சிவப்பும், மஞ்சளும் சேர்ந்தால் காவி.. பாஜகவை விட அதிகம் அஞ்சும் தவெக.. ஸ்டாலின் ஆவேசம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீட் மற்றும் உயர்சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்தை கண்டு பாஜகவை விட தவெக அரசு அஞ்சுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திராவிடர் கழகத்தின் இருசக்கர வாகனப் பரப்புரைக்கு தடை விதித்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஸ்டாலின், சிவப்பும் மஞ்சளும் சேர்ந்தால் கிடைப்பது காவி என்றும் சாடியுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகம் சார்பாக நீட் தேர்வுக்கு எதிராகவும், உயர்சாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீட்டுக்கு எதிராகவும் வாகன பிரச்சாரம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த சூழலில், திராவிடர் கழகத்தின் வாகனப் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுத்து காவல்துறை தடை விதித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பெரியார் திடலிலேயே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Stalin

இதனால் திராவிடர் கழகத்தின் நடத்தவிருந்த வாகன பிரச்சாரத்தை கடைசி நிமிடத்தில் காவல்துறை தடுத்து நிறுத்தி உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஜூலை 18ஆம் தேதியே பேரணிக்கு அனுமதி கோரி கடிதம் அளித்திருந்த சூழலில், கடைசி நேரத்தில் காவல்துறை தடுத்தது ஏன் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் திராவிடர் கழக வாகன பிரச்சாரத்திற்கு தடை விதித்தற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், NEET, EWS Quota எதிர்ப்புப் போராட்டத்தைக் கண்டு ஒன்றிய பா.ஜ.க. அரசைவிடத் த.வெ.க. அரசுதான் அதிகம் மிரளுகிறது!

தந்தை பெரியாரைக் கொள்கைத் தலைவர் எனச் சொந்தம் கொண்டாடும் த.வெ.க. அரசு பெரியார் திடலிலேயே போலீசாரைக் குவித்திருப்பது ஏன்? திராவிடர் கழகத்தின் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணத்துக்குக் கடைசி நிமிடத்தில் அனுமதி மறுத்ததற்கு என்ன காரணம்? யாரின் அழுத்தத்துக்குப் பணிந்து இதைச் செய்கிறார்கள்?

கடந்த காலங்களில் மிக அமைதியான முறையில், அறவழியில், கண்ணியத்தோடு இதே போராட்டங்களைத் தாய்க்கழகமாம் திராவிடர் கழகம் கட்டுப்பாட்டுடன் நடத்திக் காட்டியிருக்கிறது. அத்தகைய இயக்கத்தின் பரப்புரைப் பயணத்தைத் தடை செய்வது வன்மையான கண்டனத்துக்குரியது.

சிவப்பும் மஞ்சளும் சேர்ந்தால் கிடைப்பது காவி என்பது இதன் மூலம் உறுதியாகிவிட்டது. அடக்குமுறை அரசியலைக் கைவிட்டு, ஆசிரியர் கி.வீரமணியின் பரப்புரைப் பயணத்துக்கு உரிய அனுமதியைத் த.வெ.க. அரசு வழங்கிட வேண்டும் என்று பதிவிடப்பட்டுள்ளது. திமுக மட்டுமல்லாமல் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகமும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+