1 கோடி வாக்குகள் கூட நீக்கப்படலாம்! களமிறங்கிய SIR அதிகாரிகள்! தெருவிற்கு தெரு ஆட்களை அனுப்பிய திமுக
சென்னை: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில், தங்கள் ஆதரவு வாக்காளர்கள், பொதுமக்களின் வாக்குகள் SIR சரிபார்ப்புச் செயல்பாட்டின்போது நீக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய ஆளும் திமுக தலைவர்கள் களமிறங்கியுள்ளனர்.
1 கோடி வாக்குகள் கூட நீக்கப்படலாம்.. என்ற அச்சம் ஆளும் தரப்பிடம் நிலவுகிறது. இதனால் திமுக நிர்வாகிகள் மொத்தமாக களமிறக்கப்பட்டு உள்ளனர். பல மாவட்டங்களிலிருந்தும் வரும் தகவல்கள், திமுக பிரதிநிதிகள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் (BLO) வீடு வீடாகச் சென்று வாக்காளர் சரிபார்ப்பில் ஈடுபடுவதைச் சுட்டிக்காட்டுகின்றன. திமுக நிர்வாகிகள் தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் வீடு வீடாக சென்று பணிகளை செய்கின்றனர். அதோடு மக்களுக்கு விண்ணப்பத்தை நிரப்புவதில் உதவி செய்கின்றனர்.

SIR பணிகள் தீவிரம்
திமுக நிர்வாகிகள் BLO வருகைகளைக் கண்காணித்தல், வாக்காளர் பெயர்களைச் சரிபார்த்தல் மற்றும் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதைத் தடுக்க ஆவணங்களைச் சரிசெய்ய மக்களுக்கு உதவுதல் போன்ற செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதற்கிடையில், எதிர்க்கட்சிகள் வெவ்வேறு அளவிலான பங்களிப்பைக் காட்டுகின்றன. சிறப்பு திருத்தச் செயல்பாட்டில் அதிமுகவின் களப்பணிகள் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது. அதிமுக சார்பாக பெரிய அளவில் களத்தில் ஆட்கள் இல்லை. ஒரு சில வார்டு அளவிலான தலைவர்கள் மட்டுமே சரிபார்ப்பு முயற்சிகளில் பங்கேற்பதாகக் கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகம் எங்கே?
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) இதுவரை களமட்ட நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. விஜய்க்கு ஆதரவாக இருக்கும் 2கே வாக்காளர்கள் அதிகம் பாதிக்கப்படலாம். ஆனால் விஜய் இதை கண்டுகொள்ளவே இல்லை. வெறும் அறிக்கையோடு நிறுத்திவிட்டார். அவர் தனது வாக்காளர்களின் வாக்குரிமையை தக்க வைக்க முயற்சிகள் செய்யவில்லை.
முக்கியமாக விஜய் ஒரு நிர்வாகிகள் குழுவை கூட இதற்காக நியமிக்கவில்லை. உடனே விஜய் சுதாரிக்க வேண்டும். இல்லையென்றால் அவருக்கு கடுமையான சிக்கல் ஏற்படும், என்று விஜய்க்கு அரசியல் வல்லுநர்கள் பலரும் எச்சரிக்கை விடுக்க தொடங்கி உள்ளனர்.
விஜய் கட்சி என்ன செய்கிறது?
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணிகள் காரணமாக விஜய்க்கு செல்லும் இளம் வாக்காளர்கள் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. ஏனென்றால்.. விஜயின் வாக்காளர்கள் பலரும் 2000க்கு பின் பிறந்தவர்களாக இருக்க வாய்ப்புகள் உள்ளன. 2002-2004 காலகட்டத்தில் நடத்தப்பட்ட SIR பட்டியலில் இவர்களின் பெயர்கள் இருந்திருக்காது. இதனால் இப்போது SIR நடக்கும் நிலையில்.. புதிய வாக்காளர்கள் தங்கள் குடியுரிமை மற்றும் வசிப்பிடத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை வழங்க வேண்டும். அதாவது இவர்கள் 12 முக்கியமான ஆவணங்களில் எதையாவது ஒன்றை வழங்க வேண்டும். அப்போதுதான் இவர்கள் லிஸ்டில் இருப்பார்கள்.
அதாவது 2002-2004 காலகட்டத்தில் நடத்தப்பட்ட SIR பட்டியலில் உங்களின் பெயர்கள் இல்லை.. அதன்பின்தான் நீங்கள் வாக்காளர்கள் ஆனீர்கள் என்றால்.. கீழ்கண்ட ஆவணங்களை கொடுக்க வேண்டும். இல்லையென்றால் உங்களின் வாக்குரிமை பறிக்கப்படும்.
விஜய்க்கு பூத் கமிட்டி இல்லை. தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு பெரிய அளவில் கிரவுண்டு நிர்வாகிகள் இல்லை. ஆனால் இதை உணராமல் விஜய் அமைதியாக இருக்கிறார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணிகள் காரணமாக விஜயின் தமிழக வெற்றிக் கழகம் அதிகம் பாதிக்கப்படலாம் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications