Silver Price: 4 நாட்களில் கிலோவுக்கு ரூ. 1.25 லட்சம் சரிவு! வெள்ளி விலைக்கு என்னாச்சு!
சென்னை: வெள்ளியின் விலை தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. இது எதற்காக என தெரிந்து கொள்வோம். சந்தையில் பதற்றமான சூழல், அமெரிக்க டாலர் வலுப்பெறுதல் உள்ளிட்ட காரணங்களால் இதன் விலை குறைந்து வருவதாக சொல்லப்படுகிறது.
சென்னையில் தங்கம் விலைதான் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்றால் வெள்ளியின் விலையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில் தற்போது தங்கத்தின் விலை வீழ்ந்துள்ள நிலையில் வெள்ளியின் விலையும் வீழ்ச்சி பெற்றுள்ளது.

அந்த வகையில் வெள்ளியின் விலை கடந்த ஜனவரி 30-ஆம் தேதி முதல் சரிந்து கொண்டே வருகிறது. அதாவது ஜனவரி 29ஆம் தேதி ஒரு கிராம் வெள்ளி 425 ஆக இருந்தது. இதையடுத்து 30ஆம் தேதி ஒரு கிராம் 405 ஆக விற்பனை செய்யப்பட்டது.
அன்றைய தினம் மட்டும் கிலோவுக்கு 20 ஆயிரம் ரூபாய் குறைந்தது. அது போல் ஜனவரி 31 ஆம் தேதியும் வெள்ளியின் விலை ஒரே நாளில் கிலோவுக்கு ரூ 85 ஆயிரம் குறைந்துள்ளது.
நேற்றைய தினம் பிப்ரவரி 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட் விடுமுறை என்பதால் அன்றைய தினம் விலை மாறாமல் ஒரு கிலோ ரூ 3,20,000 -க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதையடுத்து இன்றைய தினம் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 20 ரூபாய் சரிந்து ஒரு கிராம் 300 ரூபாய்க்கும் ஒரு கிலோ 3 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 4 நாட்களில் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ 1.25 லட்சம் குறைந்துள்ளது. இந்த சரிவுக்கு காரணம் அமெரிக்க கடன் குறைவு, வர்த்தகத்தில் பதற்றமான சூழல் உள்ளிட்டவைகளால் வெள்ளியின் விலை குறைந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
2026 தங்கம் வெள்ளி விலை சரியப்போகுது.. இந்த ஜூனில் வெடிக்க போகும் பலூன்? வல்லுநர்கள் கணிப்பு -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வெள்ளியில் முதலீடு செய்ய ஆசையா.. MCX கொண்டு வந்த வரபிரசாதம்.. சிறு முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications