4 நாட்களாகிவிட்டது.. இடைத்தேர்தல் தோல்விக்கு பின் அலுவலகத்திற்கு கூட வராத சீமான.. தவிக்கும் தம்பிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகளுக்கு பின் சீமான் 4 நாட்களுக்கும் மேலாக கட்சி அலுவலகம் கூட வராமல் துவண்டு போய் இருப்பதாக பேச்சுகள் எழுந்துள்ளன. இடைத்தேர்தலில் நாதக பெற்ற வாக்குகளை வைத்து, அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடும் திட்டத்தை மறுபரிசீலனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் தவெக மற்றும் திமுகவுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. இந்த இடைத்தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்குள் மீண்டும் பிரச்சனைகள் தொடங்கினாலும், பரிதாப நிலைக்கு சென்றது நாம் தமிழர் கட்சி தான். ஏனென்றால் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதியிலும் முகாமிட்டு வாக்கு சேகரித்தார் சீமான்.

Seeman NTK By Election 2026

இரு தொகுதிகளிலும் நாதகவுக்கு 10 ஆயிரம் வாக்குகளாவது கிடைக்கும் என்று அக்கட்சியினர் நம்பிக்கையோடு இருந்தனர். ஆனால் மதுராந்தகத்தில் 2,709 வாக்குகளும், தாராபுரத்தில் 5,268 வாக்குகளும் கிடைத்தது. இதனால் நாதக டெபாசிட் தொகையையே பறிகொடுத்தது. இதனால் நாதகவின் வாக்கு வங்கி பறிபோனதாகவும் பார்க்கப்படுகிறது.

இதனால் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான சோகம் அடைந்துள்ளது தெரிய வந்துள்ளது. இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி 4 நாட்களாகியும் சீமான் இதுவரை கட்சி அலுவலகத்திற்கே வரவில்லை என்று தெரிகிறது. எந்த நிர்வாகிகளுடனும் ஆலோசனை மேற்கொள்ளவில்லை. வீட்டில் இருந்தவாறே தன்னை சந்திக்க வந்தவர்களிடம் மட்டும் பேசி இருக்கிறார்.

அப்போது ஒரு தரப்பு அம்பாசமுத்திரம் தொகுதியில் களமிறங்குவது குறித்த பேச்சுகள் வந்துள்ளன. அப்போது சீமான், இந்த மக்களை நம்பி அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட முடியாது என்று புலம்பி இருக்கிறார். சிலர் நாதக இனி கூட்டணிக்குள் செல்ல வேண்டும் என்று ஆலோசனையை வழங்க தொடங்கி இருக்கின்றனர்.

இதனால் சீமான் அடுத்தக் கட்டமாக என்ன செய்வதென முடிவு எடுக்க முடியாமல் தடுமாறி வருவதாக சொல்லப்படுகிறது. அதிமுக மற்றும் நாதகவின் திமுக எதிர்ப்பை தவெக முழுமையாக கையில் எடுத்திருக்கிறது. இதனால் அடுத்த இடைத்தேர்தலுக்குள் நாதக தலைமை சில முக்கிய முடிவுகளை எடுக்கும் என்று கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+