Sekarbabu: வந்த சண்டையை விடுவதாக இல்லை.. ஓடுகாலி ** கரூரில் ஏன் ஓடுனீங்க! தவெக மீது சேகர்பாபு கடும் அட்டாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உன்னை போல் கரூரில் 41 பேரை பலிகொண்ட உடன், விமான நிலையத்தில் ஓடு ஓடு ஓடு என்று ஓடிய தலைவன் அல்ல என விஜய்யை முன்னாள் அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார். சட்டமன்றத்தில் ஓடுகாலி முதல்வர் விஜய்யை உதயநிதி ஸ்டாலின் ஓடு ஓடு என ஓடவிட்டார்.. சட்டமன்றத்திலே பதில் சொல்ல தெம்பற்ற, திராணியற்ற, தைரியமற்ற முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சி தலைவருக்கு வாய்ப்பே கொடுக்காமல் பேசி முடித்தார் என்றும் விமர்சித்தார்.

சட்டசபையில் முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து தமிழக முழுக்க இன்று திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர் சேகர்பாபு இந்த போராட்டத்தின் போது தவெகவினரை விமர்சித்து பேசினார். சேகர்பாபு பேசியதாவது:-

Sekarbabu Slams Vijay in DMK Protest Why Did You Run Away From Karur incident

அடிபட்ட புலியாக திமுக

அன்று ஆளுநரை ஓடவிட்டார் மு.க ஸ்டாலின். இன்று ஓடு ஓடு என்று மேடையில் பிலிம் காட்டிக்கொண்டு இருந்த முதல்வர் விஜய்யை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஓடு ஓடு என ஓடவிட்டுள்ளார். ஓடுகாலி நாயே.. உனக்கு சட்டமன்றம் பாதுகாப்பாக இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேச வேண்டாம். அடிபட்ட புலியாக திமுக இன்று களத்திலே நின்று கொண்டு இருக்கிறது. நிச்சயம் ஒரு நாள் வட்டியும் முதலும் சேர்த்து ஓடுகாலி நாய்களுக்கு ஒப்படைப்போம். ஓடுகாலி நாய்களை இந்த நாடை விட்டு ஓடு ஓடு என விரட்டுவோம்.

உன்னை போல் கரூரில் 41 பேரை பலிகொண்ட உடன், விமான நிலையத்தில் ஓடு ஓடு ஓடு என்று ஓடிய தலைவன் அல்ல. சட்டமன்றத்தில் ஓடுகாலி முதல்வர் விஜய்யை எங்கள் அண்ணன், வருங்கால தமிழகம் உதயநிதி ஸ்டாலின் ஓடு ஓடு என ஓடவிட்டார். சட்டமன்றத்திலே ஒரு நிகழ்வின் போது இந்த டவுசர் காக்கி நிர்மல்குமார் கரூர் கம்பெனி என்று சொல்கிறார். உடனடியாக எங்கள் மாமன்னன் எழுந்து நின்று பதில் உரை ஆற்றுகிறார். சங்கி அமைச்சரே என்று சொல்கிறார்.

தெம்பற்ற, திராணியற்ற முதல்வர்

இதற்கு நிர்மல் குமார் இரண்டரை மணி நேரம் கழிப்பறையில் இருந்தவரே என்கிறார். உடனே அதற்கும் எங்கள் தலைவர் எழுந்து நின்று யார் யார் எவ்வளவு நேரம் கழிப்பறையில் இருக்கிறார் என்பதை கணக்கு எடுக்க ஒரு ஒரு அமைச்சரா என்று பதில் கொடுத்தார். இப்படி சட்டமன்றத்திலே ஆணி அடித்தாற்போல் கேட்கின்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல திரானி இல்லாமல் தான் அன்றைக்கு எங்கள் எதிர்க்கட்சி தலைவருக்கு ஒலிபெருக்கியே தரவில்லை.

எங்கள் அண்ணன் மாமன்னன் உதயநிதி கேள்விக்கு பதில் சொல்ல தெம்பற்ற, திராணியற்ற, தைரியமற்ற முதலமைச்சர் விஜய், எங்க சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருக்கு வாய்ப்பே கொடுக்காமல் பேசி முடித்தார். வாய்ப்பு கொடுத்து இருந்தால் தெரியும். சரி, உங்க டவுசர் பாண்டி நிர்மல் குமாரை கேட்கிறேன். நீ தைரியம் உள்ளவன் தானே.. தெம்பு உள்ளவன் தானே.. ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் பிரதிநிதி தானே.. நீ தைரியமாக சிறைக்கு சென்றாயா.. ஓடி ஒளிந்து முன் ஜாமீன் பெற்ற கோளை நீ.. எங்களை பார்த்து மிசாவில் பயந்தவர்கள் என்று எப்படி சொல்ல முடியும்.

வந்த சண்டைய விடுவதில்லை

இன்றைக்கு எங்கள் உணர்வுகளை தொட்டு பார்த்து இருக்கிறாய்.. நாங்கள் எப்போது வீண் சண்டைக்கு போவாதவர்கள்.. வந்த சண்டைகளை விடுவது இல்லை. சிறை கம்பிகளை பார்க்காதவன்.. காவல்துறையின் கைது நடவடிக்கைக்கு ஆளாகாதவன்.. இதுவரை வியர்வையை சிந்தி போராட்டக் களத்தை பார்க்காதவன் மிசாவை பற்றி தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை. என்று பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+