நள்ளிரவு மீட்டிங்... சீல் வைத்த கவர்... ஸ்டாலினுக்கு சோனியா அனுப்பும் மெசேஜ்.. அதிரும் அறிவாலயம்
சென்னை: தமிழக அரசியலில் இப்போது ஹாட் டாபிக் 'சீட் ஷேரிங்'தான். ஒரு பக்கம் அறிவாலயத்தில் ஐ.யு.எம்.எல் (IUML) உடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் ஆழ்வார்பேட்டை சி.எம் இல்லத்தில் நள்ளிரவில் ஒரு 'சர்ப்ரைஸ்' விசிட் அடித்திருக்கிறது காங்கிரஸ் டீம்.

சீல் வைத்த கவரும்... சோனியாவின் மெசேஜும்!
நேற்று இரவு திடீரென முதலமைச்சர் ஸ்டாலினின் வீட்டு வாசலில் வந்து நின்றது டெல்லி கார். உள்ளே இருந்தது கே.சி. வேணுகோபால், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் கிரிஷ் சோடங்கர். வழக்கமான கூட்டணி சந்திப்புதானே என நினைத்தால், அங்கேதான் ஒரு ட்விஸ்ட்! சோனியா காந்தியிடமிருந்து வந்த ஒரு 'சீல் வைக்கப்பட்ட ரகசிய கவரை' ஸ்டாலினிடம் நீட்டியிருக்கிறார் வேணுகோபால்.
"கூட்டணி ஸ்ட்ராங்கா இருக்கு பாஸ்... ஆனா, எங்களுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை (சீட்டுகளை) கொஞ்சம் கவனிங்க" என்பதுதான் அந்த கவருக்குள் இருந்த 'சைலண்ட்' மெசேஜ் என்கிறார்கள் கதர் சட்டைக்காரர்கள்.
என்னதான் வேணுமாம் காங்கிரஸிற்கு?
பேச்சுவார்த்தைக்கு இன்னும் சில நாட்கள் இருக்கும்போதே ஏன் இந்த நள்ளிரவு அவசரம்? மேட்டர் இதுதான்:
காங்கிரஸ் ஆசை: 2021-ல் வாங்கிய 25 சீட் போதாது, இந்த முறை ரவுண்டா 40 சீட் வேணும் என்பது சத்தியமூர்த்தி பவனின் டிமாண்ட்.
திமுக பிளான்: "புதுசா கமல் (MNM), பிரேமலதான்னு நிறைய பேரு கியூவுல நிக்கிறாங்க. அதனால பழைய ஆளுங்க கொஞ்சம் 'தியாகம்' பண்ணுங்க" என டி.ஆர். பாலு டீம் 30-க்குள் முடிக்கப் பார்க்கிறது.
பவர் ஷேரிங்? இப்போதைக்கு 'நோ' சொல்லியாச்சு!
கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரை "ஆட்சியிலும் பங்கு வேணும்" என அடம் பிடித்தது காங்கிரஸ். ஆனால், நேற்றைய சந்திப்பில் அந்தப் பேச்சே வரவில்லையாம். "ஆட்சியில பங்கு கிடையாது... ஆனா, ஒரு ராஜ்யசபா சீட் எக்ஸ்ட்ரா வேணும்னா தரோம்" என திமுக தரப்பு ஒரு இனிப்பான டீலை வீசியுள்ளதாகத் தகவல்.
கூட்டணிக் கட்சிகளுக்கான ஒதுக்கீடு - திமுக பிளான் என்ன?
கூட்டணியில் உள்ள மற்ற முக்கிய கட்சிகளுக்கான உத்தேச இடங்கள் பின்வருமாறு அமையும் எனத் தெரிகிறது:
காங்கிரஸ்: 28 தொகுதிகள் (மேலும் ஒரு தொகுதி 2028 மாநிலங்களவைத் தேர்தல் அல்லது உள்ளாட்சித் தேர்தல் அடிப்படையில் பரிசீலிக்கப்படலாம்).
விசிக (VCK): 8 தொகுதிகள். கூடுதலாக ஒரு தொகுதி வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து தற்போது பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
தேமுதிக (DMDK): 6 தொகுதிகள். புதிதாக இணைந்துள்ள விஜயகாந்தின் தேமுதிகவிற்கு கூடுதலாக ஒரு இடம் வழங்கப்பட வாய்ப்புள்ளது.
சிபிஎம் (CPM): 6 தொகுதிகள்.
சிபிஐ (CPI): 6 தொகுதிகள்.
மக்கள் நீதி மய்யம் (MNM): 2 தொகுதிகள்.
ஐயுஎம்எல் (IUML): 2 தொகுதிகள்.
அடுத்து என்ன?
பிப்ரவரி 26, 27 தேதிகளில் தான் அசல் 'மல்யுத்தம்' ஆரம்பிக்கப்போகிறது. இடையில் சி.எம் கன்னியாகுமரி டூர் போவதால், அதற்குள் டெல்லி கொடுத்த கவருக்கு என்ன ரிப்ளை போகப்போகிறது என்பதைப் பொறுத்துதான் கூட்டணியின் 'கெமிஸ்ட்ரி' அமையும்.
மொத்தத்தில், 2026 தேர்தல் களம் இப்போதே 'ஃபுல் லோடு' ஆகிவிட்டது.
-
அடுத்து ராஜினாமாவுக்கு ரெடியாகும் 3 தலைகள்.. ’மறுமலர்ச்சி’யுடன் விஜய்! பனையூர் போட்ட பக்கா ஸ்கெட்ச்! -
சட்டஒழுங்கு நெருக்கடி.. உள்துறையை விட்டுக் கொடுக்கிறாரா முதல்வர் விஜய்? கைமாறும் போலீஸ் கண்ட்ரோல்? -
நீலாங்கரை சாலையில் திடீரென நின்ற முதல்வர் கான்வாய்.. சாலையில் இறங்கி மக்களை சந்தித்த விஜய்! -
ஒரு மாதத்தில் சிதைந்த விஜய்யின் 'ஒற்றை அதிகார மையம்' உறுதி? ஐஏஎஸ் அதிகாரிகளே புதிய பவர் சென்டர்? -
எந்தவித ஊழல் மற்றும் கமிஷன் குற்றச்சாட்டு இல்லை... முதல்வர் விஜய்யை பாராட்டிய வைகோ -
தவெக அரசுக்கு எதிராக நூதன போராட்டம்... முதல்வருக்கு பார்சலில் அனுப்பிய ஹியரிங் எய்டு! -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
தோல்விக்கு காரணம் என்ன? ரிப்போர்ட்டை கண்டதும் உதயநிதி தந்த ரியாக்சன்.. ஸ்டாலினுக்கு போன மெசேஜ் -
ரிப்போர்ட்டில் ஷாக் விஷயமே இதுதான்.. வெள்ளை அறிக்கையில் நிதியமைச்சர் வில்சன் அதிர்ச்சித் தகவல்! -
அரசுப் பேருந்து 1 km ஓடினால் ரூ.53 நட்டம்.. தனியார்மயமாகிறதா போக்குவரத்து துறை? மரிய வில்சன் சிக்னல் -
பொள்ளாச்சிக்கு நிகரான கொடூரம்.. ஒரு பென்ட்ரைவ்.. 50+ பெண் வீடியோக்கள்.. தவெக நிர்வாகி அட்டூழியம்! -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ்












Click it and Unblock the Notifications