பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு
சென்னை: தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் பொதுக்கூட்டங்களில் உயிரிழக்கும் விவகாரத்தில் பாஜகவுடன் ஒப்பிட்டு செல்வப்பெருந்தகை தவெகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "பாஜகவுடன் எந்தக் கட்சி கூட்டணி அமைத்தாலும் அவர்கள் எல்லாம் மூழ்கும் கப்பலில் ஏறுவதை போலத்தான். இளைஞர்கள், பெண்கள், நடுத்தர வயதினர், முதியவர்கள் உள்பட யாருமே பாஜக கூட்டணியை ஏற்க மாட்டார்கள்.

கட்டுப்பாடுகள்
இது தமிழ்நாட்டு மண்ணுக்கு எதிரான கட்சி. தமிழ்நாடு நீர் பங்கீடு, ஜிஎஸ்டி, மெட்ரோ ரயில் திட்டம் ஆகியவற்றை தடுத்து நிறுத்தியுள்ளனர். இவ்வளவு அநியாயங்களை செய்துவிட்டு உங்கள் கூட்டணிக்கு மக்கள் வாக்களிப்பார்களா. நிதிநிலை அறிக்கையில் தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கு மட்டும் கண் துடைப்புக்காக திட்டங்களை அறிவிப்பார்கள். ஆனால் அதை செயல்படுத்த மாட்டார்கள்.
இங்கு அது கூட இல்லை. எவ்வளவு குட்டி கரணம் அடித்தாலும், எத்தனை அதிமுகவை அழைத்து வந்தாலும் அது தமிழ்நாட்டில் எடுபடாது. அதனால் தான் தமிழகத்தை விட்டுவிட்டனர். அதன் தொடர்ச்சியாக தான் ரவியை மேற்கு வங்கத்துக்கு மாற்றிவிட்டனர். இங்கு திமுக தான் ஆட்சிக்கு வரும் என்று பாஜக மேலிடம் அறியும். எங்களுக்கும் தான் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகள் விதிக்கிறது.
பாஜக கூட பரவாயில்லை
எங்கள் தலைவர் ராகுல் காந்தியை அழைத்து வருவதற்கு பல்வேறு முயற்சிகள் செய்தோம். அவரும் கடந்த மாதம் வரத்தயாராக தான் இருந்தார். எஸ்.ஓ.பி காரணம் காட்டி 15 நாட்களுக்குள் கொடுக்காததால் வாய்ப்பில்லை என கூறிவிட்டனர். அரசு சொல்வதை கேட்க வேண்டும். சட்டத்திற்குட்பட்டு தான் நடக்க வேண்டும். அவரவர் தங்களை சுயபரிசோதனை செய்ய வேண்டும்.
அதிமுக, திமுக, பாஜக கட்சிகள் நடத்தும் மாநாடு, பொதுக் கூட்டங்களில் உயிரிழப்பு இல்லை. இப்போது அரசை இந்திய தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டில் எடுத்துவிட்டது. அவர்களின் கட்டுப்பாட்டில் தான் காவல்துறை மற்றும் அதிகாரிகள் உள்ளனர். இங்கு உயிர்பலி இருக்கக் கூடாது என்பதுதான் பிரச்சனை. நம்முடைய தமிழ்நாட்டில் மக்கள் ஒவ்வொருவரின் உயிருக்கு ஆபத்து வரக்கூடாது என்கிற பார்வையை புரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.
-
கட்டம் கட்டிய திமுக.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை.. கலங்கி வீடியோ வெளியிட்ட தவாக வேல்முருகன் -
தேதி குறிச்சாச்சு.. மேடையேறும் விஜய்.. மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
காத்திருந்து காத்திருந்து! புதுவையில் தவெகவுடன் இணைந்த கூட்டணி! அப்போ அந்த 2 வேட்பாளர்கள் நிலை? -
விஜய்யை பார்க்க சென்று விபத்தில் சிக்கிய தஞ்சை கல்லூரி மாணவர் விக்னேஷ் 19 நாள் கழித்து உயிரிழப்பு -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
தவெக மாய உலகத்தில் இருக்கிறது.. கிராமப்புறங்களில் காத்து வாங்கும் கட்சி! ஷாக் ரிப்போர்ட் -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
2026 தேர்தலில் புதிய சக்திகள்! 5 முனை போட்டிக்கு வழிவகுத்த ஜூனியர்ஸ்! யாருக்கு சாதகம்? பாதகம்?












Click it and Unblock the Notifications