இது என்ன புதுசா இருக்கு..! இந்தி பேசுறவங்க நல்லவங்க..அதனால் இந்தி கத்துக்கனும்.! சொல்கிறார் சுஹாசினி
சென்னை : இந்தி ஒரு நல்ல மொழி அதை கற்றுக் கொள்ள வேண்டும் எனவும், இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள் அதனால் அவர்களுடன் பேசவேண்டும் என்பதற்காகவாவது இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என வேண்டும் என நடிகையும் இயக்குனர் மணிரத்தினத்தின் மனைவியுமான சுஹாசினி கூறியுள்ளார்.
Recommended Video
அலுவல் மொழியாக இந்தி மொழியை அறிவிக்க வேண்டும் என அமித்ஷா எந்த நேரத்தில் கூறினாரோ தெரியாது, அவர் சொல்லியது மறைந்தாலும் அதற்குப் பிறகான இந்தி மொழி குறித்த சர்ச்சை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கல்வி, சினிமா, அரசியல் என அனைத்து துறைகளிலும் இந்தி மொழியை புகுத்த மத்திய அரசு முயல்வதாக கூறி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கல்வி நிறுவனங்களும் குறிப்பாக சினிமா பிரபலங்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்தி சர்ச்சை
உச்சபட்ச மோதலாக அஜய் தேவ்கன் - கிச்சா சுதீப் மோதலைச் சொல்லலாம். கடந்த இரு நாட்களுக்கு முன்னர் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் கன்னட நட்சத்திரம் கிச்சா சுதீப் ஆகியோர் ட்விட்டரில் இந்தி தேசிய மொழியா என்பது குறித்து வார்த்தைப் போரில் ஈடுபட்டனர். இந்தி மொழி பிரச்சினை அரசியல் என்பதை தாண்டி சினிமாவிலும் ஆதிக்கம் செலுத்த நினைப்பதாக பலரும் புகார் கூறி வரும் நிலையில், தற்போது பலரும் இது குறித்து பேசி வருகின்றனர்.

தமிழுக்கு ஆதரவு
ஆச்சர்யம் அளிக்கும் வகையில் தமிழுக்கு ஆதரவாக இந்தி பாடகர் சோனு நிகம் பேசியது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அஜய் தேவ்கனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அவர், தமிழகர்கள் ஏன் இந்தி பேச வேண்டும், இந்தி தேசிய மொழி என்று அரசியலமைப்புச் சட்டத்தில் எங்கு கூறப்பட்டுள்ளது என அடுக்கடுக்காக பல கேள்விகளை கேட்டார்.

சுகாசினி பேச்சு
இந்நிலையில் தான் நடிகையும் இயக்குனர் மணிரத்தினத்தின் மனைவியுமான சுஹாசினி, "இந்தி ஒரு நல்ல மொழி அதை கற்றுக் கொள்ள வேண்டும் எனவும், இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள் அதனால் அவர்களுடன் பேசவேண்டும் என்பதற்காகவாவது இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என வேண்டும் என கூறியுள்ளார். சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," எல்லா மொழிகளையும் தெரிந்து கொண்டே ஆக வேண்டும்.

மொழிகளை மதிக்க வேண்டும்
எல்லா மொழிகளையும் மதித்தே ஆகவேண்டும். எல்லா மொழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டும். எங்கள் வீட்டில் காலையில் சமைக்கும் பெண் தெலுங்கு பேசுகிறார்கள். இரவில் சமைப்பவர் ஹிந்தி பேசுகிறார். எனக்கு இந்த மொழிதான் பிடிக்குமென்றால் சாப்பாட்டிற்கு என்ன செய்வது. எல்லோரும் எல்லா மொழியும் தெரிந்து கொள்ள வேண்டும். அனைத்து மொழிகளையும் சமமாக மதிக்க வேண்டும். இந்தி ஒரு நல்ல மொழி அதை கற்றுக் கொள்ள வேண்டும்.

இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள்
இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள். அதனால் அவர்களுடன் பேசவேண்டும் என்பதற்காக அதாவது இந்தி கற்றுக்கொள்ள வேண்டும். தமிழர்களும் நல்லவர்கள் அவர்களுடன் பேச தமிழ் கற்றுக் கொண்டால் சந்தோஷப்படுவார்கள். எனக்கு எத்தனை மொழிகள் தெரியும் அவ்வளவு சந்தோஷம். பிரெஞ்சு மொழி கூட எனக்கு ரொம்ப பிடிக்கும். அதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என ஆசை. அதற்காக நான் தமிழ் இல்லை என்று ஆகிவிடுமா.?" என சுகாசினி கூறியுள்ளார்
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications