ஒரு சதவீத வாக்கு வித்தியாசத்தில் மீண்டும் வெற்றி வாகை சூடும் எஸ்.பி.வேலுமணி.. தந்தி டி.வி சர்வே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக 42%- 48% வாக்குகள் பெறும் என்றும் திமுக 41%-47% வாக்குகள் பெறும் என்றும் தந்தி டிவி கருத்து கணிப்பு கூறியுள்ளது.

ஒரு சதவீத வாக்கு வித்தியாசத்தில் எஸ்.பி.வேலுமணி முன்னிலை பெறுவார் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

SBVelumani to win again by one percent vote difference - thanthi TV Survey

தமிழகம் முழுவதும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தேர்தல் கருத்து கணிப்புகளும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் தந்தி டி.வி. நடத்திய கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஸ்டார் அந்தஸ்து பெற்ற கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக 42%- 48% வாக்குகள் பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. திமுக 41%-47% வாக்குகள் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மநீம 4%-7%; நாம் தமிழர் 4%-7%; அமமுக 2%-5% வாக்குகள் பெறும் என்று கூறியுள்ளது.

தொண்டாமுத்தூர் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி களமிறங்குகிறார். தி.மு.க சார்பில் கார்த்திகேய சிவசேனாபதி களம் இறங்குகிறார். தற்போது தந்தி டி.வி. கருத்து கணிப்பின்படி எஸ்.பி.வேலுமணி மற்றும் கார்த்திகேய சிவசேனாபதி இடையே கடும் போட்டி நிலவும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனாலும் ஒரு சதவீத வாக்கு வித்தியாசத்தில் எ.ஸ்.பி.வேலுமணி முன்னிலை பெறுவார் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ள எ.ஸ்.பி.வேலுமணி மீண்டும் வெற்றி வாகை சூடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+