனர் சசிகலா தரப்பு நிர்வாகிகள்.
புலி வருகிறது கதையாக ஒரு வழியாக சசிகலாவும் ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக இணைந்து செயல்படுவது உறுதியாகி இருக்கிறது. அதற்கான முன்னேற்பாடு தான் நேற்று வைத்திலிங்கம் சசிகலாவை சந்தித்தது.
பொதுக்குழு நீதிமன்ற வழக்கு சசிகலாவின் புரட்சி பயணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஓ.பன்னீர்செல்வம் சசிகலா சந்திப்பு நிகழ்சியானது தாமதமாகிக் கொண்டே போன நிலையில் தற்போது விரைவில் அவர்கள் சந்திப்பது உறுதியாகி இருக்கிறது.

பிரம்மாண்ட மாநாடு
கோவை அல்லது காஞ்சிபுரத்தில் இந்த பிரம்மாண்ட மாநாடு நடக்கும் என்கின்றனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள். காஞ்சிபுரத்தை விட கொங்கு மண்டலமே தங்கள் பலத்தை நிரூபிக்க சரியான களமாக இருக்கும் என கருதுகிறார் ஓ.பன்னீர்செல்வம். காரணம் எடப்பாடி பழனிச்சாமியின் வலதுகரம் போல செயல்பட்டு வரும் தங்கமணி, வேலுமணி ஆகியோரது கோட்டை எனக் கூறப்படும் கொங்கு மண்டலத்தின் தலைநகரான கோவையில் இந்த மாநாட்டை நடத்தினால் அது தங்களுக்கு பெரிய அளவிலான ஆதரவாக அமையும் என கருதுகிறது.

தீவிர முன்னேற்பாடுகள்
இதற்காக சசிகலா, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் முன்னேற்பாடுகளை ஏற்கனவே தொடங்கி விட்டதாக கூறுகின்றனர். பிரம்மாண்ட மேடை, பந்தல்கள் தொண்டர்கள் வருவதற்கு சாலை, பார்க்கிங் வசதிகளோடு கூடிய ஒரு பெரிய இடத்தை அவர்கள் பார்த்து வருகிறார்கள். இந்த மாநாட்டில் சுமார் 2 லட்சம் பேர் வரை திரட்டுவதற்கு உத்தரவிடப்பட்டு அதற்காக செலவு தொகைகளும் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இணைப்பு விழா அல்லது பேரறிஞர் அண்ணா புகழஞ்சலி கூட்டம் என்ற பெயரில் இதனை நடத்துவதாக திட்டமிட்டு இருக்கின்றனர்.

எடப்பாடி பழனிசாமி
காஞ்சிபுரத்தில் கூட்டம் நடைபெறலாம் என கூறப்பட்ட நிலையில் கோவை தான் சரியான இடமாக இருக்கும் என நினைக்கிறேன் சசிகலா இதை எடுத்தே கோவை நிர்வாகிகள் களத்தில் இறங்கி தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியின் போது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் பல ஏற்பாடுகளை செய்து வருகிறது சசிகலா ஓபிஎஸ் தரப்பு.. அதாவது எடப்பாடியின் தீவிர ஆதரவாளர்கள் பலர் சசிகலாவை சந்தித்து ஆதரவு தர இருக்கின்றனர்.

எல்லாமே சுபம்
அதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடிந்து விட்ட தகவலை தான் ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளரான வைத்திலிங்கம் தனது பிறந்தநாளான நேற்று பகிர்ந்து இருக்கிறார். அதற்காக மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்ட நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் சசிகலா தரப்பில் இணைய இருக்கும் நிர்வாகிகள் யார் என்ற தகவலை மட்டும் வெளியே கசிய விடாமல் பார்த்துக் கொண்டிருக்கும் ஓபிஎஸ் தரப்பு மேடையில் அறிவித்து எடப்பாடிக்கு ஷாக் கொடுக்க திட்டமிட்டுள்ளது என்கிறனர் தேனி ர.ர.க்கள்.
-
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
அதிமுக வேட்பாளர் பட்டியல்.. தொகுதி மாறிய முக்கிய தலைகள்.. மாஜி அமைச்சர்கள் புதிய வியூகம்! -
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடி முதல் 23 பேர் களமிறங்கும் தொகுதிகள் அறிவிப்பு -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
John Pandian: அதிமுக பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியன் கட்சிக்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கீடு -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக்












Click it and Unblock the Notifications