அரசு மருத்துவ கல்லூரிகளில் பாரா மெடிக்கல் படிப்புக்கு ஜுன் 21 வரை விண்ணப்பிக்கலாம்.. மிஸ் பண்ணாதீங்க
சென்னை: தமிழ்நாடு அரசு மருத்துவ கல்லூரி மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சுயநிதி கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஜுன் 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2 முடித்த மாணவ-மாணவிகள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு அடுத்ததாக மருத்துவ துறையில் பணியாற்றும் நோக்கில் மருத்துவம் சார்ந்த டிகிரி மற்றும் பாரா மெடிக்கல் படிப்புகளை படித்து வருகின்றனர்.
இந்த படிப்புகளை தனியார் கல்லூரிகளில் படிக்கும்போது அதிக செலவு ஏற்படும். இதனால் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சுயநிதி கல்லூரிகளில் இந்த படிப்புகளை படிக்க விரும்புகின்றனர்.

அதன்படி B.Pharm, B.P.T, B.ASLP, B.OPTOm, B.O.T, B.sc பிரிவில் நர்சிங், ரேடியாகிராபி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, ரோடியோ தெரபி டெக்னாலஜி, கார்டியோ பல்மோனாரி பெர்ஃபியூசன் டெக்னாலஜி, மெடிக்கல் லேபாராட்டரி டெக்னாலஜி, ஆபரேஷன் தியேட்டர் மற்றும் அனஸ்தீசியா டெக்னாலஜி, கார்டியாக் டெக்னாலஜி, கிரிட்டிக்கல் கேர் டெக்னாலஜி, டயாலிசிஸ் டெக்னாலஜி, பிசிசியன் அசிஸ்டென்ட், ஆக்சிடென்ட் மற்றும் எமர்ஜென்சி கேர் டெக்னாலஜி, ரெஸ்பிராடரி தெரபி, நியூரோ எலக்ட்ரோ சைக்காலஜி, கிளினீக்கல் நியூட்ரிசியன் உள்ளிட்ட படிப்புகளை தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சுயநிதி கல்லூரிகளில் இந்த படிப்புகளை படிக்க விரும்புவோர் விண்ணப்பம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள இடங்கள் மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்த பல்கலைக்கழகத்தால் அங்கீகாரம் செய்யப்பட்ட சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் 2024-2025ம் கல்வியாண்டில் சேருவதற்காக www.tnmedicalselection.net இணையதளத்தை அணுகி விண்ணப்பிக்கலாம்.
சேர்க்கை செயல்முறை தொடர்பான மாற்றங்கள் மற்றும் அது தொடர்புடைய தகவல்கள் இந்த இணையதளத்தில் தெரிவிக்கப்படும். விண்ணப்பத்தின் தொடக்க நாள் முதல் சேர்க்கை செயல்முறை முடிவடையும் வரை இணையதளத்தை அடிக்கடி விண்ணப்பத்தாரர்கள் பார்வையிட வேண்டும்.
2024-2025ம் ஆண்டில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பில் சேருவது தொடர்பாக இணையதளத்தில் அவ்வப்போது வெளியிடப்படும் அறிவிப்புகள் மற்றும் வெளியீடுகளை பார்வையிட தவறுவதால் ஏற்படும் விளைவுகளுக்கு தேர்வுக்குழு பொறுப்பேற்காது. இணையதளத்தை அணுக முடியாத விண்ப்பத்தாரர்கள் தங்களது பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் அனைத்து அசல் சான்றிதழ்களையும் எடுத்து கொண்டு அருகே உள்ள அரசு மருத்துவக்கல்லூரி/ தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரிக்கு ரேடியாக சென்று அங்குள்ள இணையதள உதவி மையத்தை அணுகி விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யலாம்.
விண்ணப்பத்தாரர்கள் இணையதளத்திலும் தகவல் தொகுப்பேட்டினை தரவிறக்கம் செய்த அச்சுப்படி எடுத்து தங்களது இணையதள பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் கவனமாக படித்து பின் இணையதள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து கட்டாயமாக நிரப்பபட வேண்டிய தகவல்களையும் சம்ரப்பிப்பதை உறுதி செய்யு வேண்டும். இணையதள விண்ணப்ப படிவத்தை ஏற்காத நிகழ்வில் மறுபரீலனைக்கு எந்த ஒரு கடிதம் வாயிலான கோரிக்கைகள் ஏற்கப்படாது.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத இணையதள விண்ணப்பபடிவம் ஏற்றுக்கொள்ளப்படாது. கொடுக்கப்பட்டுள்ள விபரங்களில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்களை பார்க்கலாம். இல்லாவிட்டால் 044-29862045, 044-29862046, 044-28363822, 044-2834822, 044-28365822, 044-28366822, 044-28367822, 044 - 28361674 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் ஜுன் மாதம் 21ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பதவியே வேண்டாம்.. தீயணைப்பு ஆணைய தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்த மாஜி டிஜிபி சங்கர் ஜிவால்! -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
கேள்வி கேட்டா கரண்ட் வருமா? வாய் விட்ட மகேந்திரன்! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்! இப்போ மன்னிப்பு வீடியோ -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
முதியோர் சமூகமாக மாறும் தமிழ்நாடு.. இளைஞர்கள் எண்ணிக்கை சரிவு.. பெரிய சிக்கல்! வெள்ளை அறிக்கை லிஸ்ட் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா -
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
தமிழ்நாட்டு தலைக்கு மேல் கத்தி.. ஏடாகூடமான எல் நினோ! கொஞ்சம் பிசகினாலும் போச்சு! பறந்த வார்னிங்! -
அடி வெளுக்கப்போகும் கனமழை! 7 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications