"சாமி நான் கட்சியில் சேர வரல".. ”தப்பா எதையாவது போட்டு விட்டுறாதீங்க..” பாடகர் வேல்முருகன் கலகல
சென்னை: தவெக 3ஆம் ஆண்டு தொடக்க விழாவுக்கு சென்னை பனையூர் கட்சி அலுவலகத்திற்கு பாடகர் வேல்முருகன் வருகை தந்தார். அப்போது அங்கிருந்த செய்தியாளர்களை பார்த்து, "சாமி நான் கச்சேரிக்காக வந்திருக்கிறேன், கட்சியில் சேர வரவில்லை" என காமெடியாக பேசியிருந்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் 3-ஆம் ஆண்டு தொடக்க விழா இன்று பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு நாட்டுப்புற பாடகர் வேல்முருகன் வந்திருந்தார்.
பொதுவாக ஒரு கட்சி அலுவலகத்திற்கு மற்ற கட்சி ஆட்களோ, பிரபலங்களோ வந்தால் அவர்கள் கட்சியில் இணைகிறார்கள் என்றுதான் அர்த்தம். இந்த நிலையில் பனையூர் அலுவலகத்திற்கு வேல்முருகன் தனது மகளுடன் வந்தார்.

அப்போது அங்கிருந்த நிருபர்களை பார்த்து சிரித்தார். அவர்கள், உடனே "அண்ணே நீங்க எங்க இங்க" என கேட்பதற்குள், "அய்யோ சாமி நான் கச்சேரி செய்ய வந்திருக்கேன், கட்சியில் சேர வரவில்லை, நீங்கள் (நிருபர்கள்) பாட்டுக்கு எதையாவது போட்டு விட்றாதீங்க" என காமெடியாக சொல்லிவிட்டுச் சென்றார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
"தளபதி தளபதி வாழ்க
நம்ம வெற்றிக் கொடி எப்பொழுதும் வாழ்க.." என்ற பாடலை வேல்முருகன் பாடிய போது திடீரென விஜய் நடனமாடி உற்சாகப்படுத்தினார்.
இந்த நிகழ்வில் வேல்முருகன், விஜய் காலில் விழுந்தார். அப்போது விஜய் உடனே அவரை தூக்கி கட்டி அணைத்து, வேல்முருகன் கன்னத்தை கிள்ளி முத்தம் கொடுத்தார். பின்னர் அறுபடை முருகனின் படத்தை பரிசாக வேல்முருகன், விஜய்க்கு கொடுத்தார்.
விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் சுப்பிரமணியபுரம் படத்தில் மதுர குலுங்க, நாடோடிகள் படத்தில் ஆடுங்கடா, ஆடுகளம் என்ற படத்தில் ஒத்த சொல்லால போன்ற பாடல்களை பாடியுள்ளார்.
இவருக்கு ஜேம்ஸ் வசந்தன்தான், "மதுர குலுங்க.." பாடுவதற்கு வாய்ப்பு கொடுத்தார். அதுதான் இவரது வாழ்க்கையின் திருப்புமுனையாக இருந்தது. இவர் தன்னுடன் படித்த கலா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். மேலும் 2021 ஆம் ஆண்டு மிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை 2 -இல் கலந்து கொண்டார். 2007 ஆம் ஆண்டு முதல் பல்வேறு விருதுகளை வேல்முருகன் வாங்கியுள்ளார்.
அவற்றில் 2010 ஆம் ஆண்டு நாட்டுப்புற நாயகன் விருதை குடியரசுத் தலைவராக இருந்த ஏபிஜே அப்துல் கலாமிடம் இருந்து வாங்கியுள்ளார். மேலும் அசுரன் படத்தில் இடம் பெற்ற "கத்தரிப் பூவழகி" என்ற பாடலுக்காக 2019 ஆம் ஆண்டு சிறந்த அறிமுகப் பின்னணி பாடகருக்கான எடிசன் விருது, 2020 ஆம் ஆண்டு மிர்ச்சி விருதுகள், டி விருதுகளை வேல்முருகன் பெற்றுள்ளார்.
-
Duraimurugan: தவாக வேல்முருகன் விலகியது குறித்த கேள்விக்கு! துரைமுருகனின் face expression-ஐ பாருங்க -
திமுகவால் எப்படி சமூகநீதி அரசாக நடைபோட முடியும்? ஊழலை தோலுரித்து காட்டுவேன்! வேல்முருகன் -
விஜயை வாழ விடுங்க.. திரிஷா என்ன பண்ணுனாங்க? குடும்பம் இருக்கு.. கூல் சுரேஷ் ஆதங்கம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
Velmurugan: அதிமுகவில் 3 சீட்? பாஜக கூட்டணிக்கு செல்லமாட்டேன்! தவாக வேல்முருகன் உறுதி! -
TVK Vs AVK.. விஜய்க்கு எதிராக புதிய கட்சி தொடங்கிய பவர் ஸ்டார்.. ஆரம்பத்திலேயே தடாலடி சவால் -
Aadhav Arjuna: தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தமிழ் வழியில் கல்வி பயின்றவரா? உண்மை என்ன! -
“உண்மை வெளியானால் விஜய் ஆட்டம் முடியும்”! ரசிகர்களே வெறுப்பார்கள்.. கொளுத்தி போட்ட மோகன் ஜி -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
மும்பை பயணம் முடிந்த கையோடு விஜய் எடுத்த முடிவு! புதுவை தவெக வேட்பாளர்கள் பட்டியல் நாளை ரிலீஸ் -
நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. மும்பைக்கு பறந்த விஜய்! பைனான்ஸ் செய்யும் அரசியல் புள்ளியின் வாரிசு -
25 டூ 15.. சர்ரென சரிந்த சப்போர்ட்.. விஜய் கோட்டையில் விரிசல்? தவெக சர்வே சொல்லும் ‘ஷாக்’ ரிப்போர்ட்












Click it and Unblock the Notifications