நாம் தமிழர் கட்சி தலைவர் பிரபாகரன்.. தேர்தல் ஆணையத்தில் பதிவே செய்திருக்கிறோம் தெரியுமா? சீமான்
சென்னை: நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தம்பி விஜய்தான்; ஆனால் நாம் தமிழர் கட்சியின் தலைவர் பிரபாகரன் என இந்திய தேர்தல் ஆணையத்திலேயே பதிவு செய்திருக்கிறோம் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையைத் தொடர்ந்து இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டது. ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரனும் சேர்க்கப்பட்டார். தமிழ்நாடு சட்டசபையில் முதல்வராக ஜெயலலிதா இருந்த போது சபாநாயகர் காளிமுத்து, பிரபாகரனை கைது செய்து தூக்கிலிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினார்.

தற்போதும் இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தடை நீடிக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பாகவும் அதன் தலைவர் பிரபாகரன் படங்களைப் பயன்படுத்தவும் நாம் தமிழர் கட்சிக்கு மட்டும் தொடர்ந்து அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நடிகர் விஜய் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்துக்கு விஜய்தான் தலைவர். ஆனால் என் கட்சிக்கு தலைவர் யார் தெரியுமா? பிரபாகரன் என சொல்லி இருக்கிறேன் என்பது அல்ல.. இந்திய தேர்தல் ஆணையத்திலேயே பிரபாகரன்தான் என் கட்சியின் தலைவர் என பதிவே செய்திருக்கிறோம் என சீமான் தெரிவித்துள்ளார். மேலும் பிரபாகரனை நாங்கள் எங்கள் கட்சியின் தலைவராக மட்டும் பார்க்காமல் 13 கோடி தமிழ்த் தேசிய இனத்தின் தலைவராகவும் பார்க்கிறோம் ஆகையால் விஜய் கட்சியையும் எங்கள் கட்சியையும் ஒப்பிடுவதே தவறு என்றார்.
அதே நேரத்தில் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவரான பிரபாகரனை தலைவராக ஒரு கட்சி தெரிவித்தால் அதை இந்திய தேர்தல் ஆணையம் எப்படி ஏற்றுக் கொண்டிருக்கும்? என்கிற கேள்வியும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்களால் எழுப்பப்பட்டு வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications