நொறுங்கிடுச்சே.. ஸ்டாலினுக்கும் எடப்பாடிக்கும் இதுவே வித்தியாசம்.. திமுகவில் துரோகமே பலவீனம்: பிரபலம்
சென்னை: திமுகவை பொறுத்தவரை, அதனுடைய கூட்டணியும், அரசும், அதிகாரிகளும் போன்றவையே அதன் மிகப்பெரிய பலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதேசமயம், சொந்த கட்சி அமைச்சர்களையும், மாவட்ட செயலாளர்களையும் தோற்கடிக்க, சொந்த கட்சியிலேயே நிறைய பேர் கிளம்பியிருக்கிறார்கள்.. இதுதான் திமுகவின் மிகப்பெரிய பலவீனம் என்று பேட்டி ஒன்றில் சொல்கிறார் மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே.
social Talkies என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்திருக்கும் மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே, "கடன் வாங்காமல் ஆட்சியை நடத்த முடியாது. அதிமுக ஆட்சி என்றாலும்கூட, கடன் வாங்குவார்கள்.. ஆனால், அந்த கடனை வாங்கி என்ன செய்கிறார்கள்? என்பதுதான் விஷயமே..

கடன் வாங்கும் அரசு
மாதம் 1300 கோடி ரூபாய், இந்த உரிமைத்தொகைக்கே செலவாகிவிடுகிறது. ஆனால், மக்கள் இதை பற்றி நினைக்காமல், அரசு தரும் ஆயிரம் ரூபாயை பெருமையாக நினைக்கிறார்கள். அரசாங்கம் தங்களுக்கு காசு தருவதாக நினைத்து கொள்கிறார்கள்.. ஆனால், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தை எடுத்துக் கொண்டால், அரசின் கடனை அதிகமாக்காமல் இருப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர்..
திமுகவும் நல்ல விஷயங்கள் செய்திருப்பதை மறுக்க முடியாது.. ஆனால், கடனை அடைப்பதற்கான முயற்சியை செய்தது அதிமுக அரசுதான்.. எடப்பாடி பழனிசாமிக்கும், ஸ்டாலினுக்குமான வித்தியாசம் இதுதான்.
சீனியர்களுக்கு சீட்
2026 தேர்தலில் திமுகவில் உள்ள சீனியர்களுக்கு சீட் தரப்போவதில்லை என்ற பேச்சு பரவலாக உள்ளது. ஒருவேளை இது நடந்தால் திமுகவுக்குதான் பிளஸ் பாயிண்ட்.
உதாரணத்துக்கு துரைமுருகனை எடுத்துக் கொண்டால், அதிக வயதாகிவிட்டது. கட்சியிலுள்ள டாப் சீனியர் அவர்தான்.. அண்ணா காலத்திலிருந்தே எம்எல்ஏவாக இருந்து வருபவர்.. தமிழக சட்டமன்றத்திலேயே மூத்த தலைவர் துரைமுருகன்தான்.. ஆனால், அவருக்கு இந்த முறை சீட் தருவார்களா? அல்லது துரைமுருகனே சீட் கேட்பாரா தெரியவில்லை.
துரைமுருகனுக்கு சிக்கல்
துரைமுருகனின் ஆலோசனை என்பது திமுகவுக்கு அவசியம் தேவை.. ஆனால், தேர்தலில் போட்டியிட்டால், துரைமுருகனை தோற்கடிக்க அவரது மாவட்டத்திலேயே, சொந்த கட்சியிலேயே நிறைய பேர் காத்துட்டு இருக்காங்க..
திமுகவை பொறுத்தவரை, அதனுடைய கூட்டணி, அரசு, அதிகாரிகள் போன்றவையே பலமாக உள்ளது. ஆனால் அதேசமயம், சொந்த கட்சி அமைச்சர்களையும், மாவட்ட செயலாளர்களையும் தோற்கடிக்க, சொந்த கட்சியிலேயே நிறையபேர் கிளம்பியிருக்கிறார்கள்.. இதுதான் திமுகவின் பலவீனம்.
திமுகவின் பலம், பலவீனம்
பல முக்கிய தலைவர்களே, பல அதிருப்திகளில் திமுகவில் உள்ளனர்.. இவர்களின் அதிருப்தி அனைத்தும், திமுக தலைமையின் மீதோ அல்லது கட்சியின் மீதோ கிடையாது.. அந்தந்த மாவட்டத்தில் உள்ள அமைச்சர் பெருமக்கள் மீதும், மாவட்ட செயலாளர்கள் மீதும்தான் அவர்களின் கோபமும், அதிருப்தியும் உள்ளது.
திமுகவுக்கு கெட்ட பெயர்
துரைமுருகனை தவிர்த்துவிட்டு பார்த்தால், பொன்முடி, கேஎன் நேரு, ஐ.பெரியசாமி போன்ற சீனியர்களுக்கு தேர்தலில் சீட் தராமல் போனால், அது மிகப்பெரிய பாதிப்பை திமுகவுக்கு தேர்தலில் ஏற்படுத்திவிடும்.
காரணம், இவர்கள் எல்லாம் தங்களது வெற்றியை மட்டுமே உத்தரவாதப்படுத்துபவர்கள் கிடையாது. தங்களது வெற்றியையும் தாண்டி, தங்களை சுற்றியிருக்கும் ஐந்தாறு சீட்டுகளையும் உத்தரவாதப்படுத்துபவர்கள். அதனால் மேற்கண்ட சீனியர்களுக்கு சீட் இல்லாவிட்டால், தேர்தலில் வேலை பார்க்க மாட்டார்கள்.
இன்னும் சொல்லப்போனால், மாற்றி வேலை பார்க்கவும் சொல்லிவிடுவார்கள். ஆனால் அப்படியொரு ரிஸ்க்கை திமுக எடுக்காது,. அதேசமயம் எவ்வளவு முடியுமோ அந்தளவுக்கு புதுமுகங்களுக்கு சீட் தந்து, எவ்வளவு முடியுமோ அந்தளவுக்கு கெட்டப்பெயர் வாங்கியவர்களுக்கு சீட் தராமல் இருந்தால், அது திமுகவுக்கு நல்லது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
Mano Thangaraj: அமைச்சர் மனோ தங்கராஜுக்கு சீட் இல்லை.. கைவிரித்த திமுக தலைமை.. இதுதான் காரணமா? -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
என்கிட்டயே அழுது சீன் போடுறீயா? நான் என்ன கல்லா.. டிஆர் பாலுவை முற்றுகையிட்ட எஸ்ஆர் ராஜா ஆதரவாளர்கள் -
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
முத்தரையர் ஓட்டை பிரித்த திமுக..ஸ்டாலின் போட்ட மெகா ஸ்கெட்ச்! நத்தம் விஸ்வநாதனை எதிர்க்கும் சேகேஎஸ்! -
தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகள் இறுதியானது.. திமுக தலைமையகத்தில் சுதீஷ் சொன்ன சேதி! -
Election Exclusive: வரம் கொடுத்த சாமி தலையில் கை வைத்த பிரேமலதா.. திமுக தொகுதிகளை கேட்டு அடம்! குட்டையைக் குழப்பு காங்.! -
விஜய் பிரசாரத்தை முடக்கவே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதா? என்ன நடந்தது தெரியுமா? மாநகராட்சி விளக்கம் -
Election Exclusive: வசூல்ராஜா ஹீரோவுக்கு 0..காமெடியன் கருணாஸூக்கு 1! அரசியலின் இன்னொரு மதிமுக மநீம? வைகோ 2.0 கமல்ஹாசன்? -
"ஆபாசமாக பேசி மிரட்டல் விடுக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்".. விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்!












Click it and Unblock the Notifications