நண்பேண்டானு சொல்லியே! ஆர்யாவுக்கு ஆப்பு வைத்த சந்தானம்! சூரி எவ்வளவோ மேல்.. சசிகுமார் செம ஹேப்பி!
சென்னை: காமெடியனாக இருந்து நாயகர்களாக மாறிய சூரியும் சந்தானமும் நேருக்கு நேர் மோதியுள்ளனர். சூரியின் மாமன் படமும் சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படமும் ஒரே நேரத்தில் வெளியான நிலையில் ஜெயித்தது என்னவோ மாமன் தான். அந்த படம் 25 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருக்கும் நிலையில் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் பட்ஜெட்டை கூட இன்னும் தாண்டவில்லை. மேலும் சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி படமும் இன்னமும் தியேட்டர்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் நிலையில் உற்சாகத்தில் இருக்கிறார் சசிகுமார்.
சின்னத்திரையில் இருந்து போராடி பெரிய திரையில் தோன்றியவர்கள் சந்தானமும் சூரியும். இருவருமே முதலில் சிறிய சிறிய கேரக்டர்களில் நடித்து அதற்கு பிறகு காமெடியனாகி தற்போது நாயகன் ஆனவர்கள். சந்தானம் தனக்கு மிகவும் பிடித்த காமெடி டிராக்கிலேயே இதுவரை பயணம் செய்து வருகிறார்.
இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு ஆகிய படங்கள் வெற்றியை கொடுத்த நிலையில் அடுத்தடுத்து அவரது திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக தில்லுக்கு துட்டு படம் பெரும் வெற்றி பெற்ற நிலையில் அதே தலைப்பை டிடி ரிட்டன்ஸ் என்ற தலைப்பில் எடுத்தார்.

அந்த படமும் வசூலை அள்ளிய நிலையில் அதே டீமுடன் சேர்ந்து டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தை தொடங்கினார். இந்த படத்தை அவரது நண்பரும் நடிகருமான ஆர்யா தயாரித்திருந்தார். இதற்கிடையே டிடி நெக்ஸ்ட் லெவல் படத்துக்கு போட்டியாக நடிகர் சூரியின் மாமன் படம் வந்தது. இந்த படத்திற்கு அவரே கதை என்பது குறிப்பிடத்தக்கது. மாப்பிள்ளை தாய்மாமன் உறவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தாய்மார்களை வெகுவாக கவர்ந்துள்ளது. நாளுக்கு நாள் இந்த படத்தின் வசூலும் அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 25 கோடிக்கு மேல் வசூலித்தது.
மேலும் திரையரங்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாமன், டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் பட்ஜெட் மற்றும் படத்தின் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. சுமார் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட டிடி நெக்ஸ்ட் லெவல் தற்போது வரை 19 கோடி ரூபாயைத் தான் வசூல் செய்திருக்கிறது. மேலும் படம் குறித்த எதிர்மறையான விமர்சனங்கள் படத்துக்கு வரும் ரசிகர்களை குறைத்து இருக்கிறது. அந்த வகையில் இந்த ரேஸில் சூரியின் மாமன் படம் தான் வெற்றி பெற்றிருக்கிறது.
தற்போது வரை போட்ட பணம் ஆர்யாவுக்கு வந்திருக்காது. ஒருவேளை ஓடிடியில் குறிப்பிட்ட விலைக்கு விற்பனையானால் ஆர்யாவுக்கு நஷ்டம் ஏற்படாது என்கின்றனர். ஆனால் நாளுக்கு நாள் படத்திற்கான வரவேற்பு குறைந்து வரும் நிலையில் குறைந்தது ஒரு கோடியாவது ஆர்யாவுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என திரையுலகில் கூறப்படுகிறது.
இது ஒரு புறம் இருக்க இரு படங்களோடு போட்டிக்கு வந்த சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் பெருவெற்றி பெற்றிருக்கிறது. மாமன் படத்தைப் போலவே இந்த படத்துக்கும் குடும்ப ரசிகர்களின் ஆதரவு கிடைத்திருக்கிறது. மேலும் இந்த வாரம் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்கின்றனர். தற்போது வரை இந்த படமும் 25 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை ஈட்டியதாக சொல்லப்படுகிறது. விரைவில் மூன்று படங்களில் வசூல் நிலவரம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications