அப்பார்ட்மென்ட்டில் பிரபல நடிகையின் அசிங்கம்.. வீட்டு பணிப்பெண்ணை அந்த கோலத்தில் வீடியோ? என்னாச்சு
சென்னை: பிரபல நடிகையும், அவரது கணவரும் தன்னை துன்புறுத்தியதாகவும், நிர்வாண வீடியோ எடுக்க முயன்றதாகவும், சம்பளம் தராமல் ஏமாற்றியதாகவும் 22 வயது பணிப்பெண் ஒருவர் பரபரப்பு புகார் தெரிவித்திருப்பது, பெரும் அதிர்ச்சியை சினிமா வட்டாரங்களில் ஏற்படுத்தி வருகிறது.. பணிப்பெண் தந்துள்ள இந்த புகாரின்பேரில் போலீசாரும் விசாரணையை துவங்கியிருக்கிறார்கள். யாரிந்த நடிகை? யாரிந்த பணிப்பெண்?
தெலுங்கு, தமிழ் மொழிகளில் நடித்திருக்கும் டிம்பிள் ஹயாத்தி மீது அவரது வீட்டுப் பணிப்பெண் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

ஆந்திராவை சேர்ந்த நடிகை டிம்பிள் ஹயாதி.. இவர் 2017ல் வெளியான 'கல்ஃப்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்... தமிழில் பிரபு தேவா நடிப்பில் வெளியான "தேவி 2", விஷால் நடிப்பில் வெளியான "வீரமே வாகை சூடும்" படங்களில் நடித்துள்ளார்.
பிரபல நடிகை டிம்பிள் ஹயாதி
தன்னுடைய வீட்டு பணிப்பெண்ணை நிர்வாண வீடியோ எடுத்ததாகவும், அவரை அடித்து துன்புறுத்தியதாகவும் புகார் நடிகை டிம்பிள் மீது புகார் எழுந்தள்ளது.. இந்த குற்றச்சாட்டை தெரிவித்திருப்பது, ஒடிசாவை சேர்ந்த நடிகையின் 22 வயது பிரியங்கா பீபர் என்கிற பணிப்பெண் ஆவார்.
நடிகை டிம்பிளும், அவரது கணவரும் தன்னை துன்புறுத்தியதாகவும், நிர்வாண வீடியோ எடுக்க முயன்றதாகவும், சம்பளம் தராமல் ஏமாற்றியதாகவும் பாதிக்கப்பட்ட பிரியங்கா என்ற பெண் புகார் தெரிவித்துள்ளார்.
ஃபிலிம் நகர் காவல் நிலையத்தில் வீட்டுப்பணிபெண் பிரியங்கா புகார் ஒன்றை தந்துள்ளார்.. அந்த புகாரில், "ஒடிசாவிலிருந்து கடந்த செப்டம்பர் 22-ம் தேதி ஹைதராபாத்துக்கு வந்துள்ளேன்.. ஸ்ரீ சாய் கவுடா சர்வீஸ் என்ற நிறுவனம் மூலம் அபார்ட்மென்ட் ஒன்றில் வீட்டு பணிப்பெண்ணாக வேலைக்கு சேர்ந்தேன்.. அன்று மாலையே வெஸ்ட்வுட் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நடிகை டிம்பிள் ஹயாத்தியின் வீட்டில் பணிக்கு சேர்க்கப்பட்டேன்..
நாயால் வந்த சண்டை
கடந்த செப்டம்பர் 29ம் தேதியன்று அந்த வீட்டில் இருந்த நாய் குறைத்துக்கொண்டே இருந்தது.. இதனால் வீட்டில் சண்டை வந்தது.. அப்போது நடிகை டிம்பிளும் அவரது கணவர் டேவிட்டும் என்னை தகாத வார்த்தைகளால் திட்டினார்கள்..
என்னுடைய பெற்றோரை கொன்று விடுவேன் என்று மிரட்டினார்கள்.. அவர்கள் என்னை திட்டுவதை என்னுடைய செல்போனில் ரெக்கார்ட் செய்ய முயன்றேன்.. ஆனால், அதற்குள் டேவிட் என்னுடைய செல்போனை பிடுங்கி கீழே போட்டு உடைத்து, என்னையும் கடுமையாக தாக்கிவிட்டார்.
செல்போனை தரையில் அடித்து துண்டு துண்டாக உடைத்தார். அவர் என்னைத் தாக்க முயற்சித்தார். நான் உடனடியாக அங்கிருந்து தப்பித்தபோது, எனது உடைகளும் கிழிந்துபோனது..
பிரியங்காவுக்கு அச்சுறுத்தல்
டிம்பிள் ஹயாதி மற்றும் அவரது கணவர் டேவிட் ஆகியோர் சேர்ந்து என்னை அடித்து துன்புறுத்தினார்கள்.. நிர்வாண வீடியோ எடுக்க முயற்சித்தனர்.. டிம்பிள் ஹயாத்தியும் அவரது கணவர் டேவிட்டும் எனக்கு போதுமான அளவுக்கு சாப்பாடு தரவில்லை.. தகாத வார்த்தைகளால் என்னை திட்டி துன்புறுத்தினார்கள்..
ஒரு முறை, "என் ஷூவை விட உன் வாழ்க்கை பெரிதல்ல.." என்று நடிகை என்னிடம் சொன்னார்.. ஒவ்வொரு முறையும் எனக்கு வேலைகளை செய்ய சொல்லும்போதும் தம்பதி இருவரும் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தினார்கள்..
இதையடுத்து, பணிப்பெண் பிரியங்காவுக்கு அச்சுறுத்தல்களை விடுத்ததாக நடிகை மீது முதல் தகவல் அறிக்கையில் (FIR) தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை மீது வழக்கு பதிவு
இதுகுறித்து ஃபிலிம் நகர் ஆய்வாளர் எஸ். சந்தோஷம் சொல்லும்போது, "நாங்கள் வீட்டுப் பணிப்பெண் பிரியங்காவின் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளோம். விசாரணைக்கு ஆஜராகும்படி குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றார்.
இதையடுத்து, இந்தப் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த ஃபிலிம் நகர் போலீசார், நடிகை டிம்பிள் ஹயாத்தி மற்றும் அவரது கணவர் மீது இந்திய நியாய சன்ஹிதாவின் (Bharatiya Nyaya Sanhita) பிரிவுகள் 74 (பெண்ணின் மாண்பைக் குலைக்கும் நோக்கத்துடன் தாக்குதல் அல்லது குற்றவியல் சக்தி), 79 (பெண்ணின் மாண்புக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் நோக்குடன் சொல், சைகை அல்லது செயல்), 351(2) (குற்றவியல் மிரட்டல்) மற்றும் 324(2) (தீங்கிழைத்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகிறார்கள்.
நடிகை யார் தெரியுமா?
இதனிடையே, நீதிமன்ற நடவடிக்கைகள் தொடரும் வரை இந்த வழக்கு ஃபிலிம் நகர் காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை டிம்பிள் ஹயாதி, கடந்த 2023-ல் ஐபிஎஸ் அதிகாரியின் கார் மீது செருப்பு வீசிய சர்ச்சையிலும் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications