சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"உங்க தங்கச்சிதானே.. கனிமொழிக்கு முதல்வர் பதவி கொடுங்களேன்.. பற்ற வைத்த சீமான்.. கிளம்பிய விவாதம்

கனிமொழிக்கு முதல்வர் பதவி தர வேண்டும் என்று சீமான் பேசியது விவாதத்தை கிளப்பி உள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: கனிமொழிக்கு சுழற்சி முறையில், முதல்வர் பதவியை தர வேண்டும் என்று சீமான் பேசியுள்ளது, இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.. கனிமொழி ஆதரவாளர்களுக்கு இது ஒருபக்கம் உள்ளூர மகிழ்ச்சியை தந்தாலும்கூட, சீமான் சொன்ன கருத்து, சோஷியல் மீடியாவில் பரபரப்பை உண்டுபண்ணி உள்ளது.

சென்னையில் செய்தியாளர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்றைய தினம் பேட்டி தந்திருந்தார்.. வழக்கமாக பாஜகவையும் சேர்த்து சாடும் சீமான், திமுக அரசை மட்டும் கடுமையாக சாடியிருந்தார்.

மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையமே போதுமானதாக இருக்கும் நிலையில் புதிதாக 5 ஆயிரம் ஏக்கரில் விமான நிலையம் எதற்கு? அதற்கு 4 ஆயிரம் கோடி ஒப்பந்தம் போட்டால் கமிஷன் கிடைக்கும் என்பதற்காகவே அந்த திட்டத்தை கொண்டு வருகிறார்கள் என்று குற்றம் சாட்டினார். தொடர்ந்து சீமான் பேசியது இதுதான்:

கருணாநிதி

கருணாநிதி

"எழுதாத பேனாவை வைப்பது பகுத்தறிவு என்றால், எழுதுகிற பேனாவை ஆயுத பூஜையில் வைத்து கும்பிட்டால் அது மூடப்பழக்கமா? இதுக்கு பதில் இருக்கா? கடலுக்குள்ளே போய் எதுக்கு பேனா வைக்கறீங்க? ஒவ்வொரு தலைவருக்கும் ஒவ்வொன்று வைப்பீர்களா? காமராஜர், கக்கன், முத்துராமலிங்க தேவர், வேலுநாச்சியார், மருதுபாண்டியன், பூலித்தேவன், இவர்களை எல்லாரையும் விட தியாகமும், தீரமும் இவர்கள் செய்துவிட்டார்களா? எதுக்கு இந்த தண்ட செலவு? பள்ளிக்கூடம் கட்ட காசில்லை என்று சொல்லி, மக்களிடம் பிச்சை எடுத்துட்டு இருக்கீங்க.. இத்தனை கோடி சொலவு செய்து இந்த பேனாவால் நன்மை என்ன?

 1000 ரூபாய்

1000 ரூபாய்

வயது முதிர்ந்த, உழைக்கும் திறனற்ற முதியோர்களுக்கு ஊக்கத்தொகையை கொடுக்காத நீங்கள், கல்லூரி படிக்க போகிற என் தங்கச்சிகளுக்கு 1000 ரூபாய் எதுக்கு தர்றீங்க?அவங்க உங்களை கேட்டாங்களா? ஏனென்றால், அந்த முதியோர்கள் வாக்கு செலுத்தும் திறனில் இல்லை.. இவர்கள் வாக்கு செலுத்தும் திறனில் இருக்கிறார்கள்.. 916 கோடியாமே.. அவ்வளவு பணம் இருந்தால், இங்கே இருக்கிற பள்ளிக்கூடங்களை சீரமைத்துவிடலாமே? வாக்குகளை நிறைவேற்றி விட்டோம் என்று இவங்களே சொல்லிக்கிறாங்க.. அதை மக்கள்தான் சொல்லணும்.. இந்தியாவிலேயே நான்தான் நம்பர் 1 என்கிறார்கள்.. நாங்களும் சொல்றோம், சாராய வியாபாரத்தில் நீங்கள்தான் நம்பர்1, சட்டம் ஒழுங்கு சீர்கேட்டில் நீங்கதளான் நம்பர் 1, ஊழல் லஞ்சத்தில் இந்தியாவிலேயே நீங்கள்தான் நம்பர் 1 இப்படி சொல்றோம்..

 கனிமொழி

கனிமொழி

இனிமேல், காலையில் வாக்கிங் வரும்போது, அங்கே வாசலில் கூட்டிக்கிட்டு இருக்கிற பெண்ணை கூப்பிட்டு, எழுதி தரும் வசனத்தை எல்லாம் பேச வைக்கக்கூடாது.. மகளிர் தலைநிமிர மாநிலம் உயரும் என்கிறார்கள்.. சரி வரவேற்கிறேன்.. நீங்கள் மகளிருக்கு தந்த உயர்வு என்ன? எத்தனை அமைச்சர் இருக்காங்க.. வெறும் 2 பேர்தான் இருக்காங்க.. பாராளுமன்றத்தில் எத்தனை சீட் தந்தீங்க? வாரிசு கட்டாயத்தின் விருப்பமாக இருக்கும் நீங்கள், கனிமொழிக்கு முதல்வருக்கு பதவியை தாங்களேன்.. உங்க குடும்பத்திலேயே ஒருத்தருக்கு தானே தர போறீங்க.. மகளிர் நிமிரட்டும், மாநிலம் உயரட்டுமே.. நான் நினைக்கிறேன், ஸ்டாலினை விட தகுதியானவர் கனிமொழிதான் என்று.. இரண்டரை வருடம் ஆட்சியை கனிமொழிகிட்ட தாங்களேன், சுழற்சி முறையில் நீங்க இரண்டரை வருஷம், அவங்க இரண்டரை வருஷம் ஆளுங்களேன்.. ஒரு பெண்ணுக்கு முன்னுரிமை தரட்டும் என்று வரலாறு உங்களை பேசட்டுமே.. உங்க தங்கச்சிதானே.. நீங்க அவங்களை முதல்வராக நியமித்தால், யார் உங்களை எதிர்க்க போறாங்க?" என்று கூறியிருந்தார்.

 பற்ற வைத்த சீமான்

பற்ற வைத்த சீமான்

போகிற போக்கில் சீமான் பற்ற வைத்த இந்த நெருப்பானது, இரு வேறு கருத்துக்களுடன் இணையத்தில் வட்டமடித்து கொண்டிருக்கிறது.. ஒருசாரார் இதனை எதிர்த்தும், மறுசாரார் இதனை வரவேற்றும் கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.. திமுக தரப்பிலேயே உள்ள சிலர் இந்த பேச்சை வைரலாக்கி வருகிறார்கள்.. மேலும் பலர், சீமானையே திட்டி தீர்த்து வருகிறார்கள்.. அந்தவகையில், சீமான் கருத்துக்கு ஆதரவும் கிடைத்துள்ளது.. நல்ல யோசனை.. கலைஞர் இருந்தபோதுகூட குறிப்பிட்ட சதவீதம் அளவுக்குதான் மகளிருக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.. கனிமொழிக்கு மகளிர் துறை ஒதுக்கியதில் இருந்துதான், அந்த துறை மிளிர ஆரம்பித்தது..

 முதிர்ச்சி பக்குவம்

முதிர்ச்சி பக்குவம்

கனிமொழிக்கு பொறுப்பை தந்து, குடிவாரி கணக்கெடுப்பு எடுத்து அதன்படி ஒதுக்கீடுகள் வழங்கி, அந்த ஒதுக்கீடு சரியாக செய்யப்படுள்ளதா சரியாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க செய்தால் சிறப்பாக இருக்கும்.. கனிமொழி நெளிவு சுளிவு அறிந்தவர்.. டெல்லி காங்கிரஸ் தவிர, மேலிட பாஜக தலைவர்களின் நன்மதிப்பையும் நேரடியாகவே பெற்றவர்.. அகில இந்திய அளவில் அனைத்து தலைவர்களிடம் அன்பாக பழக கூடியவர்.. முதிர்ச்சி பக்குவம் நிறைந்த கனிமொழிக்கு, முதல்வர் பதவி 100 சதவீதம் பொருத்தமானது.. ஆனால், மதுவிலக்கை, கனிமொழியாவது அமல்படுத்துவாரா என்பது சந்தேகம்.. ஒருவேளை அமல்படுத்த நேர்ந்தால், பல பெண்களின் கயிற்றில் தாலி இறங்காமல் பார்த்து கொள்ளும் அக்கறையை கனிமொழி நிறைய எடுத்து கொள்வார்.. எனவே, ஸ்டாலினை விட கனிமொழி தான் தகுதியானவர் கனிமொழி அவர்கள் முதலமைச்சராக பதவி ஏற்க வேண்டும் இல்லையென்றால் நாம் தமிழர் கட்சியிடம் அரசாங்கத்தை ஒப்படைக்க வேண்டும் என்று ஆதரவு கருத்துக்கள் குவிகின்றன.

 கிழித்தெடுத்தனர்

கிழித்தெடுத்தனர்

மற்றொருபக்கம், சீமானை கிழித்தெடுத்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.. நீங்கள் கட்சி ஆரம்பித்து 10 வருடமாகிறது.. ஒரு தொகுதியில்கூட இதுவரை வெற்றி பெற்றதில்லை.. அடுத்த கட்சி பற்றி உங்களுக்கு என்ன கவலை? உதயநிதிக்கு அமைச்சர் பதவி தந்ததையே பொறுக்க முடியாமல் விமர்சனம் செய்து வருகிறீர்கள்.. இன்பநிதி ஆட்சியில் வாழ வேண்டுமா மக்களே? என்று மேடையில் முழங்கியபோதே, அந்த காழ்ப்புணர்ச்சி தெரிந்துவிட்டது.. இப்போது தேவையில்லாமல் கனிமொழிக்கு பதவி என்று கொளுத்தி போட காரணம் என்ன? இது உட்கட்சி விவகாரம்.

 காளியம்மாள்

காளியம்மாள்

இது கனிமொழி மீதான அக்கறை கிடையாது, ஒரே குடும்பத்துக்குள் பிரச்சனை ஏற்படுத்தும் முயற்சி.. இது எந்தமாதிரியான நிலைப்பாடு? சீமான் பின்னால் நிற்பவர்கள்தான் இதை முதலில் உணர வேண்டும்.. முக்கியமாக சீமானுக்கு போடும் ஒவ்வோரு வாக்கும் வீன். வாக்குகளை வீணாக்காதீர்.. ஆட்சிக்கு வரும்வரை 50-50 மகளிர் ஒதுக்கீடு என்கிறார்கள், ஆட்சிக்கு வந்ததுமே எல்லாருமே மாறிவிடுகிறார்கள்.. இவ்வளவு அக்கறையா பேசும் சீமான், அவரது கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை, நாம் தமிழர் மகளிர் ஒருவருக்கு விட்டுக்கொடுப்பாரா? காளியம்மாளுக்கு தலைவர் பதவி தர வேண்டியதுதானே?" என்று எதிர்ப்பு கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.

English summary
seeman says dmk should give cm post to kanimozhi and speaks about women importance
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X