சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"பெரிய ட்விஸ்ட்".. கிளம்பி "அவரே" இங்கே நேர்ல வர்றாராமே.. எல்லாமே நொறுங்குதே.. எடப்பாடிக்கு தலைவலி

இடைத்தேர்தல் குறித்து பாஜகவுடன் ஆலோசனை நடத்த தருண் சுக் சென்னை வருகிறாராம்

Google Oneindia Tamil News

சென்னை: வரும் இடைத்தேர்தலில் தமிழக பாஜக என்ன முடிவெடுக்க போகிறது? என்ற எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.. இடைத்தேர்தலில் போட்டியிட தயங்குவது ஏன்? என்பது குறித்து சில அனுமானங்கள் வட்டமடித்து கொண்டிருக்கின்றன.. அதேசமயம் நாளைய தினம், பாஜக எடுக்க போகும் முடிவுகள் குறித்தும் ஓரிரு தகவல்கள் கசிந்து வருகின்றன.

ஈரோடு கிழக்கு தொகுதியில், களத்தில் இறங்கி போட்டியிடுவது குறித்து பாஜக இன்னும் முடிவை அறிவிக்கவில்லை.. எடப்பாடி + ஓபிஎஸ் இவர்கள் 2 பேரில் யாராவது ஒருவருக்கு ஆதரவை வழங்கினாலும், அது எம்பி தேர்தல் களத்தை அசைத்து பார்த்துவிடுமே என்ற யோசனையும் அக்கட்சிக்கு உள்ளது.

அதனால், கூட்டணியில் உள்ள அதிமுகவையும், வரும் எம்பி தேர்தலையும் கணக்கில் வைத்து, அவசரப்பட்டு முடிவெடுக்காமல் தீவிர ஆலோசனையில் இறங்கி வருகிறது.

குடியரசுத் தலைவர் உரையில் “காசி தமிழ் சங்கமம்”.. ஒற்றுமையை வெளிப்படுத்தியதாக திரௌபதி முர்மு புகழாரம் குடியரசுத் தலைவர் உரையில் “காசி தமிழ் சங்கமம்”.. ஒற்றுமையை வெளிப்படுத்தியதாக திரௌபதி முர்மு புகழாரம்

தலைவலியில் ஓபிஎஸ்

தலைவலியில் ஓபிஎஸ்

ஆனால், பாஜக என்ன சொல்ல போகிறதோ? என்ற பதைபதைப்பில் ஓபிஎஸ்ஸூம் உள்ளதாக தெரிகிறது.. அதனால்தான் தன்னுடைய வேட்பாளர் உள்ளிட்ட எந்த அறிவிப்பையும் ஓபிஎஸ் உடனடியாக தெரிவிக்காமல், பாஜகவின் முடிவுக்காக காத்திருக்கிறார். எனினும், தேர்தல் பணிக்குழுவையும் அமைத்துவிட்டு, பாஜக ஏன் இன்னமும் தன் முடிவை அறிவிக்கவில்லை என்ற குழப்பமும், சந்தேகமும் வட்டடித்து வருகின்றன. எடப்பாடி பழனிசாமி + ஓபிஎஸ் என 2 பேரில் ஒருவரை மட்டும் ஆதரித்தால் சர்ச்சை ஏற்படலாம் என்று பாஜக கருதுவதாக தெரிகிறது..

சுயேட்சை

சுயேட்சை

எனவே, இந்த 2 அணிகளில் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமோ அவர்களை ஆதரிப்பது என்று பாஜக மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளார்களாம்.. ஒருவேளை இரட்டை இலை சின்னம் 2 அணிகளுக்குமே கிடைக்காமல் முடங்கும் பட்சத்தில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணியினரும், ஓபிஎஸ் அணியினரும் சுயேட்சை சின்னத்தில்தான் போட்டியிட முடியும்... ஆனால் சுயேட்சை சின்னத்துக்கு ஆதரவு கொடுக்க மாட்டோம், அதிமுக இரட்டை இலை சின்னம் கிடைக்காத நிலையில், "நடுநிலை" வகிக்க முடிவு செய்திருப்பதாக 2 நாட்களாகவே தகவல்கள் பரபரத்து வருகின்றன.

சீனியர்ஸ் அப்செட்

சீனியர்ஸ் அப்செட்

எனினும், பாஜகவுக்குள் சில அதிருப்திகள் வெடிக்க துவங்கி உள்ளனவாம்.. தேர்தலில் போட்டியிடும் எண்ணம், தமிழக மாநில பாஜகவுக்கு குறைவாக உள்ளதாக சொல்கிறார்கள்.. தேர்தலில் போட்டியிடாமல் போனாலோ, அல்லது நடுநிலை வகித்தாலோ, அது எடப்பாடி பழனிசாமிக்கே சாதகமாக முடியும் என்று பாஜகவில் உள்ள சில சீனியர்கள் கருதுகிறார்களாம்.. அதுமட்டுமல்ல, தங்களை கலந்தாலோசிக்காமல், வாசனை சந்தித்து பேசி, தேர்தலில் அதிமுக போட்டியிடுவதாக எடப்பாடி பழனிசாமி தனித்து அறிவித்து விட்டதும், பாஜக சீனியர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.. அதனால்தான், இடைத்தேர்தலில் போட்டியிட்டே ஆக வேண்டும் என்று நினைக்கிறார்களாம்.

கிளைமேட்

கிளைமேட்

தங்கள் விருப்பத்தை, மாநில தலைமை கண்டுகொள்ளாமல் இருக்கவும், டெல்லி வரை இந்த புகார் மெசேஜ்ஸை சீனியர்களே கொண்டு சென்றுள்ளதாக சொல்கிறார்கள். கடந்த 2, 3 நாட்களாகவே தொடர் ஆலோசனையில் பாஜக தரப்பு இறங்கிவருகிறது.. இன்றும்கூட மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் தரப்பு ஆலோசனை நடத்துகிறது.. எனினும் முடிவு எதுவும் எடுக்கப்படாத நிலையில், இப்போது பாஜகவின் அரசியல் கிளைமேட்டே டக்கென மாறி வருகிறது.. டெல்லியில் இருந்து நாளை, பாஜக தேசிய பொதுச்செயலர் தருண் சுக் சென்னை வரப்போகிறாராம்.. கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து பேச போகிறார்.. அதன்பிறகு வேட்பாளர் யார் என்பதையும் அவர் அறிவிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கசிந்த சீக்ரெட்

கசிந்த சீக்ரெட்

வரும் 3ம் தேதி வரை சென்னையில் தங்கியிருக்க போகிறாராம் தருண்.. தேர்தல் பணிகள் குறித்து, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக சொல்கிறார்கள்.. தேர்தலில் பாஜக போட்டியிடுவதில்லை, தேர்தலில் நடுநிலைமை, தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை, என பல்வேறு தகவல்கள் மாறி மாறி கசிந்து கொண்டிருந்த நிலையில், தருண் சுக் சென்னை வருவது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், இடைத்தேர்தலில் போட்டியிட, தமிழக பாஜக தயங்குவதற்கு வேறு ஒரு காரணம் சொல்லப்பட்டது.. தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி பாஜகதான் என்று இத்தனை நாள் சொல்லி வரும் நிலையில், அந்த பிம்பம் இப்போதுதான் மெல்ல மெல்ல மக்களிடம் படிந்து வருகிறது..

தகரும் பிம்பம்

தகரும் பிம்பம்

அப்படி இருக்கும்போது, இந்த நேரத்தில், விஸ்வரூப திமுகவுடன் மோதினால், வெற்றி வாய்ப்பை இழந்து, அதன்மூலம் பலவீனமாக தெரிந்துவிடுமோ என்று அண்ணாமலை தரப்பு நினைக்கிறதாம்.. எனவே, வரும் எம்பி தேர்தல் வரை இந்த பிம்பத்தையே தொடர்ந்தால்தான், கட்சிக்கு வலு சேர்க்கும் என்றும் யோசிக்கிறதாம். அதனால்தான், இதுநாள்வரை இடைத்தேர்தல் குறித்து தயக்கம் காட்டுவதாக சொல்லப்படுகிறது. எனினும், சீனியர்கள் சிலர் டெல்லி வரை விஷயத்தை கொண்டு போயிருந்ததாக சொல்லப்பட்ட நிலையில், தருண் சுக் சென்னை வருவது, அதிக ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது.

English summary
Sudden Change in TN BJP and Is Tarun Chugh going to announce BJP candidate tomorrow
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X