"10 செகண்ட் ரூல்!" குளிரால் தூங்க முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா? இதை செய்யுங்கள் போதும்.. ரொம்பவே ஈஸி
சென்னை: பருவமழை தொடங்கி உள்ள நிலையில், முறையாகத் தூங்க முடியாமல் சிரமப்படும் மக்கள் சில விஷயங்களைச் செய்தாலே போதும் பிரச்சினையே இருக்காது.
வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், பலரும் இரவு நேரத்தில் தூங்கச் சிரமப்படுவார்கள். குளிர் வேற லெவலில் இருக்கும் என்பதால் பலருக்கும் தூக்கம் வருவதற்குள்ளேயே பாதி இரவு முடிந்துவிடும்.
அதைவிட முக்கிய பிரச்சினை, குளிர் காலத்தில் காலை நேரத்தில் நம்மால் சரியான நேரத்தில் எழ முடியாது. இதனால் அலுவலகத்திற்கு லேட்டாக செல்வது முதல் பல பிரச்சினைகளை நாம் சந்தித்து வருகிறோம்.

குளிர் காலம்
ஆனால் சில குறிப்பிட்ட விஷயங்களைப் பின்பற்றினால் குளிர்ந்த காலை நேரங்களை எளிதாகக் கையாளலாம் என்கிறார் தூக்க நிபுணரான மார்ட்டின் சீலி.. காலை நேரத்தில் நாம் எதைச் செய்தால் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும் என்றும் குளிர் காலத்தில் இரவு நேரங்களில் என்ன செய்தால் ஈஸியாக தூங்க முடியும் என்பதையும் அவர் விரிவாகவே விளக்குகிறார். அவர் சொல்லும் அறிவுரைகளைப் பின்பற்றினால் சில நிமிடங்களில் தூக்கம் நிச்சயம்.

ஆடைகள்
முதலில் குளிர் காலத்தில் இரவு நேரங்களில் தூங்கச் செல்லும் போது, உங்களைச் சற்று வெதுவெதுப்பாக வைத்திருக்கும் ஆடைகளை அணிய வேண்டும். கெட்டியான ஆடைகளை அணியவில்லை என்றால் குளிரால் முறையாகத் தூங்க முடியாது. மேலும், இரவு நேரத்தில் குளிரால் அடிக்கடி கண் விழிப்பும் கூட ஏற்படும். எனவே குளிர்ச்சியான இரவுகளில் உங்களை இதமாக வைத்திருக்கும் ஆடைகளை அணியுங்கள்.

10 செகண்ட் ரூல்ஸ்
அடுத்து காலை எழும்போது பின்பற்ற வேண்டிய முக்கியமான 10 செகண்ட் ரூல் என்று ஒன்று உள்ளது. அதாவது படுக்கையில் தூங்கிக் கொண்டு இருக்கிறீர்கள் என்றால் அலாரம் அடித்த 10 நொடிகளில் எப்படியாவது படுக்கையில் இருந்து எழுந்துவிடுங்கள். கொஞ்ச நேரம் என மீண்டும் படுத்தால் தான் அப்படியே தூங்கிவிடுவோம். எனவே, அலாரம் அடித்து முழிப்பு வந்த உடன் பத்தே நொடிகளிலே படுக்கையில் இருந்து எழுந்துவிடுங்கள்.

சூடான நீர்
முடிந்தவரைப் படுக்கை அருகே சில உடைகளை வைத்திருங்கள். அப்போது தான் எழுந்த உடன் அதை அணிந்து கொள்வதன் மூலம் குளிரில் இருந்து உங்களால் தப்பிக்க முடியும். அடுத்துக் குளிக்கும் போது சூடான நீரில் குளியுங்கள். சிலருக்குச் சூடான நீரில் குளிக்கத் தயக்கம் இருக்கலாம். ஆனால், அதில் தவறு எதுவும் இல்லை. சொல்லப்போனால் குளிர் காலத்தில் முறையாக எழ முடியாமல் சிரமப்படுபவர்கள் சூடான நீரில் குளித்தால் அது பெரியளவில் உதவுமாம்.

தூக்கம்
இந்த சின்ன சின்ன விஷயங்களைப் பின்பற்றினால் போதும் அது குளிர் காலத்தில் உங்களை எனர்ஜியாக வைத்திருக்கும். இந்த காலத்தில் நமது உடல் வெப்பநிலையை இழப்பதே முக்கிய பிரச்சினையாக இருக்கும். அதைத் தவிர்க்கவே உடலை இதமாக வைத்திருக்கும் ஆடைகளை அணியச் சொல்வதாகத் தெரிவிக்கிறார் தூக்க நிபுணரான மார்ட்டின் சீலி.. மேலும், சூடான நீரில் குளிப்பதும் உடல் வெப்பநிலையைச் சீராக வைத்திருக்க உதவும் என்றும் அவர் கூறுகிறார்.

பருவ மழை
இப்போது தான் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், இந்த விஷயங்களை எல்லாம் பின்பற்றினாலே போதும் ஆரோக்கியமான தூக்கம் நமக்கு நிச்சயம் கிடைக்கும். அதேபோல காலை எழுந்த உடன் அந்த 10 செகண்ட் ரூலை பின்பற்றினாலே போதும் சரியான நேரத்தில் நம்மால் எழுந்துவிட முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.












Click it and Unblock the Notifications