தமிழகத்தில் தொடர்ந்து சரியும் கொரோனா.. ஆனால் திடீரென அதிகரித்த உயிரிழப்பு.. ஏன் என்னாச்சு?
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பில் சென்னை தொடர்ந்து முதலிடம் பிடித்து வந்த நிலையில் கோவை அதனை தொடர்ந்து முந்தி வருகிறது. 112 பாதிப்புகளுடன் கோவை முதலிடத்தில் உள்ளது.

குறையும் கொரோனா
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது கொரோனா 800-க்குள் குறைந்து விட்டது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா மொத்த பாதிப்பு 27,23,245 உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா உயிரிழப்பு
கொரோனா உயிரிழப்பு திடீரென அதிகரித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு 12 ஆக குறைந்த கொரோனா உயிரிழப்பு தற்போது 17 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக கொரோனாவுக்கு 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல் கோவையிலும் 3 பேர் இறந்துள்ளனர். செங்கல்பட்டில் 2 பேரும், தஞ்சாவூரில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 36,432 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 764 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 26,78,371 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

கோவை ஆதிக்கம்
8,442 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,01,738 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 5,28,32,931 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 107 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தினசரி பாதிப்பில் தொடர்ந்து முதலிடம் பிடித்து வந்த சென்னை இரண்டாவது இடம் சென்று ஆறுதல் அளிக்கிறது.

இரண்டு சதம்
கோவை 112 பாதிப்புகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. செங்கல்பட்டில் 65 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 18 பேருக்கும், மதுரையில் 6 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 8 பேருக்கும், திருவள்ளூரில் 24 பேருக்கும், திருச்சியில் 20 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 65 பேருக்கும், ஈரோட்டில் 76 பேருக்கும், சேலத்தில் 43 பேருக்கும், நாமக்கல்லில் 48 பேருக்கும், தஞ்சாவூரில் 18 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையிலும், கோவையிலும் தினசரி பாதிப்பு தொடர்ந்து 100-ஐ கடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications