இது ஆங்கிலத்திற்கு நாம் போட்ட பிச்சை.. ஸ்பீச்சு.. அட்டாக்கு. 5 வார்த்தைகளை சொல்லி அசர வைத்த சீமான்
சென்னை : சீமான் பரப்புரையின் போது ஆங்கில மொழி பற்றி பேசினார். குறிப்பாக தமிழ் வார்த்தைகள் பல, ஆங்கிலத்தில் உள்ளது பற்றி பேசினார், அப்போது அவர் கூறும் போது, பேச்சு முடிந்து , அண்ணன் இறங்கி போகும் போது ஸ்பீச்சு நல்லா இருக்கு என்பார்கள், பேச்சுக்கு முன்னாடி ஒரு sஐ போட்டு ஸ்பீச்சு ஆக்கிவிட்டான். தாக்கு என்ற வார்த்தையில் ஒரு a போட்டு அடாக்கு என்று மாற்றிவிட்டான் என்றார்.
Recommended Video
ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021ல் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் செய்து வருகிறார். வியாழக்கிழமை ( 07-10-2021) செய்யூர் தொகுதி, சித்தாமூர் கூட்டு சாலை சந்திப்பில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் சீமான் பேசும் போது, தனித்து நிற்பது ஏன் என்பது குறித்து பேசினார்.
அப்போது அவர் பேசும் போது, சரண் அடைந்து வாழ்வதை விட சண்டையிட்டு சாவதே மேல் என்று வாழ்ந்தவர் எங்கள் தலைவர் (பிரபாகரன்). அவர் வழியில் வந்த பிள்ளைகளாகிய நாங்கள் அதேபோல் தான் இருப்போம். கூகுளை கும்பிடு போட்டு 4 சீட் வாங்க மண்டியிடுவதை விட, அனைத்து சீட்டும் என்னது என்று நினைத்து இறங்குகிறோம் என்றார்.

ஸ்பீச்சு
சீமான் பரப்புரையின் போது ஆங்கில மொழி பற்றி பேசினார். குறிப்பாக தமிழ் வார்த்தைகள் பல, ஆங்கிலத்தில் உள்ளது பற்றி பேசினார், அப்போது அவர் கூறும் போது, பேச்சு முடிந்து, அண்ணன் இறங்கி போகும் போது ஸ்பீச்சு நல்லா இருக்கு என்பார்கள், பேச்சுக்கு முன்னாடி ஒரு sஐ போட்டு ஸ்பீச்சு ஆக்கிவிட்டான். தாக்கு என்ற வார்த்தையில் ஒரு a போட்டு அடாக்கு என்று மாற்றிவிட்டான்.

நாவாய்
உடனே என்ற வார்த்தையில் ஒரு sஐ போட்டு சடனே என்று மாற்றிவிட்டான். நம்மிடம் இருந்து பிச்சை எடுத்த மொழி ஆங்கிலம். அதை ஆயுதம்என்று நினைத்து படித்துக்கொண்டு இருக்கிறான். நம்முடைய கட்டுமரம் அவனுடைய கட்டுமரான், நம்முடைய நாவாய், அவனுடைய நேவி. ஆங்கிலத்திற்கு நாம் போட்ட பிச்சை தான் இந்த வார்த்தைகள்.

நான் எப்படி
பெற்ற தாயின் அருமையை பற்றி தெரியாதவர்களுக்கு எப்படி தெரியும் என்னுடைய இந்த பேச்சு. நானும் தற்குரியும் தறுதலயுமாகத்தான் திரிந்திருப்பேன்.இவரை பார்க்கவில்லை என்றால்.. ( பிரபாகரன் படத்தை காட்டுகிறார்). நான் திமுகவிலேயே இருந்திருக்கலாம். ஒரு எம்பி அல்லது எம்எல்ஏ ஆகி இருக்கலாம். விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை சந்திக்காமல் இருந்திருந்தால் நடந்திருக்கும். நான் பாட்டுக்கு சினிமா எடுத்து கோடிகோடியாக சம்பாதித்து இருப்பேன்" என்றார்.

கேஸ் அழகிரி கண்டனம்
இதனிடையே தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விடுதலைப்புலிகள் ஆதரவாளருடன் சீமானுக்கு தொடர்பு உள்ளதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி அண்மையில் அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் , விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவாக சீமான் தலைமையிலான நாம் தமிழர் இயக்கம் பகிரங்கமாக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியையும், சோனியா காந்தியையும் தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்துகிற வகையில் சீமான் பேசியது சமூக ஊடகங்களில் பரவலாக வெளிவந்துள்ளது.

விடுதலை புலிகள் தொடர்பு
இத்தகைய கூட்டங்களில் வன்முறையை தூண்டுகிற வகையிலும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கிற போக்கிலும் அவர் பேசி வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவோடு தொடர்புடைய சற்குணன் என்கிற சபேசன் தேசிய புலனாய்வு அமைப்பினரால் கைது செய்யப்பட்டுள்ள அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.

விசாரிக்க வேண்டும்
வளசரவாக்கம், ஐயப்பன் தாங்கல் பகுதியில் இவர் தங்கியிருந்த இடங்களில் அதிர்ச்சியூட்டும் ஆவணங்களும், தமிழ்நாட்டிலிருந்து பெரும் நிதியை இலங்கைக்கு அனுப்பிய ஆதாரங்களும் சிக்கியுள்ளன. இவர் ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகள் சிறையில் இருந்து சமீபத்தில் வெளி வந்திருக்கிறார். தற்போது கைது செய்யப்பட்டுள்ள சற்குணனுக்கும், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இவர் மூலமாக பெரும் நிதி சீமானுக்கு வழங்கப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து தேசிய புலனாய்வு அமைப்பு தீவிரமாக விசாரிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

சீமான்
அமைதிப் பூங்காவாக இருக்கிற தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்கிற வகையிலும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் கொடுக்கிற முறையிலும் செயல்பட்டு வருகிற நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். இத்தகைய சீர்குலைவு சக்திகளை முளையிலேயே கிள்ளி எறியவில்லையெனில் அவரது வன்முறை பேச்சால் ஈர்க்கப்பட்டு இளைஞர்கள் தவறான தீவிரவாத பாதைக்கு செல்ல நேரிடும் என எச்சரிக்க விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications