பார்த்தீங்களா..நம்ம "சிறுத்தை"தான்..குஷியில் விசிக..திடீர் திடீர்னு நிக்குதாம், உடையுதாம், உருளுதாம்

: திருமாவளவனின் துபாய் விமான நிலைய போட்டோ வைரலாகி கொண்டிருக்கிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: விசிக தலைவர் திருமாவளவனின் ட்விட்டர் காலையில் இருந்தே படுபிஸியாக காணப்படுகிறது.. ஏராளமான தொண்டர்கள் வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள்..!

வடமாவட்டங்களையே சுற்றி சுற்றி வலம் வந்து கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது என்று நினைத்து, அடுத்த அதிரடியில் குதித்துள்ளார் விசிக தலைவர் திருமாவளவன்.. அந்த வகையில், சமீபகாலமாகவே, தன்னுடைய அரசியலை அண்டை மாநிலங்களில் விரிவுபடுத்தி வருகிறார்..

கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மும்பை என்று பல்வேறு மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டு, கட்சியை பலப்படுத்தி வருகிறார்..

 திருமாவளவன்

திருமாவளவன்

இப்போது ஒரு படிமேலே, ரஷ்யாவுக்கு சென்றுள்ளார்.. ஒருவார காலம் இந்த பயணம் மேற்கொண்டுள்ளார்.. ரஷ்யாவிலிருந்து வந்துள்ள அழைப்பை ஏற்று அங்குள்ள கசான் நகருக்கு நேற்றைய தினம் புறப்பட்டு சென்றுள்ளார்.. உலக ஹலால் தின மாநாட்டில் சிறப்புரை ஆற்றுகிறார்.. மேலும், ரஷிய இஸ்லாமிய உலக கசான் சம்மிட்டிலும் கலந்துகொண்டு உரைநிகழ்த்த போகிறார்.. மேலும், தமிழர் அமைப்புகளையும் சந்தித்து பேசுவதுடன் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள உள்ளார்.

 ரசியா - ரஷ்யா

ரசியா - ரஷ்யா

திருமாவளவனின் இந்த ரஷ்ய பயண மிக சிறப்பாக அமையும், அத்துடன் கட்சிக்கு வலிமை தரக்கூடியதாக அமையும் என்றே நம்பப்படுகிறது.. இந்நிலையில், திருமாவளவனின் போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. அந்த போட்டோவை துபாய் ஏர்போர்ட்டில் எடுத்துள்ளார்.. பச்சை கலர் டீ-ஷர்ட், பேண்ட், கழுத்தில் ஷால், ஷூ, கூலிங்கிளாஸ், என ஸ்மார்ட் லுக்குடன் காணப்படுகிறார் திருமா.

 டீ-ஷர்ட்

டீ-ஷர்ட்

அந்த போட்டோவை ட்விட்டரிலும் ஷேர் செய்துள்ளார்.. "ரசியா செல்வதற்காக தற்போது துபாய் விமான நிலையத்தில்" என்று திருமா ஒரு கேப்ஷனும் அதற்கு பதிவிட்டுள்ளார்.. இதை பார்த்ததுமே சிறுத்தைகள் உற்சாகமாகிவிட்டனர்.. செம்ம ஸ்டைலான லுக் அண்ணா என்றும், என்ன சார் இவ்வளவு ஸ்டைல்லா இருக்கீங்க என்றும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர், என்னாது "ரசியா".. ஷ வ தவிர்கிறாராமா.. அப்ப ஸ்டாலின "ச்டாலின்" கூப்டுவிங்களா" என்று ஒருவர் கேள்வி கேட்டுள்ளார்..

 ச்டாலின்

ச்டாலின்

இன்னொருவரோ, திடீர் திடீர்னு நிக்குதாம்,உடையுதாம்,உருளுதாம்....கோபாலு பயந்தே போயிட்டானாம் என்று திருமாவின் போட்டோவை பார்த்து கிண்டலாக கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், ரஷ்ய பயணத்திற்காகவும் அங்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது அணிவதற்காகவும் திருமாவளவனுக்கு பிரத்யேக முறையில் கோட் சூட்கள் சமீபத்தில்தான் வாங்கப்பட்டது.. இன்னும் அந்த கோட்-சூட் போட்டோ எப்போது வருமோ தெரியவில்லை.. விசிக சிறுத்தைகள் திருமாவின் ட்விட்டர் பக்கத்திலேயே ஆர்வமாக காத்தும் கிடக்கின்றனர்.. பார்ப்போம்..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+