வீடு வீடாக களமிறங்கிய.. திமுக தலைகள்.. SIR மூலம் அதிமுக, பாஜகவிற்கு ஏற்பட்ட தலைவலி.. செம ட்விஸ்ட்
சென்னை: சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) தொடர்பான களப்பணிகளை விரைவுபடுத்துமாறு திமுக முதல்வர் மு.க. ஸ்டாலின், அக்கட்சியின் வாக்குசாவடிக்குழு உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தப் பணிக்கான காலக்கெடு நெருங்கி வருவதால் இந்த அறிவுறுத்தல் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த பணிகளில் அதிமுக, தவெக பின்தங்கி உள்ள நிலையில் திமுகவின் கை ஓங்கி உள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணிகள் காரணமாக விஜய்க்கு செல்லும் இளம் வாக்காளர்கள் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. ஏனென்றால்.. விஜயின் வாக்காளர்கள் பலரும் 2000க்கு பின் பிறந்தவர்களாக இருக்க வாய்ப்புகள் உள்ளன. 2002-2004 காலகட்டத்தில் நடத்தப்பட்ட SIR பட்டியலில் இவர்களின் பெயர்கள் இருந்திருக்காது.

விஜயின் தமிழக வெற்றிக் கழகம்
இதனால் இப்போது SIR நடக்கும் நிலையில்.. புதிய வாக்காளர்கள் தங்கள் குடியுரிமை மற்றும் வசிப்பிடத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை வழங்க வேண்டும். இதனால் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கடுமையான பாதிப்புகளை சந்திக்கலாம் . தமிழக வெற்றிக் கழக வாக்காளர்கள் பலர் 2000ல் பிறந்தவர்கள் . இதனால் இவர்களின் வாக்குரிமை கடுமையாக பாதிக்கப்படும். பல இளம் தலைமுறையினர் வாக்குகளை இழக்க நேரிடும்.
முக்கியமாக பலர் இதில் சென்னையில் பணியாற்றுகிறார்கள். பலர் சொந்த ஊர்களில் இல்லை. இவர்கள் அதிகாரிகள் சோதனை செய்ய வரும் நேரத்தில் வீட்டில் இல்லையென்றாலும் வாக்குரிமையை இழக்க நேரிடும். 3 முறை அதிகாரிகள் வீட்டிற்கு வருவார்கள். அதை தவறவிடும் பட்சத்தில் இளம் தலைமுறையினர் பலரின் வாக்குகள் பறிபோகும் அபாயங்கள் உள்ளன.
அதிமுக பாதிப்பு
அதே சமயம் திமுக கடுமையான கிரவுண்டு வேலைகளை செய்து வருகிறது. திமுகவினர் பூத் வாரியாக வரும் தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் செல்கின்றனர். . திமுக பூத் ஏஜெண்டுகள், நிர்வாகிகள் BLO அதிகாரிகளுடன் பயணம் செய்து வாக்காளர்கள் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்கின்றனர். ஒருவர் விடாமல் மக்களை சந்தித்து.. எப்படி பார்ம் நிரப்ப வேண்டும், எப்படி கொடுக்க வேண்டும், என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும் என்பதை தீவிரமாக விளக்கி வருகின்றனர்
1 கோடி வாக்குகள் கூட நீக்கப்படலாம்.. என்ற அச்சம் ஆளும் தரப்பிடம் நிலவுகிறது. இதனால் திமுக நிர்வாகிகள் மொத்தமாக களமிறக்கப்பட்டு உள்ளனர். பல மாவட்டங்களிலிருந்தும் வரும் தகவல்கள், திமுக பிரதிநிதிகள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் (BLO) வீடு வீடாகச் சென்று வாக்காளர் சரிபார்ப்பில் ஈடுபடுவதைச் சுட்டிக்காட்டுகின்றன. திமுக நிர்வாகிகள் தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் வீடு வீடாக சென்று பணிகளை செய்கின்றனர். அதோடு மக்களுக்கு விண்ணப்பத்தை நிரப்புவதில் உதவி செய்கின்றனர்.
பாஜக - அதிமுக அப்செட்
இது அதிமுக, பாஜக தரப்பை ஒரு கட்டத்தில் அப்செட்டில் ஆழ்த்தி உள்ளதாம். பீகாரில் இப்படி நடக்கவில்லை. இப்போது SIR நடக்கும் மேற்கு வங்கத்தில்கூட இப்படி நடக்கவில்லை. ஆனால் திமுக மொத்தமாக களமிறங்கிவிட்டது. ஒரு பக்கம் வழக்கும் போட்டுவிட்டு இந்த பணிகளை தீவிரமாகவும் இன்னொரு பக்கம் செய்கிறார்கள்.
2 BLO அதிகாரிகள் போனால் கூடவே 4 திமுக நிர்வாகிகள் மக்களுக்கு உதவ நிற்கிறார்கள். ஆனால் பாஜக, அதிமுக நிர்வாகிகளைத்தான் காணவே இல்லை. திமுக இந்த பணிகளை மொத்தமாக கண்ட்ரோல் எடுத்துவிட்டது என்று அதிமுக, பாஜக தலைகள் பலர் புலம்ப தொடங்கி விட்டார்களாம்.
ஸ்டாலின் உத்தரவு
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) தொடர்பான களப்பணிகளை விரைவுபடுத்துமாறு திமுக முதல்வர் மு.க. ஸ்டாலின், திமுகவின் வாக்குசாவடிக்குழு உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். வாக்காளர் சரிபார்ப்பு செயல்முறையை முடிக்க இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில், வாக்குச்சாவடிக்குழு உறுப்பினர்கள் எந்த விதமான சுணக்கமும் இல்லாமல் செயல்பட வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தினார். ஒவ்வொரு சாவடியையும் சென்றடைந்து, வாக்காளர் படிவங்களைப் பூர்த்தி செய்ய மக்களுக்கு உதவ வேண்டும் என்றும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கும் (BLO) வாக்காளர்களுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
"வழக்கமாக சாவடிக்குழு உறுப்பினர்களிடம் தேர்தல் வெற்றியை உறுதி செய்யும் பொறுப்பு ஒப்படைக்கப்படும். ஆனால், இந்த முறை, மக்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமையைப் பெறுவதை உறுதிசெய்வது கூடுதல் பொறுப்பாகும்" என்று ஸ்டாலின் கூறினார். வாக்காளர் பதிவு படிவத்தை எப்படி நிரப்புவது என்று சரியாகத் தெரியாதவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியும், கேரளாவில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளும் வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்த்த நிலையில், தமிழகத்தில் எதிர்க்கட்சி அப்படி செயல்படவில்லை என்று ஸ்டாலின் அதிமுகவை மறைமுகமாகச் சாடினார். இந்த நிலை தொடர்ந்தால், அந்தக் கட்சி ஒரு எதிர்க்கட்சியாக தோல்வியடைவது மட்டுமல்லாமல், ஒரு சிறிய கட்சியாகவும் சுருங்கிவிடும்" என்று அவர் கடுமையாக விமர்சித்தார்.
அதிமுக தனது அமைப்பை டெல்லிக்கு எடுத்துச் சென்று, தன்னை அடகு வைத்து, வாக்காளர் பட்டியல் திருத்தத்தை ஆதரிப்பதற்கான அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டதாக ஸ்டாலின் குற்றம் சாட்டினார். இதற்கு மாறாக, திமுக உச்ச நீதிமன்றத்தில் இந்த நடவடிக்கையை எதிர்த்துப் போராடியதை அவர் சுட்டிக்காட்டினார். உச்ச நீதிமன்றத்தில் இதை ஆதரித்த அதிமுக, மக்களை எதிர்கொள்ள துணிவில்லாமல் குறுக்குவழியைத் தேர்ந்தெடுத்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications