ஒரே குரல்.. பாஜகவை கழற்றி விட தயாராகும் அதிமுக சீனியர்கள்.. அவரே ஓப்பனா சொல்லிட்டாரே.. பயங்கர ஷாக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பலரும் பாஜக கூட்டணியில் இருந்து விலகும் முடிவோடு பேசி வந்த நிலையில், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பாஜக கூட்டணியில் உறுதியாக இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் அதிமுக தனித்துப் போட்டியிடத் தயார் எனக் கூறியுள்ளது அதிமுக - பாஜக தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பான சந்தேகங்களும், சலசலப்புகளும் சில நாட்களாக தொடர்ந்து எழுந்து வருகின்றன. எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பலரும் பாஜக பற்றிப் பேசிய கருத்துகள் கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தின.

பாஜகவினரும் தனித்துப் போட்டியிட தயார் எனப் பேசி வருவதால் அதிமுக - பாஜக கூட்டணி வரும் 2024 லோக்சபா தேர்தலில் தொடருமா என்ற சந்தேகம் நிலவி வருகிறது. இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் இந்த சந்தேகத்தை வலுப்படுத்துவது போல கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

அதிமுக + பாஜக கூட்டணி

அதிமுக + பாஜக கூட்டணி

மக்களவைத் தேர்தல் வரும் 2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 இடங்களையும் கைப்பற்ற அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை துரிதப்படுத்தியுள்ளன. இந்த நிலையில்தான், 2024 தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைப்போம் என கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதனைத்தொடர்ந்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அதிமுகதான் தமிழ்நாட்டில் தங்கள் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் என வெளிப்படையாகவே தெரிவித்தார். இதனால், அதிமுக + பாஜக கூட்டணியில் நல்ல இணக்கம் நிலவுவதாகக் கருதப்பட்டது. அதன்பிறகு தான் பிரச்சனை தீவிரமடைந்தது.

கூட்டணியில் விரிசல்

கூட்டணியில் விரிசல்

அதிமுக தனித்து போட்டியிடவும் தயாராக உள்ளதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசினார். இதற்கு பதிலளித்த பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன், உள்ளாட்சி தேர்தலைப் போன்று நாடாளுமன்ற தேர்தலிலும் 39 வேட்பாளர்களை தனியாக நிறுத்த எங்களால் முடியும் எனக் கூறினார். அண்ணாமலையின் பேச்சிலும் மாற்றங்கள் தென்படத் தொடங்கின. பாஜகவின் வளர்ச்சி அதிகரித்துள்ளதால் குறைந்தபட்சம் 25 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என என அண்ணாமலை பேசி வருகிறார். அதிமுக கூட்டணியில் 25 தொகுதிகள் பாஜகவிற்கு கிடைக்க வாய்ப்பு இல்லை என்பதால், பாஜக தனித்து போட்டியிட விரும்புவதை அண்ணாமலை மறைமுகமாக வெளிப்படுத்தியதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

 பாஜக வேண்டாம்

பாஜக வேண்டாம்

மேலும், அதிமுகவின் பின்னால் நாம் செல்ல வேண்டிய தேவை இல்லை என்றும், தனித்து போட்டியிடும் அளவிற்கு நாம் வளர வேண்டும் என்றும் அண்ணாமலை பேசியது அதிமுக - பாஜக இடையேயான கூட்டணி உறவு குறித்த சந்தேகங்களை மேலும் வலுப்பெறச் செய்தது. இதைத்தொடர்ந்து, ஈபிஎஸ் அணியின் முன்னணி நிர்வாகிகள் பலரும், பாஜக தங்களுடன் கூட்டணியில் இருப்பதால் சிறுபான்மையினரின் வாக்குகள் பறிபோகின்றன, அதனால் பாஜக கூட்டணி வேண்டாம் என எடப்பாடியிடம் கூறி வருவதாக தகவல்கள் வெளியான. அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சைத் தொடர்ந்து பல அதிமுக நிர்வாகிகள் பாஜகவையும் அண்ணாமலையும் விமர்சித்து மேடைகளில் பேசினர்.

அதிமுக வடக்கு

அதிமுக வடக்கு

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, பாஜகவை பொதுவெளியில் விமர்சிக்கக்கூடாது என அறிவுறுத்தியதாக தகவல் வெளியானது. எனினும், எடப்பாடி பழனிசாமி அணியில் வட மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பாஜக கூட்டணி வேண்டாம் என்று கருதுவதாகவும், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த எடப்பாடிக்கு மிகவும் நெருக்கமான புள்ளிகள், பாஜக கூட்டணி கட்டாயம் வேண்டும் என்று கருதுவதாகவும் அதிமுக வட்டாரத்தில் பேச்சுகள் நிலவி வந்தன.

கடும் அதிர்ச்சி

கடும் அதிர்ச்சி

இந்தக் கருத்துகளுக்கு மத்தியில் அதிமுக - பாஜக கூட்டணி தொடர்ந்து நீடிக்குமா? அவ்வாறு நீடித்தால் அதற்கு யார் தலைமையாக இருப்பார்கள் என்ற குழப்பம் இரு கட்சி தொண்டர்களிடமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் பாஜக - அதிமுக கூட்டணி உறுதியாக தொடர வேண்டும் என்ற முடிவில் இருப்பதாக கூறப்படும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் தனித்துப் போட்டியிடத் தயார் என்று பேசியுள்ளார். பாஜக தலைமையின் தயவைப் பெற எஸ்.பி.வேலுமணி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகச் சொல்லப்படும் நிலையில் அவரது இந்தப் பேச்சு பாஜகவினருக்கு கடும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

தனித்து நிற்கிறோம்

தனித்து நிற்கிறோம்

கோவை மாதம்பட்டி பகுதியில் சொத்துவரி, பால் விலை, மின் கட்டண உயர்வைக் கண்டித்து, அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தான் தமிழ்நாட்டில் மிகப்பெரிய கட்சி. தமிழ்நாட்டில் திமுக பெரிய கட்சி கிடையாது. அதிமுக பிளவுபட்டு விட்டது என்று பலரும் சொல்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக பலமாகத்தான் உள்ளது. திமுகவுக்கு தைரியம் இருந்தால் தேர்தலில் தனித்துப் போட்டியிடச் சொல்லுங்கள். நாங்களும் தனித்து நிற்கிறோம். யார் வெற்றி பெறுவோம் என்று பார்க்கலாம்.

வேறு கட்சி இல்லை

வேறு கட்சி இல்லை

எங்களுக்கு இணையான‌ கட்சி வேறு எதுவும் இல்லை. கிராமங்கள்தோறும், ஊராட்சிதோறும், பேரூராட்சிதோறும் ஒவ்வொரு ஊரிலும் திமுகவை எதிர்த்து போராட்டம் நடத்தும் சக்தி அதிமுகவுக்கும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டும் தான் உண்டு. கூட்டணிக் கட்சிகளை அனுசரித்துச் செல்வோம். தற்போது நிறைய கட்சிகள் நாங்கள் வளர்ந்துவிட்டோம் எனச் சொல்கிறார்கள். அதிமுகவை பொறுத்தவரை எந்த ஒரு கட்சியையும், எந்த ஒரு தனி நபரையும் துன்பறுத்தி பேச வேண்டும் என்ற எண்ணம் இல்லை." எனப் பேசி இருக்கிறார் வேலுமணி.

வலுப்பெறும் சந்தேகம்

வலுப்பெறும் சந்தேகம்

முன்பு, அதிமுகவின் வடக்கு மாவட்டங்களைச் சேர்ந்த தலைவர்கள் தான் பாஜக உடன் கூட்டணி வேண்டாம் என்ற முடிவில் இருந்தனர். இப்போது எஸ்.பி.வேலுமணியும், தனித்து நிற்கிறோம், எங்களுக்கு இணையாக வேறு கட்சியே இல்லை, திமுகவுக்கு தைரியம் இருந்தால் தனித்து நிற்கட்டும் என்று பேசியுள்ளார். சமீபத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும், திமுக தனித்து நிற்கத் தயாரா என சவால் விடுத்திருந்தனர். இதனால், அதிமுக - பாஜக கூட்டணி அமையுமா என்ற சந்தேகங்களும், சலசலப்புகளும் தீவிரமடைந்து வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+