சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உங்களுக்கெல்லாம் வெட்கமே இல்லையா.. எப்படிடா எங்க கிட்ட ஓட்டு கேட்டு வர்றீங்க?.. சீமான் சாடல்

நாட்டின் வளர்ச்சி என்பது எது குறித்து சென்னை கூட்டத்தில் சீமான் விளக்கி பேசினார்.

Google Oneindia Tamil News

சென்னை: "மானம், மரியாதை, சூடு, சொரணை எதுவுமே இல்லையா? சோத்துல உப்புதானே போட்டு திங்கறிங்க" என்று சென்னை கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை விமர்சித்த சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒவ்வொரு மேடையிலும் பாஜகவை விடுவதாக இல்லை. 5 வருடம் நடந்த ஆட்சி குறித்து கேள்வி மேல் கேள்வி எழுப்பி விமர்சனமும் செய்து வருகிறார். சமீபத்தில் பிரச்சார கூட்டத்தில் பேசியபோது சொன்னதாவது:

"செல்போன் டிரான்சேக்‌ஷன் அதாவது பண பரிமாற்றம் என்பது நாட்டின் ஒரு வளர்ச்சியா? நிலத்துல என் அம்மா, பெரியம்மா, என் தங்கச்சி வேலை பாக்கறாங்க. அவங்களுக்கு எப்படி கூலி தருவே? செக் தருவியா? குடுக்கிற 100 ரூபாயை எப்படி தருவே? குப்பம்மா உன் செல்போன் நம்பர் தா, செல்போன்ல டிரான்சேக்‌ஷன் பண்ணிடுவேன்னு சொல்லுவியா? இடத்துக்கு தகுந்த பொருளாதார கொள்கை வேண்டும்.

கட்டிய மனைவியை தெருவில விட்டுட்டு, பெண்களுக்கு மசோதா போடுவோம்னு சொன்ன மகாத்மா மோடி.. சீமான் கட்டிய மனைவியை தெருவில விட்டுட்டு, பெண்களுக்கு மசோதா போடுவோம்னு சொன்ன மகாத்மா மோடி.. சீமான்

ஏடிஎம் கார்டு

ஏடிஎம் கார்டு

ஒரு சிக்னல்ல கார் வந்து நிக்குது. உள்ளே ஒரு பொண்ணு உட்கார்ந்திருக்கு. ஒரு பிச்சைக்காரன் வந்து கார் கண்ணாடியை தட்டி பிச்சை கேட்கிறான். அந்த பொண்ணு, என்கிட்ட காசு இல்லை. ஒன்லி கார்டுதான் இருக்குன்னு பர்ஸில் இருந்து ஏடிஎம் கார்டு எடுத்து காட்டுது.

டிஜிட்டல் இந்தியா?

டிஜிட்டல் இந்தியா?

அந்த பிச்சைக்காரன் விடறதா இல்லை. அவன் தன் பையில இருந்து ஸ்வைப் மிஷின் எடுத்து காட்டி, 'பரவால்லை கார்டு அக்சப்ட்டுன்னு' சொல்றான். இதுவா வளர்ச்சி.. இதுதான் டிஜிட்டல் இந்தியாவா? நான் கேட்பது பிச்சைக்காரர்களுக்கு ஸ்வைப் மிஷின் என்பது வளர்ச்சி இல்லை. பிச்சைக்காரர்களே இல்லாத தேசத்தை உருவாக்குவதே நாட்டின் உண்மையான வளர்ச்சி.

வரிகள்

வரிகள்

75 விழுக்காடு வரியை மாநில மக்களுக்கு கொடு. 25 விழுக்காடு வரியை பொதுநிதியா கொண்டு போ. வெளியுறவு துறை, பாதுகாப்பு இதை மட்டும் நீ பாரு. மீதி மத்ததை நாங்க பாத்துக்கறோம். எல்லாத்தையுமே நீ கொண்டு போய் வச்சிகிட்டு, அது மேல ஏறி நின்னுக்கிட்டா எப்படி நலன் கிடைக்கும்?

விவசாய கடன்

விவசாய கடன்

கஜா புயல்ல பாதி நாடு அழிஞ்சு போச்சு. டேய்.. உங்களுக்கெல்லாம் வெட்கமே இல்லையாடா.. எப்படிடா எங்க கிட்ட ஓட்டு கேட்டு வர்றீங்க? மானம், மரியாதை, சூடு, சொரணை இது எதுவுமே இல்லையா? சோத்துல உப்பு போட்டு திங்கறிங்களா? சரி.. ரொட்டி சாப்பிடுவியே.. அதுல உப்பு போடறது இல்லையா? 6000 விவசாயிக்கு ஏன் கடன் தர்றே? அதிலயும் 2 ஆயிரம் இப்போ போட்டுட்டு மீதி 4 ஆயிரத்தை பிடிச்சு வச்சுப்பாரு. அடுத்தமுறை என்னை பிரதமர் ஆக்கு, அப்போ மீதி பணத்தை தர்றேன்னு சொல்லுவாரு.

சந்தை பொருளாதாரம்

சந்தை பொருளாதாரம்

வேலைவாய்ப்புன்னு வந்தான் நோக்கியோ கம்பெனிக்காரன். என்னத்த நோக்கினான்? பெண்களை நோக்கியோ? 2000 கோடி இன்னைக்கு கடனை வெச்சிட்டு கிளம்பிட்டான். வர்த்தக பொருளாதாரத்தை, சந்தை பொருளாதாரத்தை ஏற்றுக் கொண்டுள்ள நாடு வளராது. சந்தையில் வாழ்க்கை நடக்குமா? வர்த்தகம் நடக்குமா? வர்த்தகம்தான் நடக்கும். நாளை அந்த கூடாரமும் காலி செய்யப்படும். அதை எழுதி வெச்சுக்குங்க" என்றார்.

English summary
Seeman campaigned in North Chennai for his Candidate Kaaliyammal and criticized Tax system in India
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X