சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடிமடியில் கை வைத்த ஓபிஎஸ் டீம்! அதிமுக ஆபிஸ் ஆவணங்கள் ‘இவர்’ வீட்டிலா இருந்தது? வெளியான பரபர தகவல்!

Google Oneindia Tamil News

சென்னை : அதிமுக அலுவலகத்தில் திருடப்பட்ட ஆவணங்களை பறிமுதல் செய்ததாக வரும் தகவல் தவறானது எனவும், ஆவணங்களை வழக்கறிஞர் துணையுடன் சிபிசிஐடியிடம் நாங்களே ஒப்படைத்து விட்டோம் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி விளக்கம் அளித்துள்ளார்.

அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்தநிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் அருகே கடந்த 11-ம் தேதி ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

இதுதொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, அதிமுக அலுவலகத்துக்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். பின்னர் இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது தனிக் கதை.

அடுத்த 3 மணி நேரங்களில்.. சென்னை உட்பட 16 மாவட்டங்களில் மழை வெளுக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கைஅடுத்த 3 மணி நேரங்களில்.. சென்னை உட்பட 16 மாவட்டங்களில் மழை வெளுக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை

அதிமுக அலுவலகம்

அதிமுக அலுவலகம்

பல கட்ட சட்டப்போராட்டங்களுக்குப் பிறகு உயர் நீதிமன்ற உத்தரவின்படி, சீல் அகற்றப்பட்டு, இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமியிடம் கட்சி அலுவலக சாவி ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அதிமுக அலுவலகத்தில் பழனிசாமி தரப்பு நிர்வாகிகள் ஆய்வு செய்தனர். இதனையடுத்து அதிமுக அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் புகார் அளித்திருந்தார்.

 சிபிசிஐடி விசாரணை

சிபிசிஐடி விசாரணை

இதனையடுத்து அதிமுக அலுவலகத்தில் நடந்த மோதல் தொடர்பான 4 வழக்குகளும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்ததோடு, சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி வெங்கடேசன் நியமனம் செய்யப்பட்டார். மேலும் குழுவில் ஆய்வாளர்கள் லதா, ரம்யா, ரேணுகா, செல்வின் சாந்தகுமார் ஆகியோரும்இடம்பெற்றனர். அவர்கள் அதிமுக அலுவலக ஆவணங்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி

கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி

இன்று காலை வரை ஆவணங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகாத நிலையில், சிபிசிஐடி போலீஸ் தரப்பிலிருந்து ஒரு முக்கிய தகவல் வெளியாகியிருந்தது. அதில் அதிமுக அலுவலக கலவர வழக்கில் காணாமல் போன அனைத்து ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. மயமான 113 ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மீட்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து அனைத்து ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் சிபிசிஐடி போலீசார் கூறியதாக தகவல் வெளியானது.

 புகழேந்தி

புகழேந்தி

இந்த நிலையில், கடந்த ஜுலை மாதம் 11ஆம் தேதி அதிமுக அலுவலகத்தில் இருந்து திருடப்பட்டதாக கூறுவது தவறு எனவும், ஆவணங்களை பறிமுதல் சிபிசிஐடி போலீசார் அவற்றை செய்ததாக வரும் தகவல் தவறானது என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி விளக்கம் அளித்துள்ளார். ஆவணங்களை வழக்கறிஞர் துணையுடன் சிபிசிஐடியிடம் நாங்களே ஒப்படைத்து விட்டோம் எனவும் அவர் கூறியுள்ளார். முதலில் ஓபிஎஸ் தரப்பு ஆவணங்களை எடுத்துச் செல்லவேயில்லை என்ற நிலையில், வீடியோ வெளியானது குறிப்பிடத்தக்கது.

English summary
OPS supporter pugazhenthi explained that the information about confiscation of stolen documents from the AIADMK office is wrong and we have handed over the documents to CBCID with the help of a lawyer.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X