கால்டுவெல் ஆய்வு பற்றி தெரியுமா.. தமிழில் இருந்து பிறந்ததே கன்னடம்.. ஆதாரத்துடன் வந்த அப்பாவு!

Subscribe to Oneindia Tamil

நெல்லை: தமிழில் இருந்து பிறந்ததே கன்னடம் என்ற நடிகர் கமல்ஹாசனின் கருத்து சரியானது என்று சபாநாயகர் அப்பாவு ஆதரவு தெரிவித்துள்ளார். திராவிட குடும்பத்தின் முதல் மொழி தமிழ் எனவும், கன்னடம், தெலுங்கு உள்ளிட்டவை தமிழில் இருந்து பிறந்துள்ளதாகவும் ராபர்ட் கால்டுவெல் ஆய்வு செய்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் தக் லைஃப். இந்தியா முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் கடந்த வாரம் நடைபெற்றது.

Speaker Appavu Claims Kannada Originated from Tamil Citing Caldwell s Research and support Kamal Haasan

என்ன பேசினார் கமல்ஹாசன்?

இதில் கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவரை வரவேற்க கமல்ஹாசன் பேசுகையில், ராஜ்குமாருடைய குடும்பம் அந்த ஊரில் இருக்கும் என்னுடைய குடும்பம். அதனால் இங்கு வந்துள்ளார். இதன் காரணமாக தான் எனது பேச்சை தொடங்கும் போது உயிரே.. உறவே.. தமிழே என்று தொடங்கினேன்.

தமிழில் இருந்து பிறந்த கன்னடம்

தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம். அதனை நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள் என்று தெரிவித்தார். கமல்ஹாசனின் இந்த பேச்சிற்கு கர்நாடகாவில் கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. கமல்ஹாசனின் பேனர்கள், போஸ்டர்கள் கிழிக்கப்பட்டுள்ளன. இதற்கு கர்நாடகா அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

கர்நாடகாவில் எதிர்ப்பு

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவில்லை என்றால், கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படம் ரிலீஸாகாது என்று அறிவித்துள்ளனர். இதனிடையே தமிழக அரசியல் கட்சியினர் கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அந்த வகையில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழில் இருந்துதான் கன்னட மொழி உருவானதாக நடிகர் கமல்ஹாசன் கூறியது சரியான கருத்துதான்.

அப்பாவு ஆதரவு

மதராஸ் மாகாணமாக இருந்த போது மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்படாததற்கு முன்பு 18 மொழிகளை கற்றுத் தெரிந்த ராபர்ட் கால்டுவெல் ஆய்வு செய்து திராவிட மொழிகளுக்கு ஒப்பிலக்கணம் எழுதி இருக்கிறார். சமஸ்கிருதத்தில் இருந்துதான் தமிழ் உள்ளிட்ட மொழிகள் வந்துள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் அதனை ராபர்ட் கால்டுவெல் ஆய்வு செய்து மறுத்துள்ளார்.

கால்டுவெல் ஆய்வு தெரியுமா?

திராவிடக் குடும்பத்தின் முதல் மொழி தமிழ் என்று தெரிவித்துள்ளார். கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகள் தமிழில் இருந்து பிறந்துள்ளதாக கூறியுள்ளார். கமல்ஹாசன் சொன்னதற்கான ஆதாரங்களும் இருப்பதாக அவர் கூறியதும் சரியானதுதான் என்று தெரிவித்துள்ளார். அதேபோல் தமிழ்நாட்டில் இருந்து தமிழில் இருந்தே கன்னட மொழி பிறந்ததற்கான ஆதாரத்தை பல்வேறு தரப்பினரும் வெளியிட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+