கீதாலட்சுமி ஓய்வு.. எம்ஜிஆர் மருத்துவ பல்கலை துணைவேந்தராக சுதா சேஷையன் நியமனம்
Recommended Video

சென்னை: எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சுதா சேஷையனை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக டாக்டர் கீதாலட்சுமி கடந்த 2015-ஆம் ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி பதவியேற்றார்.

அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் எம்பி சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், நடிகர் சரத்குமார், டாக்டக் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதா லட்சுமி ஆகியோர் வீடுகளில் 2017-ஆம் ஆண்டு வருமான வரித் துறை சோதனை நடத்தினர்.
அப்போது துணைவேந்தராக இருந்த கீதாலட்சுமியின் மீது குற்றச்சாட்டுகள் குவிந்தன. ஓமியோபதி மருத்துவத்தில் எம்டி முதுகலை படிப்பு மற்றும் பிஎச்டி கொண்டு வர காரணமாக இருந்தவர் கீதாலட்சுமி. இவரது பதவிக் காலம் கடந்த டிசம்பர் 27-ஆம் தேதியுடன் ஓய்வுபெற்றார்.
இந்நிலையில் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக சுதா சேஷையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வழங்கினார்.
இவர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் ஆளுநரை சந்தித்து நியமன ஆணையையும் சுதா சேஷையன் பெற்று கொண்டார். ஜெயலலிதா உடலுக்கு எம்பார்மிங் செய்த குழுவில் ஒருவராக இருந்தவர் சுதா.
தனது 30-ஆவது வயதில் அறுவை சிகிச்சை நிபுணரான சுதா சிறந்த எழுத்தாளரும் ஆவார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications