பந்தயம் கட்டுகிறேன்.. முடிந்தால் ஜெயித்துப்பார்.. அமைச்சர் எம்.ஆர்.வி.க்கு செந்தில்பாலாஜி சவால்..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூர் மாவட்டத்தில் முடிந்தால் ஒரு தொகுதியையாவது ஜெயித்துப் பார் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு செந்தில்பாலாஜி பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் தலா ஐம்பதாயிரம் வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றிபெறுவது உறுதி என அவர் கூறியுள்ளார்.

அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை போல் வீரவசனம் பேசிவிட்டு ஓடி ஒளியும் ஆள் தாம் இல்லை என செந்தில்பாலாஜி கூறியிருக்கிறார்.

நீயா? நானா?

நீயா? நானா?

கரூர் மாவட்ட அரசியலை பொறுத்தவரை திமுக, அதிமுக என்ற போட்டியை தாண்டி எம்.ஆர்.விஜயபாஸ்கரா செந்தில்பாலாஜியா என்ற போட்டி தான் மிகுதியாக உள்ளது. அரசியலில் ஒருவரை ஒருவர் வீழ்த்துவதற்காக இருவரும் கங்கணம் கட்டிக் கொண்டு திரிகின்றனர். வரும் தேர்தலில் செந்தில்பாலாஜி போட்டியிட முடியாத வகையில் அதற்கான காய் நகர்த்தலை தொடங்கியிருக்கிறார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

செந்தில்பாலாஜி சவால்

செந்தில்பாலாஜி சவால்

இந்நிலையில் வரும் தேர்தலில் கரூர் மாவட்டத்தில் அதிமுக படு தோல்வியை சந்திக்கும் என்றும் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் குறைந்தது 50,000 வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறுவது உறுதி எனவும் சவால் விடுத்திருக்கிறார் செந்தில்பாலாஜி. இதனை பந்தயமாகவே வைத்துக்கொள்வதாகவும் தேர்தல் முடிவின் போது தாம் கூறியது உண்மையா இல்லையா என தெரியவரும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஓடி ஒளியும்

ஓடி ஒளியும்

அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் தாம் போட்டியிட்ட போது டெபாசிட் பெற்றால் அரசியலை விட்டு விலகுவதாக வீர வசனம் பேசியவர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் என்றும் அவரை போல் வசனம் பேசிவிட்டு பிறகு ஓடி ஒளியும் பழக்கம் தமக்கு இல்லை எனவும் தெரிவித்திருக்கிறார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு நலம் பெற்ற செந்தில்பாலாஜி சிறிது காலம் கட்சி நிகழ்ச்சிகளில் இருந்து ஒதுங்கி இருந்து வந்த நிலையில் இப்போது மீண்டும் தீவிரமாக அதை முன்னெடுத்து வருகிறார்.

தேர்தல் பணி

தேர்தல் பணி

இதனிடையே கரூர் தொகுதியை மீண்டும் கைப்பற்றும் நோக்கில் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கி கவனித்து வருகிறார் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். எம்.ஆர்.வி.பாய்ஸ் என்ற பெயரில் இளைஞர்கள் குழு ஒன்றை அவர் பணியமர்த்தி மக்களின் நிறை குறைகளை அறிந்து அதனை நிவர்த்தி செய்வது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+