வலிமையான தலைவர் மோடி..வளர்ச்சி பாதையில் செல்லும் இந்தியா..கவனமாக எதிர்கொள்வோம்..ஆர்.என்.ரவி
சென்னை: பிரதமர் மோடி போன்ற வலிமையான தலைவர் இருப்பதால் இந்தியா வளர்ச்சி பாதையில் செல்கிறது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். இதனை குலைப்பதற்கு மொழி, இனம், மதம், சாதி என்கிற பெயரில் தொந்தரவுகள் வரக்கூடும். அதனை நாம் கவனமுடன் எதிர்கொண்டு வளர்ச்சி பாதையில் செல்ல வேண்டும் என்றும் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில்
12வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆகியோர் பங்கேற்றனர்.
கொஞ்சம் கஷ்டம் தான்.. அடுத்த 25 ஆண்டுகள் கடுமையானதாகவே இருக்கும்.! ஓப்பனாக சொன்ன ஆளுநர் ஆர்.என்.ரவி

காசி தமிழ் சங்கமம்
பட்டமளிப்பு விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "விரைவான நீதிவழங்கல் முறையை உறுதிப்படுத்துவதே பண்பட்ட, முன்னேறிய சமூகத்தின் குறிக்கோளாக இருக்க வேண்டும். காசிக்கும் தமிழ்நாட்டிற்குமான தொடர்பை ஆங்கிலேயர்கள் சிதைத்தனர். அதனை தற்போது மீட்டெக்கும் வகையில், காசியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது என்றார்.

கலாச்சார பெருமை
தமிழகத்திலிருந்து தோன்றிய சாதுக்கள் மற்றும் முனிவர்கள், பல நூறு ஆண்டுகளாக இந்தியாவில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வை வழங்கி உள்ளனர். இந்திய நாட்டின் தோற்றத்திற்கு, கலாச்சார பெருமை வாய்ந்த தமிழ்நாடு, மிகப்பெரிய பங்களிப்பை தந்துள்ளது.

வலிமையான தலைவர் மோடி
மோடி போன்ற வலிமையான தலைவர் இருப்பதால், இந்தியா மிகப்பெரும் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனை குலைப்பதற்கு மொழி, இனம், மதம், சாதி என்கிற பெயரில் தொந்தரவுகள் வரக்கூடும். அதனை நாம் கவனமுடன் எதிர்கொண்டு வளர்ச்சி பாதையில் செல்ல வேண்டும் என்று பேசினார்.

இந்தியாவின் பாரம்பரியம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆடைவடிவமைப்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, பழங்காலத்தில் ரோம பேரரசுக்கு கூட நமது நாட்டில் இருந்து தான் ஆடைகள் சென்றடைந்தன. இது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். மஸ்லின் என்ற புகழ்பெற்ற ஆடை வகை கூட ஆந்திராவின் மசூலிப்பட்டினம் பகுதியின் பெயரில் இருந்தே தோன்றியது. கடந்த 2000 ஆண்டுகளாகவே நாம் தான் சர்வதேச அளவில் முக்கிய நாடுகளில் ஒன்றாக இருந்தோம். இப்போது நாம் அந்த நிலையை இழந்துள்ளோம். இழந்த இடத்தை மீட்டு, சரி செய்ய நாம் முயன்று வருகிறோம். நமக்கு அனைத்தையும் காட்டிலும் நாடே முக்கியம் என்று கூறினார்.

நாட்டின் வளர்ச்சி
நாட்டின் வளர்ச்சிக்குத் தான் நமது பங்களிப்பு இருக்க வேண்டும். நமது நாடு இப்போது மின்னல் வேகத்தில் அடுத்த கட்டத்திற்குச் சென்று கொண்டு இருக்கிறது. எனவே, அடுத்த 25 ஆண்டுகள் கடுமையானதாகவே இருக்கும். இந்த 25 ஆண்டுகளில் இந்தியா நிச்சயம் நமது இலக்கை அடைந்திருக்க வேண்டும். தன்னிறைவுடன் பிற நாடுகளை நம்பி இருக்காத அளவுக்கு நாம் அடுத்த 25 ஆண்டுகளில் வளர வேண்டும். இதற்கு மாணவர்களாகிய உங்கள் பங்களிப்பும் ரொம்பவே முக்கியம் என்று கூறினார்.

கவனமாக எதிர்கொள்வோம்
இன்றைய தினம் சட்ட பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய ஆளுநர்,மோடி போன்ற வலிமையான தலைவர் இருப்பதால், இந்தியா மிகப்பெரும் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனை குலைப்பதற்கு மொழி, இனம், மதம், சாதி என்கிற பெயரில் தொந்தரவுகள் வரக்கூடும். அதனை நாம் கவனமுடன் எதிர்கொண்டு வளர்ச்சி பாதையில் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.