• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

இவ்வளவு பெரிய அவமரியாதையை எந்த தலைவரும் சந்தித்தது இல்லை...மு.க. ஸ்டாலினைத் தவிர!

|
  ஸ்டாலின் சந்தித்த பெரிய அவமரியாதை எந்த தலைவரும் சந்தித்தது இல்லை

  சென்னை: திமுகவில் பதவி கிடைத்தவுடன் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினை 'உதாசீனப்படுத்தும்' போக்குகள் அதிகரித்துள்ளது அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பதவிக்காக ஸ்டாலினிடம் கெஞ்சியவர்கள் பதவி கிடைத்தவுடன் அவரை அவமதிக்கிறார்களே என கொந்தளிக்கின்றனர் ஸ்டாலின் ஆதரவாளர்கள்.

  கருணாநிதி மறைவுக்குப் பின்னர் எந்த ஒரு எதிர்ப்பும் இல்லாமல திமுக தலைவரானவர் ஸ்டாலின். அதனாலேயே அவர் பெரியார், அண்ணா, கருணாநிதியின் திராவிட இயக்க வாரிசு என்றாகிவிட முடியாது.

  இதை நாம் மட்டுமல்ல ஸ்டாலினும் கூட பல பொதுக்கூட்டங்களில் பட்டவர்த்தனமாகப் பேசியிருக்கிறார். கருணாநிதியின் மகன் என்கிற ஒற்றை காரணத்துக்காகத்தான் ஸ்டாலினை எல்லோரும் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளனர்.

  தமிழகத்தில் வெற்றிடமா?.. நான் இருக்கிறேன்.. ரஜினிகாந்துக்கு ஸ்டாலின் திடீர் பதிலடி

  இந்துத்துவா விஸ்வரூபம்

  இந்துத்துவா விஸ்வரூபம்

  அதைவிட இந்துத்துவா சக்திகள் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் நிலையில் ஒரு வலிமையான தலைமையின் கீழ் அணி திரள்கிறோம் நாங்களும் என்பதைக் காட்டவும் ஸ்டாலினை முன்னிறுத்துகின்றன மதச்சார்பற்ற கட்சிகள். இந்த கள யதார்த்தத்தை ஸ்டாலின் நிச்சயம் ஓரளவு புரிந்திருப்பார்.

  ஸ்டாலினுக்கு அவமானம்

  ஸ்டாலினுக்கு அவமானம்

  ஆனால் ஸ்டாலினுக்கு ஒளிவட்டம் கட்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் கிச்சன் கேபினட் கூட்டம் இதை ஒரு விழுக்காடு கூட உணர்ந்ததாக தெரியாமல் வியூகங்கள் என்கிற பெயரால் போடாத ஆட்டங்களை போட்டு வருகின்றன. இந்த ஆட்டங்களின் விளைவால்தான் எந்த ஒரு அரசியல் கட்சித் தலைவரும் எதிர்கொள்ளாத அவமானங்களை சந்தித்து வருகிறார் ஸ்டாலின்.

  மரியாதை கேட்கும் ஸ்டாலின்

  மரியாதை கேட்கும் ஸ்டாலின்

  சொந்த கட்சிக்காரர்களிடம் எனக்கும் மரியாதை தா என கேட்டுப் பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் ஸ்டாலின். அண்மையில் லோக்சபா தேர்தல் முடிவடைந்த பின்னர் வெற்றி பெற்ற ஒரு சில திமுக எம்.பி.க்கள் பத்திரிகைகளுக்கு பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுத்தனர். அந்த விளம்பரங்கள் சிலவற்றில் ஸ்டாலின் படம் இடம்பெறவே இல்லை. கட்சித் தலைவர் என்ற விசுவாசத்தை விட தமக்கு போட்டியிட சீட் கொடுத்தாரே என்கிற நன்றியை கூட வெளிப்படுத்த முடியாது என கொக்கரிக்கும் நபர்களைத்தான் ஸ்டாலின் எம்.பி.யாக்கி வைத்திருக்கிறார்.

  ஸ்டாலின் படம் இல்லாத போஸ்டர்

  ஸ்டாலின் படம் இல்லாத போஸ்டர்

  திருப்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ., நல்லதம்பி, கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு சுவரொட்டி ஒட்டி இருக்கிறார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, துரைமுருகன், காந்தி எம்எல்ஏ என எல்லோரது படமும் இருக்கிறது. ஆனால் கட்சியின் தலைவரான மு.க.ஸ்டாலின் படம் ஸ்டாம்ப் சைஸ் அளவுக்கு கூட கிடையாது.

  வேண்டும் என்றே அவமரியாதை

  வேண்டும் என்றே அவமரியாதை

  நிச்சயம் இது திட்டமிட்டே ஸ்டாலினை அவமரியாதை செய்யும் நோக்கத்துடன் அச்சிடப்பட்ட போஸ்டர் என்பது பார்த்த உடன் யாருக்கும் புரிந்து விடும். இது திமுகவுக்குள் கடும் புகைச்சலை ஏற்படுத்தி தலைமை கழகம் வரை சென்றிருக்கிறது. இதற்குப் பின்னர்தான் ரம்ஜான் வாழ்த்துக்கு என்று ஸ்டாலினின் மிகப் பெரிய படத்துடன் ஒரு போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. தாம் வாய்ப்பு கொடுத்து எம்.எல்.ஏவாக்கியவர்கள், எம்.பியாக்கியவர்களிடமே எனக்கும் மரியாதை தா.. என கேட்டுப் பெறுகிற 'அவமானகரமான' சூழலில் ஸ்டாலின் சிக்கியிருப்பது காலத்தின் கொடுமை என்பதை அவரது 'சூழ் உலகு' கூட்டம் புரிந்து கொள்ளுமா?

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  DMK President MK Stalin supporters camps shocked over the party MPs, MLAs poster without stalin image.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more