“பச்சையப்பபா’ஸ் பிச்சை போட்ட உயிர் வேணாம்” - ஆடியோ வெளியிட்டு தற்கொலை செய்த மாணவன்
சென்னை: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கேலி செய்து அடித்துத் துன்புறுத்தியதாகவும், அதனால் அவமானம் தாங்காத மாநிலக் கல்லூரி மாணவர் ஒருவர் பச்சையப்பாஸ் கல்லூரி மாணவர்கள் பிச்சை போட்ட உயிர் தேவையில்லை என ரயில்முன் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
ராணிப்பேட்டை மாவட்டம் குருவராஜப்பேட்டை அருகே பஜார் தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மணிவன்னனின் மகனான 22 வயது இளைஞரான குமார், சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்களை வரலாறு முதலாமாண்டு படித்து வந்தார். நேற்று காலை வழக்கம்போல் ரயில் மூலம் கல்லூரிக்குச் சென்ற குமார் பிற்பகலில் மீண்டும் சென்னையிலிருந்து புறநகர் ரயில் மூலம் வீட்டுக்குத் திரும்பி சென்று கொண்டிருந்தார்.
சென்னையிலிருந்து புறபட்ட ரயில் சிறிது நேரத்துக்கு பிறகு திருநின்றாவூர் ரயில் நிலையத்தில் சென்றபோது, அங்கிருந்த பச்சையப்பா கல்லூரியைச் சேர்ந்த சில மாணவர்கள் ஏறியுள்ளார். ரயிலில் ஏறியதும் குமார் மற்றும் அவரது நண்பரான நவீன் இருப்பதைக் கண்டு அவர்கள் இருக்கும் பெட்டிக்குச் சென்றுள்ளனர். ஏற்கனவே பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் சிலருக்கும், குமார் மற்றும் நவீன் ஆகியோருக்கும் ரூட்டு தல எனப்படும் ரயிலில் யார் பெரிய ஆள் என்ற பிரச்சனை இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

ரூட்டு தல பிரச்சினை
இந்தநிலையில் குமார் தனியாக பயணம் செய்வதைக் கண்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் குமார் மற்றும் நவீன ஆகிய இருவரையும் தனியே அழைத்துச் சென்று அடித்து உதைத்ததோடு கேலி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது நவீன் ரயிலில் இருந்து தாவி குதித்து வேறொரு ரயிலில் ஏறி சென்ற நிலையில் மாணவன் குமாரை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பிடித்து வைத்துக்கொண்டதோடு, குமாரின் நண்பர்களுக்கு உங்க ஆள் எங்களிடம் சிக்கிகிட்டான், அவனை வந்து முடிஞ்சா காப்பாத்தி கூட்டிட்டு போங்க என ஆடியோ ஒன்றையும் அனுப்பி, குமாரை அடித்து விரட்டியுள்ளனர்.

அவமானத்தால் மாணவன் தற்கொலை
அடித்து கேலி கிண்டல் செய்ததோடு இதுகுறித்து தனது நண்பர்களுக்கும் வாய்ஸ் மெசேஜ் அனுப்பியதால் மன உளைச்சலுக்கு ஆளான குமார் , தனது நண்பர்களுக்கு ஆடியோ ஒன்றை அனுப்பினார். அதில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போட்ட பிச்சையில் நான் உயிர் வாழ முடியாது நான் உயிரை மாய்த்துக் கொள்வேன் எனக் கூறியதோடு பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

மாணவர்கள் போராட்டம்
மாணவர் குமார் உயிரிழந்த தகவல் பரவியதை அடுத்து மருத்துவமனைக்கு முன்னாள் மாநில கல்லூரி மாணவர்களும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூடி, குமாரின் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் எனக் கோரி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட ரோடு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து வந்த மாவட்ட எஸ்.பி. சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் மாணவர்கள் மற்றும் குமாரின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து, பெற்றோர் உடலை வாங்கிச் சென்றனர்.

மீண்டும் ரூட்டு தல விவகாரம்
மேலும் தற்கொலை செய்துகொண்ட மாணவர் குமார் அனுப்பிய ஆடியோ மற்றும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு அனுப்பப்பட்ட ஆடியோவை கைப்பற்றிய உள்ள காவல்துறை அதிகாரிகள் குமாரை கிண்டல் செய்ததாக கூறப்படும் மாணவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை பேருந்துகள் மற்றும் ரயில்களில் அடாவடி செய்யும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்த நிலையில் தற்போது மாணவர் ஒருவர் ரூட்டு தல பிரச்சனையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது
-
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications