ஆறாக ஓடும் பணமழை... வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணையம், போலீஸ்... டிடிவி தினகரன் ஆவேசம்
சென்னை: ‛‛நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் முடிந்த நிலையில் பணமழை ஆறாக ஓடும் நிலையில் தேர்தல் ஆணையம், போலீஸ் துறை வேடிக்கை பார்க்கிறது'' என டிடிவி தினகரன் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ல் நடைபெற உள்ளது. சென்னை, கோவை, திருநெல்வேலி உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 90 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12838 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சூறாவளி பிரச்சாரம்
இதனால் தமிழகத்தில் அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணியை துவக்கினர். சுயேச்சைகளும் வேட்புமனு தாக்கல் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்கள், கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர்.

நாளை ஓட்டுப்பதிவு
தேர்தல் நடத்தை விதிகளின்படி 48 மணி நேரத்துக்கு முன்னதாக நேற்று மாலையுடன் பகிரங்க பிரசாரம் முடிவடைந்தது. நாளை காலை 7 மணிக்கு மாநிலம் முழுவதும் ஒரேகட்டமாக 31 ஆயிரத்து 150 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடக்கிறது. பாதுகாப்பு பணியில் 1.13 லட்சம் போலீசார் ஈடுபட உள்ளனர்.

டிடிவி அதிருப்தி
இந்நிலையில் ஓட்டுக்காக சில இடங்களில் பொதுமக்களுக்கு பணம் விநியோகிப்பதாக கூறப்படுகிறது. இதனால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் (அமமுக) பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிருப்தி அடைந்துள்ளார். பணப்பட்டுவாடாவை தேர்தல் ஆணையம், போலீசார் தடுக்கவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video

ஆறாக ஓடும் பணம்
இதுதொடர்பா டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பிரசாரம் ஓய்ந்தவுடன் நேற்று மாலையிலிருந்து தமிழகம் முழுவதும் பணமழை ஆறாக ஓடுவதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. மக்களை விலைக்கு வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தில் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் வகையில் திமுக, பழனிசாமி கம்பெனிகள் பணத்தை வாரி இறைப்பதை மாநில தேர்தல் ஆணையமும், காவல் துறையும் பார்த்து கொண்டிருப்பது கண்டனத்துக்குரியது'' என குறிப்பிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications