தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி கோரி சிவசங்கர் பாபா மனு.. ஹைகோர்ட் நோட்டீஸ்
சென்னை: தனியார் மருத்துவமனையில் சொந்த செலவில் சிகிச்சை பெற அனுமதி கோரி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபா தாக்கல் செய்த மனுவுக்கு சிபிசிஐடி மற்றும் புழல் சிறை கண்காணிப்பாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி சர்வதேச பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இதயநோய் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட தன்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கும்படி சிறைத்துறைக்கு உத்தரவிடக் கோரி சிவசங்கர் பாபா மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், இந்த வழக்கில் கைது செய்யப்படுவதற்கு எட்டு நாட்களுக்கு முன் நெஞ்சுவலி காரணமாக டேராடூன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மூன்று ஸ்டண்ட் பொருத்தப்பட்டதாகவும், அதில் ஒன்று முறையாக பொருத்தப்படாததால் தொடர்ந்து நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கைதுக்கு பின் நெஞ்சுவலி காரணமாக ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையிலும், ஸ்டான்லி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றதாக மனுவில் கூறியுள்ள அவர், இதுதவிர 73 வயதான தனக்கு நீரழிவு நோய், கண்பார்வைக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர் சிகிச்சையால் மட்டுமே தனது வாழ்நாளை நீட்டிக்க முடியும் என்பதால், தனது சொந்த செலவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், நவம்பர் 25ம் தேதிக்குள் மனுவுக்கு பதிலளிக்கும்படி, சிபிசிஐடி போலீசாருக்கும், புழல் சிறை கண்காணிப்பாளருக்கும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications