தமிழக பிராமணர்கள் அச்சத்தில் உள்ளார்கள்.. "ஆட்சியே இருக்காது.." சு.சாமி ஆவேசம்.. ஆளுநருக்கு கடிதம்
சென்னை: தமிழகத்தில் பிராமணர்கள் குறி வைக்கப்படுகிறார்கள், யூதர்களை நாஜி படை தாக்கியதை தமிழக சூழல் நினைவுபடுத்துகிறது எனவே,
தமிழக நிலவரம் பற்றி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு கடிதம் எழுதியிருப்பதாக, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
சென்னை கே.கே.நகரிலுள்ள பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது, ஆன்லைன் வகுப்பில் அரை நிர்வாணமாக வந்து நின்றது போன்ற சம்பவங்கள் தற்போது வெளியே வந்தன.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

ஜாதி பிரச்சினை
இந்த நிலையில்தான், பள்ளி மீதான விசாரணை மற்றும் விமர்சனங்களுக்கு ஒய்ஜி மகேந்திரனின் மகள் மதுவந்தி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.
பிராமணர்கள் நிர்வாகத்திலுள்ள பள்ளி என்பதால் குறி வைக்கப்படுவதாக பகிரங்கமாக குற்றம்சாட்டினர். இந்த நிலையில்தான் சு.சாமி வெளியிட்ட டுவிட்டர் பதிவை பொருத்திப் பார்க்க வேண்டியதாக இருக்கிறது.

சு.சாமி ட்வீட்
சு.சாமி தனது டுவிட்டர் பதிவில் கூறுகையில், தமிழகத்திலுள்ள ஞானி மற்றும் தியாகிகளான பிராமணர்கள் மத்தியில், எழுந்துள்ள அச்ச உணர்வு குறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு கடிதம் எழுதியுள்ளேன். நாஜி படைகள் ஜெர்மனியில் யூதர்களை குறி வைத்து, தாக்குதல் நடத்திய ஆரம்ப கால கட்டத்தை இந்த சம்பவம் நினைவுபடுத்துகிறது. இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி ட்வீட் செய்துள்ளார்.
Recommended Video

தமிழகத்தில் ஆட்சி இருக்காது
"இந்த நிலையில், இன்னொரு நபர் டுவிட்டரில், பள்ளி விவகாரத்தில் நியாயமான "விசாரணை" இல்லையேல் தமிழகத்தில் ஆட்சி இருக்காது..!! -டாக்டர்.சுப்ரமணிய சுவாமி" என்று ட்வீட் போட அதை சு.சாமி ரீடிவிட் செய்துள்ளார். அதாவது, தமிழகத்தில் ஆட்சி இருக்காது என சு.சாமி சொல்வதாக இதை எடுத்துக் கொள்ளலாம். பாலியல் விவகாரத்தில் விசாரணை நடைபெறுவதை எதிர்த்துதான் சு.சாமி ஆவேசமாகியுள்ளார் என்பதை இந்த ரீட்வீட் உறுதி செய்துள்ளது.

பத்மா சேஷாத்ரி பள்ளி
முன்னதாக, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சில நாட்கள் முன்பு வெளியிட்ட அறிக்கையில், அரசியல் ஆதாயத்திற்காக, ஜாதி பிரச்சினையாக மாற்றுகிறார்கள் என்று பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்திருந்தார். இப்போது சு.சாமி போன்றோர் இந்த விஷயத்தில் ஜாதியை முன்வைத்து காய் நகர்த்த ஆரம்பித்துள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications