சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரிவர்ஸ் வேக்சின்.. கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறிவதில் முதல் கட்ட வெற்றி.. சுதா சேஷய்யன்

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறிவதில் முதல் வெற்றி கிடைத்துவிட்டதாக எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    வைரசுக்கு தடுப்புமருந்து கண்டறிவதில் முதல் கட்ட வெற்றி - சுதா சேஷய்யன்

    தொற்று நோய் போல் பரவி வரும் கொரோனாவை தடுக்க தடுப்பு மருந்து கண்டுபிடிக்குமாறு உலக நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் தமிழகத்தில் எம்ஜிஆர் பல்கலைக்கழகமும் தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் வைரசுக்கு தடுப்புமருந்து கண்டறிவதில் முதல் கட்ட வெற்றி கிடைத்துள்ளதாக எம்ஜிஆர் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

    எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம்

    எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம்

    இதுகுறித்து எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன் கூறுகையில் Sars Cov 2வை தடுப்பதற்காக தடுப்பு மருந்துகள் உலகளாவிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்திலும் நாங்கள் இதற்கான ஆய்வுகளை மேற்கொண்டோம்.

    ஆய்வுகள்

    ஆய்வுகள்

    கடந்த 3 வாரங்களாக இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. முன்பெல்லாம் ஒரு வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க வேண்டுமானாலும் அந்த வைரஸை ஆய்வகத்தில் வளர வைத்து வைரஸ் கல்ஷர் போட்டு அதற்கு அப்பறம் நேரடியாக அந்த வைரஸுடைய மருந்துகளை போட்டு சோதனை நடத்த வேண்டும். இதனால் அதிக நேரம் எடுக்கும். அதுமட்டுமல்லாமல் இதனால் ஆபத்துகளும் அபாயங்களும் அதிகம்.

    தகவல் தொழில்நுட்பம்

    தகவல் தொழில்நுட்பம்

    வைரஸ் கல்சர் போடும் போது அந்த ஆய்வகத்திலிருந்து அந்த வைரஸ் பரவும் வாய்ப்புகள் எல்லாம் இருக்கிறது. ஆனால் இப்போது ஒரு புது டெக்னிக் இருக்கிறது. கடந்த 10, 15 ஆண்டுகளில் ரிவர்ஸ் வேக்சினாலஜி என பெயராகும். எப்படி தகவல் தொழில்நுட்பங்கள் பல இடங்களில் பல முன்னேற்றங்களை கொடுத்துள்ளதோ அது போல் வைரஸ் ஆய்வுகளிலும் இந்த தகவல் தொழில்நுட்பம் முன்னேற்றங்களை கொடுத்துள்ளது.

    ரிவர்ஸ் வேக்சினாலஜி

    ரிவர்ஸ் வேக்சினாலஜி

    Bio Informatics-ன்னு ஒரு துறை இருக்கிறது. இதற்கு உயிரி தகவலியல் என சொல்லலாம். இந்த பயோ இன்பர்மேட்டிக்ஸை வைத்துதான் ரிவர்ஸ் வேக்சினாலஜி என்ற முறையை பணியாற்றியுள்ளோம். இதில் வைரஸ் தேவையில்லை. வைரஸின் மரபணு தொடரை எடுத்து வச்சிக்கிட்டு கணினி பல பர்முடேஷன் காமுடேஷன் போட்டு பார்த்து ரிவர்ஸ் வேக்சினாலஜியில் முதற்கட்டமாக எந்த தடுப்பு மருந்து வேலை செய்யும் என்பதை கண்டுபிடிக்கலாம்.

    நோய் எதிர்ப்புவியல் துறை

    நோய் எதிர்ப்புவியல் துறை

    நாங்களும் இப்போது அதைத்தான் செய்துள்ளோம். எங்களுடைய நுண்ணுயிரியல் துறை மற்றும் நோய் எதிர்ப்புவியல் துறை சார்பாகவும். நோய் பரவுவியல் துறை சார்பாகவும் இதை கண்டுபிடித்தோம். நோய் எதிர்ப்புவியல் துறையின் தலைவர் டாக்டர் புஷ்கலா, நோய் பரவுவியல் துறையின் தலைவர் டாக்டர் சீனிவாஸ் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி எங்களுடயை ஆராய்ச்சி மாணவர் டாக்டர் தமன்ன பஜந்திரி, நான் ஆகிய 4 பேரும் சேர்ந்து ஒரு வேக்சின் கேன்டிட்டேட்டை கண்டுபிடித்துள்ளோம்.

    அனுமதி

    அனுமதி

    கொரோன வைரஸை தடுக்கக் கூடிய synthetic polypeptide-ஐ உருவாக்கியிருக்கோம். இந்த பாலிபெப்டைக்கு நாங்கள் இன்னும் பெயர் வைக்கவில்லை. இது முதல் கட்டம்தான். இந்த முதல்கட்டத்தை தாண்டி இன்னும் பல படிகள் இருக்கின்றன. அந்த படிகளுக்காக ஒழுங்குமுறை அமைப்புகளிடம் இருந்து அனுமதி வாங்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

    70 சதவீதம்

    70 சதவீதம்

    அது போல் அமெரிக்காவில் இருக்கக் கூடிய தடுப்பு மருந்து நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த முதல்கட்டத்தில் எங்களுக்கு 70 சதவீதம் சரியான வேக்சின் கேண்டிடேட் கிடைத்துள்ளது. இதை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து கொண்டு போய் அந்த நடவடிக்கைகள் முடிந்தால்தான் ஒரு தடுப்பு மருந்து கொண்டுவர முடியும் என்றார்.

    English summary
    Dr MGR Medical University Vice Chancellor Sudha Sesaiyan says that her team of experts got first phase victory in finding vaccine for corona.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X