சசிகலா கனவு நினைவாகிறதா? அதிமுகவை விடுங்க.. விஜய் எதை செய்தாலும் திமுக ஏன் இப்படி கொதிக்கிறது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக ஒன்றிணைந்தால் ஓரளவுக்குப் போராடலாம். ஆனால், பழைய செல்வாக்கை மீண்டும் கொண்டுவர முடியுமா என்பது சந்தேகம்தான். அதே நேரத்தில், ஒன்றிணையாமல் போனால் கட்சி இன்னும் பலவீனமாகிவிடும். இதை அதிமுக தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் மணி கருத்து தெரிவித்துள்ளார்.

பிரபல சேனல் ஒன்றுக்கு மூத்த பத்திரிகையாளர் மணி பேட்டி தந்துள்ளார்.. அதில், "தந்தை பெரியார் அறிவுலகம், மெட்ரோ ரயில் திட்டம், நெமிலி திட்டங்களை விஜய் திறந்து வைத்ததை திமுக விமர்சிக்கிறது. விஜய் திறந்து வைக்கவில்லை என்றால், ஏன் திறந்து வைக்கவில்லை என்று கேட்பார்கள். திறந்து வைத்தால், திட்டமிடுவதுதான் முக்கியம் என்று சொல்கிறார்கள். அப்போ என்னதான் செய்ய சொல்கிறார்கள்?

Sasikala TVK Government DMK

ஒரு அரசு தொடங்கிய திட்டத்தை அடுத்து வரும் அரசு முடித்து வைப்பது சாதாரணமான விஷயம்தான். இது ஒரு ரிலே ரேஸ் மாதிரி. ஒருவர் ஓடி முடித்ததும் அடுத்தவர் ஓடுவார். அதேபோலத்தான் ஆட்சியும். 5 வருடத்துக்கு ஒருமுறை ஆட்சி மாறுகிறது. ஒரு ஆட்சியில் தொடங்கிய திட்டத்தை அடுத்த ஆட்சியில் முடித்து வைக்க வேண்டிய சூழல் வரும்.

மாறி மாறி திமுக, அதிமுக

இப்போது இந்த அறிவுலகத்தை இவர் திறந்து வைக்கிறார். இவர் திறந்து வைக்காமல் ஸ்டாலின் திறந்து வைத்திருக்க வேண்டும் என்று சொல்கிறார்களா? இப்போது இதெல்லாம் நியாயமற்ற விமர்சனங்கள். தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியால் இவர்கள் இத்தகைய விமர்சனங்களை மேற்கொள்கிறார்கள்.

1952 முதல் 1967 வரை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. அதற்குப் பிறகு திமுகவும் அதிமுகவும் மாறி மாறி ஆட்சிக்கு வந்தன. அதிமுக ஆட்சியில் தொடங்கிய திட்டங்களை திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முடித்து வைத்திருக்கிறது. அப்போது யார் ஆட்சியில் இருக்கிறார்களோ, அவர்கள்தான் திட்டங்களை திறந்து வைப்பார்கள். இதை வைத்து ஏன் இவ்வளவு விமர்சனம் செய்ய வேண்டும்?

திமுகவுக்கு காழ்ப்புணர்ச்சி

உங்கள் ஆட்சிக் காலத்தில் உங்கள் ஆட்சியில் உருவாக்கிய திட்டங்களை மட்டும் நீங்கள் செய்யவில்லை. அதற்கு முன்பு அதிமுக ஆட்சியில் 10 வருடங்கள் இந்த கவர்மெண்ட், அந்த கவர்மெண்ட் செய்த எத்தனையோ திட்டங்களை நீங்கள் நிறைவேற்றியிருக்கிறீர்கள். அப்படித்தானே இதையும் பார்க்க வேண்டும்.

திமுகவுக்கு ஆட்சியை இழந்ததை இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் விஜய்யை இப்படித் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கிறார்கள். எந்த திட்டம் செய்தாலும், அதை தாங்கள்தான் செய்வதாக சொல்கிறார்கள்.. அப்படியானால் ஏன் தோற்றார்கள்?

ஒரு விஷயத்தில் தவறு நடந்திருந்தால் அதை தாராளமாக விமர்சிக்கலாம். ஆனால், எதை எடுத்தாலும் குறை சொன்னால் எப்படி? இதனால் உண்மையான மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து திமுக விமர்சிக்கும்போதுகூட, அந்த விமர்சனத்துக்கு இருக்க வேண்டிய மதிப்பு குறைந்துவிடும்.

எடப்பாடி பழனிசாமி 2 பெரிய தவறுகள்

அதிமுகவை எடுத்து கொண்டால், சசிகலா அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்கிறார்.. இதை நூறு சதவீதம் ஆதரிக்கிறேன். எடப்பாடி பழனிசாமி 2 பெரிய தவறுகளை செய்திருக்கிறார். முதலாவது, திமுக எதிர்ப்பை ஆட்சியில் இருந்தபோதும் சரியாக காட்டவில்லை; எதிர்க்கட்சியாக இருந்தபோதும் சரியாக காட்டவில்லை. இரண்டாவது, கட்சியிலிருந்து பலர் வெளியேறியபோது அவர்களைத் தக்கவைத்துக் கொள்ள எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

அதிமுக ஒன்றாக இருந்திருந்தால் விஜய் இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றிருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது. அந்த வெற்றி அதிமுகவுக்குத்தான் போயிருக்க வேண்டும். சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் என எல்லோரும் ஒன்றாக இருந்திருந்தால் இன்றைய அரசியல் நிலைமையே வேறாக இருந்திருக்கும்.

வேலுமணி, சண்முகம்

எடப்பாடி பழனிசாமியிடம் ஒரு பிரச்சினை இருக்கிறது. அவர் எல்லோரையும் அரவணைத்து செல்ல மாட்டார். மற்றவர்களிடம் கலந்து பேச மாட்டார்.. அவர்களுக்கும் உரிய மரியாதை கொடுக்க மாட்டார். வேலுமணி, சி.வி.சண்முகம் போன்றவர்கள் அவர் தலைமையின் கீழ் எப்படி வேலை செய்வார்கள்? அதே நேரத்தில், அவர்களால் கட்சியைக் கைப்பற்றவும் முடியவில்லை.

அதிமுக ஒன்றிணைந்தால் ஓரளவுக்குப் போராடலாம். ஆனால், பழைய செல்வாக்கை மீண்டும் கொண்டுவர முடியுமா என்பது சந்தேகம்தான். அதே நேரத்தில், ஒன்றிணையாமல் போனால் கட்சி இன்னும் பலவீனமாகிவிடும். இதை அதிமுக தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+