கார்களால் 41.62 கோடி வருவாய் ஈட்டிய சிங்கபெருமாள் கோவில் சரக்கு முனையம்.. தெற்கு ரயில்வே

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கோட்டத்தில் உள்ள சிங்கப்பெருமாள் கோவில் சரக்கு முனையம் தமிழ்நாட்டின் முக்கியமான ரயில் சரக்கு மையங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சரக்கு முனையம் மூலம் 2025-26-ம் நிதியாண்டில் ரூ.41.62 கோடி வருவாய் ஈட்டியிருப்பது தெரியவந்துள்ளது. ஒரக்கடம், மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில், சுங்சுவார்சந்திரம், ஸ்ரீபெரும்புதூர் மகேந்திரா சிட்டி போன்ற தொழிற்பேட்டைகளில் இருந்து சிங்கப்பெருமாள் கோவில் சரக்கு முனையத்திற்கு வாகனங்கள், எலக்ட்ரானிக்ஸ் உதிரி பாகங்கள் அதிக அளவில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் சரக்கு முனையம் என்பது தமிழ்நாட்டின் மிக முக்கியமான ரயில்வே சரக்கு முனையாக திகழ்கிறது.இதன் அருகே . ஒரக்கடம், மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில், சுங்சுவார்சந்திரம், ஸ்ரீபெரும்புதூர் மகேந்திரா சிட்டி போன்ற தொழிற் பேட்டைகள் உள்ளன. இங்கு உற்பத்தி செயயப்படும் வாகனங்கள் மற்றும் எலக்டரானிக்ஸ் பொருட்களை அதிகளவில் விரைவாகக் கையாள்வதற்காகவே , சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் 2021 ஜூன் 4-ந்தேதி தொடங்கப்பட்டது சிங்கப்பெருமாள் கோவில் சரக்கு முனையம்.

Singaperumal Koil Freight Terminal Generated 41 62 Crore in Revenue Southern Railway

இந்த சரக்கு முனையம் வாகனங்களை விரைவாகக் கொண்டு செல்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. சிங்கபெருமாள் கோவில் முனையத்தை பொறுத்தவரை ஹூண்டாய் டோயோடா போன்ற நிறுவனங்கள், தங்கள் கார்களை ரயில் மூலம் அனுப்புகிறார்கள். 2025-26 நிதியாண்டில் 24,910 கார்களை சிங்கபெருமாள் கோவில் முனையத்தில் இருந்து கார் நிறுவனங்க அனுப்பி உள்ளன,


சிங்கபெருமாள்கோவில் சரக்கு முனையத்தில் இருந்து 2025-26 நிதியாண்டில், டி.சி.ஐ. சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் நிறுவனத்திற்காக 2,291 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பருக் நகருக்கு 8 ரேக்குகள் மூலம் 494 டெய்ம்லர் லாரிகள் (பாரத் பென்ஸ்) 255 வேகன்களைக் கொண்ட 8 ரேக்குகள் மூலம் அனுப்பப்பட்டு ரூ.1.88 கோடி வருவாய் ஈட்டியிருக்கிறது தெற்கு ரயில்வே.

2025-26 நிதியாண்டில் 204 ரேக்குகள் மூலம் 24,708 ஹூண்டாய் மற்றும் 202 டொயோட்டா காரக்ள் கொண்டு செல்லப்பட்டு ரூ.39.74 கோடி வருவாய் கிடைத்தது. ஒட்டுமொத்தமாக அந்த 2025-26 நிதியாண்டில் ரூ.41.62 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

நடப்பு 2026-27 நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை, 6 ரேக்குகள் மூலம் 384 டெய்ம்லர் லாரிகள் அனுப்பப்பட்டு ரூ.1.51 கோடி வருவாய் கிடைத்திருப்பதாக புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் மொத்த வருவாயில் 80.3 சதவீதமாகும். மேலும், 35 ரேக்குகள் மூலம் 4,024 ஹூண்டாய் மற்றும் 276 டொயோட்டா கார்கள் அனுப்பப்பட்டு ரூ.7.04 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. நீண்ட தூரப் போக்குவரத்திற்கு ரயில் சிறந்த மாற்று வழியாக செயல்பட்டு, நாட்டின் பொருளாதாரத்தில் இந்திய ரயில்வேயின் பங்களிப்பை வலுப்படுத்துகிறது என்று சென்னை கோட்டம் கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+