சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மீண்டும் பள்ளிக்கு போகலாம்.. உற்சாகத்துடன் பள்ளி சென்ற மாணவர்கள்! மாணவர்களுக்காக இத்தனை ஏற்பாடுகளா?

Google Oneindia Tamil News

சென்னை : கோடை விடுமுறைக்குப் பின் தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில்,
பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்களால் முககவசம் அணிந்து வர வேண்டும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, மாணவர்களுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Recommended Video

    TN Schools Reopen! Students உற்சாகம்..வரவேற்ற ஆசிரியர்கள் | *TamilNadu | OneIndia Tamil

    தமிழகத்தில் 1 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. இதைத் தொடர்ந்து வருகிற 20ஆம் தேதி பனிரெண்டாம் வகுப்புகளும், 27ஆம் தேதி தேதி பதினொன்றாம் வகுப்புகளும் தொடங்குகின்றன.

    பள்ளிகள் திறப்பு! துள்ளிவரும் பிள்ளைச் செல்வங்களை வாழ்த்தி வரவேற்கிறேன்! முதல்வர் ஸ்டாலின் ட்விட்..! பள்ளிகள் திறப்பு! துள்ளிவரும் பிள்ளைச் செல்வங்களை வாழ்த்தி வரவேற்கிறேன்! முதல்வர் ஸ்டாலின் ட்விட்..!

    இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்று வந்த நிலையில், பள்ளி வளாகம் மற்றும் பள்ளி வாகனங்களை முறையாக பராமரிப்பது உள்ளிட்டவை குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வழங்கியுள்ளது.

    இன்று பள்ளிகள் திறப்பு

    இன்று பள்ளிகள் திறப்பு

    தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தேர்வு நடைபெற்று கோடை விடுமுறை விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. இதில் அரசு துவக்கப்பள்ளி ஆரம்பப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி, என அரசு நிதியுதவி பள்ளி தனியார் பள்ளி பள்ளிகளிலும் மாணவ மாணவிகள் இன்று வருகை தந்தனர்.

    முககவசம் அவசியம்

    முககவசம் அவசியம்

    பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்களால் முககவசம் அணிந்து வர வேண்டும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் மாணவ மாணவியர்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பின்பு வகுப்பறையில் அனுமதிக்கப்பட்டனர். பள்ளிகள் திறக்கப்பட்டாலும், கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    ஏற்பாடுகள் தீவிரம்

    ஏற்பாடுகள் தீவிரம்

    மேலும், கொரோனா பரவல் சற்று அதிகரித்தாலும் பாதிப்பு 100 முதல் 200 பேர் பாதிப்பு என்ற அளவில் தான் உள்ளது. அதனால் பள்ளிகள் அறிவிக்கப்பட்டபடி திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டதும், 12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கோர்பவேக்ஸ் இரண்டாவது டோஸ் செலுத்தப்படும் என அமைச்சர் கூறியிருந்தார். இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலான மாணவர்கள் பள்ளிகளுக்கு முகக் கவசம் அணிந்து வந்ததை பார்க்க முடிந்தது.

    தமிழக அரசு உத்தரவு

    தமிழக அரசு உத்தரவு

    இந்நிலையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களுக்கும் தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் இருந்து பாட நோட்டு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. பள்ளிக்கூடங்கள் இன்று தொடங்கியதும் இலவச பாடப்புத்தகம் மற்றும் நோட்டுகளை வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் பள்ளிக் கூடங்களில் ஒரு வாரத்துக்கு பாடங்களை நடத்தாமல் புத்துணர்வு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வகுப்புகள் தொடங்கப்பட்டு முதல் ஒரு வாரத்துக்கு பாடங்களை நடத்தாமல் புத்துணர்வு பயிற்சியும், நல்லொழுக்கம் மற்றும் உளவியல் ரீதியான வகுப்புகளும் நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஒரு வாரத்திற்கு பிறகு வழக்கமான பாடங்களை அட்டவணைப்படி நடத்தலாம் என்றும் கூறப்பட்டு உள்ளது.

    English summary
    Schools in Tamil Nadu reopen today after summer vacation Students coming to the school have been advised by the teachers to wear masks and adhere to the social gap and special arrangements have been made for the students.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X