சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேலையை ஆரம்பிச்சாச்சு.. 4 வழித்தடங்கள்.. சூப்பர் முடிவெடுத்த தெற்கு ரயில்வே!

Google Oneindia Tamil News

சென்னை : திருச்சி - ஈரோடு, சேலம் - கரூர்,கரூர் - திண்டுக்கல், விழுப்புரம் - காட்பாடி ஆகிய 4 வழித்தடங்களில் இரட்டை ரயில் பாதைகள் அமைப்பதற்கான பணிகளை தெற்கு ரயில்வே தொடங்கி உள்ளது. இந்த பாதைகள் செயல்பாட்டிற்கு வந்தால், தமிழகத்தில் சரக்குகளை கையாள்வதில் தொடங்கி, பயணிகள் போக்குவரத்து வரை மிக வலுவான மாற்றம் நடக்கும்.

தமிழகத்தில் தற்போது, சென்னை- கோவை, சென்னை- மதுரைஆகிய வழித்தடங்களில் இரட்டை ரயில் பாதை உள்ளது. இது தவிர மதுரை-கன்னியாகுமரி வழித்தடத்தை இரட்டை ரயில் பாதையாக மாற்றும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில் மக்கள் தொகை அடிப்படையில் பிரதான ரயில்வே திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது . இந்தஆய்வின் முடிவில் ரயில்வேக்கு லாபம் தரும் பகுதிகளில் ரயில் பாதை அமைக்க ரயில்வே வாரியம் ஒப்பதல் அளித்து வருகிறது.

சென்னை அருகே பிரபல கல்லூரியின் 5வது மாடியில் இருந்து குதித்த மாணவி.. பெற்றோர் கண் முன்னே துயரம் சென்னை அருகே பிரபல கல்லூரியின் 5வது மாடியில் இருந்து குதித்த மாணவி.. பெற்றோர் கண் முன்னே துயரம்

ஆய்வு பணி

ஆய்வு பணி

அந்த வகையில் தமிழகத்தில் ரயில் போக்குவரத்து தேவை அதிகரித்துள்ள திருச்சி - ஈரோடு, சேலம் - கரூர்,கரூர் - திண்டுக்கல், விழுப்புரம் - காட்பாடி ஆகிய 4 வழித்தடங்களில் இரட்டை ரயில் பாதைகள் அமைப்பதற்கான ஆய்வு பணிகள் நடந்து வருகிறது.

ரயில் பாதை அமைப்பு

ரயில் பாதை அமைப்பு

கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட ரயில்கள் தற்போது தளர்வுகளுக்கு பின்னர்ள் மீண்டும் இயக்கப்படுகின்றன. அதேபோல், புதிய ரயில் பாதைகள், இரட்டை பாதைகள் அமைப்பதற்கான பணிகளை தெற்கு ரயில்வே தமிழகம் முழுவதும் முழு வீச்சில் செய்து வருகிறது.

விரிவான அறிக்கை

விரிவான அறிக்கை

தமிழகத்தில் புதிதாக 4 வழித்தடங்களில் இரட்டை ரயில் பாதைகள்அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதன் விவரம் பின்வருமாறு:
திருச்சி - ஈரோடு, சேலம் - கரூர், கரூர் - திண்டுக்கல், விழுப்புரம் - காட்பாடி ஆகிய 4வழித்தடங்களில் இரட்டை ரயில்பாதை அமைப்பதற்கு விரிவானதிட்ட அறிக்கையைத் (டிபிஆர்) தயாரிக்கும் பணியை தொடங்கி உள்ளது.

இப்பணி 6 மாதங்களில் முடிக்க உத்தரவிட்டுள்ளது. ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் , ரயில்வே வாரியம் முடிவு செய்து,மத்திய பட்ஜெட்டில் இந்த திட்டங்கள் செயல்படுத்துவதற்கான நிதி ஒதுக்கப்பட உள்ளது.

தர்மபுரி மொரப்பூர்

தர்மபுரி மொரப்பூர்

இதனிடையே தர்மபுரி மொரப்பூர், ஈரோடு -பழனி ஆகிய பாதை பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஈரோட்டில் இருந்து தாராபுரம் வழியாக பழனியை இணைக்கும் ரயில் பாதைத் திட்டத்தைச் செயல்படுத்த ஆங்கிலேயர் ஆட்சியில் (1915-ஆம் ஆண்டு) முடிவு எடுக்கப்பட்டு அதற்கான சர்வேயும் அப்போதே எடுக்கப்பட்டது. இறுதியாக 2006-07-ஆம் நிதியாண்டில் ரூ.289 கோடி மதிப்பீட்டில் ஈரோடு- பழனி புதிய அகல ரயில் பாதைத் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்தத் திட்டம் இதுவரை தொடங்கப்படாத நிலையில், திட்டத்தின் மதிப்பு ரூ. 1,140 கோடிக்கும் மேல் அதிகரித்துள்ளது. இதை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

English summary
Southern Railway is in the process of constructing dual carriageways on 4 routes namely Trichy - Erode, Salem - Karur, Karur - Dindigul, Villupuram - Katpadi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X