சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திடீர் திருப்பம்.. வாக்காளர் லிஸ்ட்டில் சசிகலா பெயர் இல்லை.. இளவரசி பெயரும் இல்லையாமே.. உண்மையா?

வாக்காளர் பெயர் பட்டியலில் சசிகலாவின் பெயர் இல்லை என்கிறார்கள்

Google Oneindia Tamil News

சென்னை: நாடே எதிர்பார்க்கும் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் சசகிலா பெயர் இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.. இதுதான் இந்த திடீர் பரபரப்புக்கு காரணம்..!

சசிகலா சலசலப்பு இப்போது வரை விரட்டி வருகிறது.. இந்த தேர்தலில் இவரது பங்களிப்பு இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. இவரைதான் தினகரன் மலைமாதிரி நம்பி கொண்டிருந்தார். கடைசியில் அதிரடியாக களம் இறங்கி அதிமுகவுக்கே செக் வைத்து வருகிறார்.

அதனால்தான், இவர் சிறையில் இருந்து வெளிவருவதற்கு முன்பே அதிமுக தரப்பு பலவித கெடுபிடிபிடிகளை விதித்தது.. சசிகலாவை கண்டு சற்று கலக்கமும் அடைந்தது..!

பிடிவாதம்

பிடிவாதம்

சசிகலா விஷயத்தில் கடைசிவரை எடப்பாடியார் பிடிவாதம் காட்டினார்.. கட்சியிலும் சேர்க்கவில்லை.. கூட்டணியிலும் சேர்க்கவில்லை.. அதிமுக கூட்டணி பலவீனமாகி போனது... தென்மண்டலத்தில் அதிருப்திகளும் சேர்ந்துவிட்ட நிலையில்தான், சசிகலா மீதான சாப்ட் கார்னர் லேசாக எட்டிப்பார்க்கவும் ஆரம்பித்தது.

 வதந்தியா?

வதந்தியா?

இது அத்தனையையும் தமிழகம் கண்ட நிலையில்தான், நாளைக்கு தேர்தல் நடக்க போகிறது. இந்த நேரத்தில் ஒரு உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகி உள்ளது.. வாக்காளர் லிஸ்ட்டில் சசிகலா பெயரை காணோமாம். அவருடன் சேர்த்து இளவரசியின் பெயரையும் காணோம் என்கிறார்கள். இது திட்டமிட்ட ஒன்றா? அல்லது எதிர்பாராத ஒன்றா? அல்லது வதந்தியாது என்று தெரியவில்லை.. இதற்கு முன்பு கூட இப்படித்தான் நடந்தது.

வாக்குசாவடி

வாக்குசாவடி

ஜெயலலிதா வீட்டில்தான் இவ்வளவு காலம் வசித்து வந்தார் சசிகலா.. அவருடைய உறவினர் இளவரசியும், இதே போயஸ்கார்டன் வீட்டில்தான் வசித்து வந்தார் . அதனால், ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டு அட்ரஸில்தான் சசிகலா, இளவரசி ஆகியோர் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருந்தன... அதனால், 2016 சட்டசபை தேர்தலின்போது ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வாக்குச்சாவடிக்கு அன்றைய முதல்வர் ஜெயலலிதாவுடன் சென்று இவர்கள் 2 பேருமே வாக்களித்துவிட்டு வந்தனர்.

தீர்ப்பு

தீர்ப்பு

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு வந்தது... இதற்கு பிறகு சசிகலா, இளவரசி 2 பேருமே ஜெயிலுக்கு போய்விட்டார்கள்.. இந்த சமயத்தில்தான் எம்பி தேர்தலும் வந்தது.. அப்போது, 2 பேரும் போயஸ் கார்டன் வீட்டில் இல்லை என்பதால், இருவரின் பெயர்களுமே வாக்காளர் லிஸ்ட்டில் இருந்து நீக்கப்பட்டது.

 நினைவிடம்

நினைவிடம்


இப்போது, ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடடு நினைவிடமாக உள்ளது.. பொதுமக்களும் அங்கு செல்ல அனுமதி இல்லை.. சசிகலாவுக்காக இதே போயஸ் கார்டனில் வேறு ஒரு புது வீடு தயாராகி உள்ளது.. ஆனால், அவர் அங்கு செல்லாமல், இப்போது வரை தி.நகர் வீட்டில்தான் இருக்கிறார்.. இந்த வீடு அவரது அண்ணன் மகள் வீடு.. அதனால் இங்கும் ஓட்டு இவருக்கு இருக்காது என்று தெரிகிறது..

 குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

போயஸ் வீட்டிலும் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் இல்லாததால், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டே சசிகலாவின் பெயரை நீக்கியதாக ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.. இன்னும் தேர்தல் நடந்து முடிவதற்குள் எத்தனை பரபரப்புகள் வெளியே வரப் போகிறதோ தெரியவில்லை.. பார்ப்போம்!

English summary
Sasikala's name is not in the voter list, Sources say
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X