இனி இதுதான் எதிர்காலமே.. சென்னைக்கு வந்த செமி கண்டக்டர் முதலீடு.. சொல்லி அடித்த ஸ்டாலின்!
சென்னை: செமி கண்டக்டர் துறையில் மிக முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகி இருக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த கேஎல்ஏ கார்ப்பரேஷன் நிறுவனம் சென்னையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை அமைக்க உள்ளது. இதற்காக இந்த நிறுவனம் ரூ.3 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளதாகவும், இதனால் 3 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் செமி கண்டக்டர் மிக முக்கியமான துறையாக உருவெடுத்துள்ளது. அதிநவீனக் கருவிகள் தொடங்கி எலக்டிரிக் கார்கள் வரை அனைத்திற்குமே செமி கண்டக்டர் அத்தியாவசியத் தேவையாக இருக்கிறது. இப்போது இந்தியா மட்டுமின்றி உலகமே செமி கண்டக்டர்களுக்கு சீனாவையே நம்பி இருக்கிறது. அதை மாற்ற இந்தியா முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதற்கேற்ப பட்ஜெட்டில் செமி கண்டக்டர் துறைக்கு ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது எப்படி நடைமுறைப்படுத்தப்படும் என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. இருப்பினும் செமி கண்டக்டர் துறையில் ஒவ்வொரு மாநிலமும் முதலீடுகளை ஈர்க்க தொடங்கி இருக்கிறது. குறிப்பாக குஜராத் மாநிலத்தில் அதிகளவில் செமி கண்டக்டர் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
அதேபோல் கோவைக்கு வர வேண்டிய செமி கண்டக்டர் முதலீடு, உத்தரப் பிரதேசத்திற்கு கடைசி நேரத்தில் மாறியது. தமிழ்நாட்டில் ஐடி துறை, உற்பத்தி துறை மற்றும் ஏஐ துறையில் அதிகளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு வந்தாலும், செமி கண்டக்டர் துறையில் எப்போது முதலீடுகள் ஈர்க்கப்படும் என்பதே இளைஞர்களின் கேள்வியாக உள்ளது.
ஏனென்றால் செமி கண்டக்டர் துறையில் பெங்களூரில் அதிக வேலைவாய்ப்புகள் அமைந்திருக்கிறது. சென்னையை பொறுத்தவரை மைக்ரோ சிப், சான் டிஸ்க், குவால்காம் உள்ளிட்ட சில நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. இந்த நிலையில் செமி கண்டக்டர் துறையில் மிக முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.
அமெரிக்காவைச் செர்ந்த கேஎல்ஏ கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் சென்னையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை அமைக்க உள்ளது. இந்த நிறுவனம் தரப்பில் ரூ.3 ஆயிரம் முதலீடு செய்ய உள்ளதாகவும், இதனால் 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் செமி கண்டக்டர் துறையின் மிக முக்கிய முதலீடாக இது பார்க்கப்படுகிறது.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா!












Click it and Unblock the Notifications