26 வயது ஆண் வயிற்றில் கருப்பை.. மிரண்ட டாக்டர்கள்.. விந்தணுவை டெஸ்ட் செய்தால், ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குழந்தை இல்லாத பிரச்சினைக்காக டாக்டரிடம் டெஸ்ட் செய்ய போன 26 வயது இளைஞருக்கு, அங்கு தெரியவந்த விஷயம் அவருக்கே தூக்கி வாரிப்போட்டுள்ளது.. காரணம் அந்த இளைஞரின் உடலுக்குள் கருப்பை இருந்ததாம்.. கருப்பையும், கருக்குழாய்களைப் போன்ற அமைப்புகளும் இருந்துள்ளது.. இந்த செய்திதான் சோஷியல் மீடியா முழுதும், வைரலாகி கொண்டிருக்கிறது. இதன் விவரத்தை பார்ப்போம்.

26 வயது அந்த இளைஞருக்கு கல்யாணமாகி விட்டது.. ஆனால், குழந்தை இல்லை.. இதற்காக டெல்லி ராஜோரி கார்டனில் உள்ள ஆர்ஜி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். முதலில் அவரது விந்து டெஸ்ட் செய்யப்பட்டது. அதில் விந்தணுக்களே இல்லாதது தெரியவந்தது. மருத்துவத்தில் இதை "Azoospermia" என்கிறார்கள்.

Sperm Test

ஆணுக்கு கருப்பை

குழந்தை இல்லாததற்கான காரணம் என்ன என்பதை தெரிந்துகொள்ள டாக்டர்கள் அடுத்தடுத்து பல டெஸ்ட்களை செய்துள்ளனர்... அப்போது எடுக்கப்பட்ட எம்ஆர்ஐ ஸ்கேனில், இடுப்புப் பகுதியில் கருப்பையைப் போன்ற ஒரு அமைப்பும், அதனுடன் கருக்குழாய்களைப் போன்ற குழாய் அமைப்புகளும் இருப்பது தெரியவந்தது. இதனால் டாக்டர்கள் மேலும் ஆய்வு செய்தனர். மரபணு டெஸ்ட்டில் அந்த இளைஞருக்கு 46,XY என்ற ஆண் குரோமோசோம் அமைப்பு இருப்பதும் உறுதியானது.

இந்த டெஸ்ட் முடிவுகளை வைத்து, அவருக்கு "Persistent Müllerian Duct Syndrome" என்ற அரிய பிறவிக் குறைபாடு இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதை ரொம்ப எளிமையாக சொன்னால், ஆண் குழந்தை கருவில் வளரும்போது, கருப்பை போன்ற பெண் உறுப்புகள் உடலில் இருக்காது. ஆனால் இந்த இளைஞரின் உடலில் மட்டும் அந்த உறுப்புகள் மறையாமல், கருப்பை மற்றும் கருக்குழாய்களைப் போன்ற அமைப்புகளாக தொடர்ந்து இருந்துள்ளன. அதனால்தான் அவரது உடலுக்குள் கருப்பை இருந்துள்ளது.

விந்தணு குறைபாடு

இப்படியொரு குறைபாடு அரிதானது என்றும் இதுவரை 300-க்கும் குறைவான பாதிப்புகளே பதிவாகியுள்ளதாக டாக்டர்கள் சொல்கிறார்கள். பொதுவாக இதுபோன்ற பிரச்சினை குழந்தைப் பருவத்திலேயே கண்டுபிடிக்கப்படும்.

பொதுவாக ஆண் குழந்தை பிறக்கும் போது, விதைப்பைகள் வயிற்றுக்குள் இருக்காது. அவை வயிற்றில் இருந்து கீழே இறங்கி, உடலுக்கு வெளியிலுள்ள பையில் இருக்கும். ஆனால் இந்த இளைஞருக்கு 2 விதைப்பைகளும் கீழே இறங்காமல், 26 வயது வரையிலும் வயிற்றுக்குள்ளேயே இருந்துள்ளன. இதனால் அவற்றின் வளர்ச்சியும் செயல்பாடும் பாதிக்கப்பட்டுள்ளது.

கருப்பை கருக்குழாய்கள்

பல வருட காலம் வயிற்றுக்குள் இருந்த விதைப்பைகளில், கேன்சர் ஏற்படும் அபாயமும் அதிகமாக இருக்கும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அதனால்தான், உடனே டாக்டர்கள் ஆபரேஷன் செய்ய முடிவு செய்தனர்..

வயிற்றில் பெரிய வெட்டு போடாமல், சிறிய துளைகள் மூலம் லேப்ராஸ்கோப்பி ஆபரேஷன் செய்துள்ளனர். வயிற்றிலிருந்த கருப்பை மற்றும் கருக்குழாய்களைப் போன்ற அமைப்புகளையும், நீண்ட காலமாக அங்கேயே இருந்த 2 விதைப்பைகளையும் அகற்றியுள்ளனர். இந்த ஆபரேஷனை டாக்டர் சுஷீல் கர்பண்டா தலைமையிலான மருத்துவக் குழு செய்துள்ளது.

ஆபரேஷனில் அகற்றப்பட்ட 2 விதைப்பைகளையும் டாக்டர்கள் தனியாக டெஸ்ட் செய்து பார்த்துள்ளனர். அப்போதுதான் இன்னொரு ஷாக்கிங் விஷயம் தெரியவந்துள்ளது. இரண்டு விதைப்பைகளுமே மிகவும் பாதிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக இடது விதைப்பையில், எதிர்காலத்தில் கேன்சராக மாறக்கூடிய ஆரம்பநிலை மாற்றம் இருந்துள்ளது. இதற்கு "Germ Cell Neoplasia In Situ" என்று பெயர்.

விதைப்பை புற்றுநோய்

விதைப்பை புற்றுநோயை கண்டுபிடிக்க வழக்கமாக செய்யப்படும் சில ரத்த டெஸ்ட்களின் முடிவுகள் இந்த இளைஞருக்கு நார்மலாகவே இருந்துள்ளன. இருந்தாலும், ரத்த டெஸ்ட் நார்மலாக இருக்கிறது என்பதற்காக புற்றுநோய் தொடர்பான எந்தப் பிரச்சினையும் இல்லை என்று சொல்ல முடியாது.

இந்த இளைஞருக்கு ஆபரேஷனில் அகற்றப்பட்ட திசுக்களை டெஸ்ட் செய்த பிறகுதான் புற்றுநோயாக மாறக்கூடிய அந்த ஆரம்பநிலை மாற்றம் தெரியவந்துள்ளது.

ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்

குழந்தை இல்லாததற்கான காரணத்தை தெரிந்துகொள்ள சென்ற 26 வயது இளைஞருக்கு, முதலில் விந்தணுக்கள் இல்லை என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து செய்த டெஸ்ட்களில் உடலுக்குள் கருப்பை இருப்பதும், 2 விதைப்பைகளும் வயிற்றுக்குள்ளேயே இருப்பதும் தெரியவந்தது. அதன்பிறகு ஆபரேஷன் செய்தபோது, 1 விதைப்பையில் எதிர்காலத்தில் புற்றுநோயாக மாறக்கூடிய மாற்றமும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இப்படி ஒரு பிரச்சினையை தெரிந்துகொள்ளச் சென்றபோது, இதுவரை தெரியாமல் இருந்த பல முக்கியமான விஷயங்கள் அடுத்தடுத்து வெளிவந்துள்ளன...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+