“நீட் தேர்வில் அரசியல் செய்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்” - தமிழிசை சௌந்தரராஜன்
சென்னை: நீட் தேர்வு தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் ஏப்.9ம் தேதி நடைபெறும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால், நீட் தேர்வில் அரசியல் செய்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என்று பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
குழந்தைகளின் கல்வியில் அரசியல் செய்ய வேண்டாம் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருக்கிறார். ஏற்கெனவே நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுக கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறது.

"ஒன்றிய அரசு நமது கோரிக்கையை நிராகரித்திருக்கலாம். ஆனால், நீட் தேர்வு முறையை அகற்றுவதற்கான நமது போராட்டம் எந்த வகையிலும் முடிந்துவிடவில்லை என்பதையும் இந்த போராட்டத்தின் அடுத்த கட்டத்திற்கு நாம் மேற்கொள்ள வேண்டிய சட்ட நடடிவக்கை குறித்து சட்ட வல்லுநர்களிடம் ஆலோசிக்கப்படும். மேலும், இந்த விஷயத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை பற்றி அனைத்து சட்டமன்ற தலைவர்களிடமும் ஆலோசனை ஏப்.9ம் தேதி நடத்தப்படும். இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் மருத்துவம் பயிலும் கனவோடு உள்ள லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் கனவை நனவாக்க தமிழ்நாடு அரசு உறுதியாக அனைத்து நடவடிக்கைகளையும எடுக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று முதல்வர் சட்டமன்றத்தில் பேசியிருந்தார்
அனைத்துக்கட்சி கூட்டம் பற்றி பேசிய தமிழிசை சௌந்தரராஜன், "மசோதாவை திருப்பி அனுப்பியது குடியரசுத் தலைவர்தனே! குடியரசுத் தலைவரின் முடிவை மத்திய அரசின் முடிவு என்று சொல்ல முடியாது. அவருக்கு என்று அதிகாரம் இருக்கிறது. அந்த அதிகாரத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. சட்ட வாய்ப்புகள் என்ன? பிரச்சனைகள் என்ன? என்பது பற்றி ஆலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. எனவே இதனை மத்திய அரசின் முடிவு என்று சொல்வதே தவறு.
தான் ஆட்சிக்கு வந்தால் முதலில் நீட் விலக்குக்கு கையெழுத்து போடுவேன் என்று கூறியிருந்தாரே, அது கூட தெரியாமல் முதல்வர் ஆகிவிட்டாரா? தெரிந்துதான் சொன்னார் என்றால், பொய் சொல்லி வந்திருக்கிறாரா? நீட் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இது. மத்திய அரசும் ஏதும் செய்ய முடியாது. மாநில அரசும் ஏதும் செய்ய முடியாது என்பது சாமானியர்களுக்கு கூட தெரியும்" என்று கூறியுள்ளார்.
-
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு! -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
“திமுக ஒரு நச்சுப்பாம்பு” வாயை விட்ட.. மதிமுக அர்ஜுன் ராஜ்! வேடிக்கை பார்க்கும் வைகோ! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்!












Click it and Unblock the Notifications