சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை.. மதுரை, கோவை, திருச்சி, நாகர்கோவில்.. ரயில் ஓடப் போகுது.. ரிசர்வ் பண்றவங்க பண்ணிக்கலாம்!

தமிழகத்தில் பயணிகள் ரயில் போக்குவரத்து செப்டம்பர் 7ம் தேதி முதல் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், முதல் கட்டமாக 7 எக்ஸ்பிரஸ் ரயில்கள் செப்டம்பர் 7ம் தேதி இயக்கப்படும் என ரயில்வே வா

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் பயணிகள் ரயில் போக்குவரத்து செப்டம்பர் 7ம் தேதி முதல் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. முதல் கட்டமாக 7 எக்ஸ்பிரஸ் ரயில்கள் செப்டம்பர் 7ம் தேதி இயக்கப்படும் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. கூடுதலாக சென்னை எழும்பூரில் இருந்து 2 சிறப்பு ரயில்களும், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 4 ரயில்களும் 7ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளன இந்த ரயில்களுக்கான முன்பதிவு நாளை முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பயணிகள் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனிடையே, வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காகவும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

கொரோனா- பாலிவுட் நடிகர் திலீப் குமாரின் மற்றொரு சகோதரரும் மரணம் கொரோனா- பாலிவுட் நடிகர் திலீப் குமாரின் மற்றொரு சகோதரரும் மரணம்

செப்டம்பர் 7 முதல் ஓடும் ரயில்கள்

செப்டம்பர் 7 முதல் ஓடும் ரயில்கள்

கொரோனா பரவல் அதிகரிக்கவே பயணிகள் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது சரக்கு ரயில் போக்குவரத்து மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் செப்டம்பர் 7ம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவை தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, தமிழகத்தில் முதல்கட்டமாக செப்டம்பர் 7ஆம் தேதி 7 எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

7 சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள்

7 சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள்

தமிழகத்தில், கோவை-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும். மதுரை-விழுப்புரம் இன்டா்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் தினசரி, திருச்சி-நாகா்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் தினசரி, கோயம்புத்தூா்-காட்பாடி எக்ஸ்பிரஸ் ரயில் தினசரி, திருச்சி-செங்கல்பட்டு, அரக்கோணம்-கோயம்புத்தூா், திருச்சி-செங்கல்பட்டு மெயின் லைன் ஆகிய 7 சிறப்பு ரயில்கள் வரும் 7ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளன என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

 6 சிறப்பு ரயில் சென்னையில் இருந்து ஓடும்

6 சிறப்பு ரயில் சென்னையில் இருந்து ஓடும்

தமிழகத்தில் 6 சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய ரயில்வே அமைச்சகத்திற்கு கோரிக்கை வைத்திருந்தது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, ரயில்வே அமைச்சகம், சென்னையில் இருந்து 6 சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து 2 சிறப்பு ரயில்களும், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 4 ரயில்களும் 7ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளன.

ரிசர்வேசன் டிக்கெட் இருந்தால் அனுமதி

ரிசர்வேசன் டிக்கெட் இருந்தால் அனுமதி

சென்னை எக்மோர் - பாண்டியன் ரயில் இரு மார்க்கம், சென்னை எக்மோர் - கன்னியாகுமரி - சென்னை எக்மோர் - தூத்துக்குடி முத்து நகர் ரயில்கள் இரு மார்க்கமாக இயக்கப்பட உள்ளது. சென்னை சென்ட்ரல் - கோவை சேரன் எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல் - மேட்டுப்பாளையம் ஆகிய ரயில்களுக்கான முன்பதிவு நாளை முதல் தொடங்குகிறது. ரிசர்வேசன் செய்யப்பட்ட டிக்கெட்டுகள் இருந்தால் மட்டுமே ரயில் நிலையத்திற்குள் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்.

பயணிகளுக்கு விதிமுறைகள்

பயணிகளுக்கு விதிமுறைகள்

பயணிகள் ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், பயணிகள் ரயில் நிலையங்களில் சமூக இடைவெளியுடன் நிற்பதற்காக வட்ட வடிவில் கோடுகள் வரையும் பணி நடைபெற்று வருகிறது. ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் ரயில் நிலையங்களில் ஹேண்ட் சானிடைசர் மூலம் சுத்தம் செய்த பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். அதோடு, ரயில் பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றி ரயிலில் ஏறவும் இறங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

நாளை முதல் முன்பதிவு

நாளை முதல் முன்பதிவு

பயணிகள் ரயில் நிலைய நுழைவு வாயிலில் நுழையும் போது, முகக்கவசம் அணிந்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாத பயணிகள் ரயில் நிலையத்திலும், ரயிலில் செல்லவும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

English summary
Southern Railway announced that special trains will resume from September 7 within Tamil Nadu. In addition, 2 special trains from Chennai Egmore and 4 trains from MGR Central Railway Station will be operated from the 7th of this month.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X