அம்பை தொகுதியில் சீமானின் பொது வேட்பாளர் திட்டம்.. திமுக, அதிமுக ஆதரவு கொடுக்கவில்லையா? பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். அம்பை தொகுதியில் சீமான் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், திடீரென இடைத்தேர்தல் அறிவிப்புக்கு முன்பே சீமான் தன்னை வேட்பாளராக அறிவித்திருக்கிறார்.

அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்ட இசக்கி சுப்பையா வெற்றி பெற்ற நிலையில், திடீரென பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமானார். இதனால் அம்பாசமுத்திரம் தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. உயர்நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருப்பதால், இடைத்தேர்தல் அறிவிப்பு தாமதமாவதாக சொல்லப்படுகிறது.

Seeman

இருப்பினும் அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் இசக்கி சுப்பையா என்று தவெகவின் சுவர் விளம்பரங்கள் வரையத் தொடங்கிவிட்டனர். இதனிடையே அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் சீமான் போட்டியிடுவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து சீமான் பேசுகையில், அம்பாசமுத்திரம் தொகுதியில் நான் போட்டியிடுகிறேன்.

என்னை கைது செய்து சிறையில் அடைத்தாலும் நாதக வீரியமாக போராடும். சீமானின் குரல் சட்டசபையில் ஒலிக்க வேண்டும் என்று மற்ற கட்சிகள் நினைப்பதை விடவும், மக்கள் நினைக்க வேண்டும். மக்கள் விரும்பிவிட்டால், வேறு பேச்சு கிடையாது. அதுதான் எங்களின் நோக்கம். மற்ற கட்சியினர் ஆதரவு வேண்டுமென்று நினைத்திருந்தால், எப்போதோ கூட்டணிக்கு சென்றிருப்பேன் என்று பேசியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், அனைத்து சாதிகளுக்கும், உயிரினங்களுக்குமான பொது வேட்பாளர் நான் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் சீமானின் பொது வேட்பாளர் திட்டம் எடுபடவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக திமுக, அதிமுக, பாமக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை பெற சீமான் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

இதுதொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் கூட பொது வெளியில் பேசி இருந்தார். சீமானை ஆதரிக்க திமுக ஆலோசிப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் திடீரென சீமான் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக தன்னை தானே அம்பை இடைத்தேர்தல் வேட்பாளராக அறிவித்து கொண்டுள்ளார். இதனால் திமுக, அதிமுக கட்சிகளின் ஆதரவு சீமானுக்கு கிடைக்கவில்லையோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+