ரூ.100 நோட்டு உங்க கிட்ட இருந்தாலே 6 லட்சம் அள்ளலாம்.. இந்த நம்பர் இருக்கா? சூப்பர் சான்ஸ் பாருங்க
சென்னை: பழைய ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் உங்களிடம் இருந்தாலே, லட்சக்கணக்கில் வருமானத்தை அள்ளலாம் என்று ஆன்லைன் விளம்பரங்கள் அடிக்கடி வருவதுண்டு.. அந்தவகையில், 100 ரூபாய் நோட்டு இருந்தாலே, உங்களது வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும் என்று, சோஷியல் மீடியாவில் மீண்டும் கவர்ச்சிமிக்க விளம்பரங்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.. பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தாலே லட்சக் கணக்கில் சம்பாதித்துவிட முடியாது.. இதுகுறித்து பரவிவரும் செய்தியைதான் தற்போது பார்க்க போகிறோம்.
எப்போதுமே ஓல்டு இஸ் கோல்டு என்பார்கள்.. அது பழைய நாணயங்கள், ரூபாய் நோட்டுகளுக்கும் பொருந்தும் உண்மையாகும். சர்வதேச சந்தையில் பழைய மற்றும் அரிதான ரூபாய் நோட்டுக்களுக்கு டிமாண்டுகள் அதிகமாகவே உள்ளன.. அந்தவகையில், 100 ரூபாய் நோட்டுக்களுக்கு இந்த கிரேஸ் தற்போது எகிறியிருக்கிறது.

காரணம், 100 ரூபாய் நோட்டுகளின் தேவை அதிகரித்துள்ளதால், அவற்றை பல லட்சம் ரூபாய் விலை கொடுத்து வாங்க நிறைய பேர் தயாராக உள்ளனர்.. இப்போதைக்கு குறிப்பிட்ட 100 ரூபாய் நோட்டுக்கு, 6 லட்சம் ரூபாய் வரை கிராக்கி இருக்கிறதாம்.. ஆனால், அனைத்து 100 ரூபாய் நோட்டுக்களுக்கும் இது பொருந்தாது.. குறிப்பிட்ட அம்சங்கள் உங்களிடமுள்ள ரூ.100 நோட்டில் இருக்க வேண்டும்.
இந்த ஸ்பெஷல் நம்பர் இருக்கிறதா
அதாவது, ரூ.100 நோட்டுகளில் "786" என்ற சீரியல் நம்பர் இருக்க வேண்டும்.. இந்த எண் கொண்ட ரூபாய் நோட்டுகள் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்தவை. அத்துடன், முஸ்லீம் சமூகத்தில் இந்த எண்ணுக்கென பிரத்யேகமான மதிப்பும் உள்ளது.. மகிழ்ச்சி, செழிப்பின் அடையாளமாகக் இந்த எண் கருதப்படுகிறது. எனவே, ஸ்பெஷல் நம்பர் என்பதால், இந்த நம்பர் உள்ள ரூபாய் நோட்டுக்களை கணிசமான தொகையை கொடுத்து வாங்க நிறைய பேர் தயாராக உள்ளனர்.
100 ரூபாய் நோட்டின் முன்பக்கத்தில் 786 என்ற நம்பர் இருக்க வேண்டும். மகாத்மா காந்தியின் தெளிவான படம் இடம்பெற்றிருக்க வேண்டும். விற்பனை செய்யப்படும் 100 ரூபாய் நோட்டுக்கள் கிழிந்த நிலையில் இருக்கக்கூடாது..
விற்பனையாளர் பதிவு
மேற்கண்டவைகளுடன் 100 ரூபாய் நோட்டுக்கள் உங்களிடம் இருந்தால், OLX -ல் விற்பனை செய்யலாம்.. அப்படி விற்பனை செய்வதற்கு முதலில் அந்த இணையதளத்தில் விற்பனையாளராக (seller) பதிவு செய்து கொள்ள வேண்டும். பிறகு உங்களிடமுள்ள 100 ரூபாய் நோட்டை, தெளிவாக போட்டோ எடுத்து, அப்லோடு செய்ய வேண்டும்.
விளம்பரம் வெளியிடப்பட்டதும், பழைய நோட்டுகளை வாங்க விரும்பும் நபர்கள் உங்களை தொடர்புகொண்டு பணம் கொடுத்து 100 ரூபாயை வாங்கிக்கொள்வார்கள்..
நாணயங்கள் பழைய நோட்டுகள்
100 ரூபாய் என்றில்லை, 100 ரூபாய் மட்டுமல்ல, உங்களிடம் ரூ.1, 5, 10, 20, 50 ரூபாய் நோட்டுகள் இருந்தாலும், அதற்கும் ஆன்லைனில் நல்ல கிராக்கி உள்ளதாக சொலகிறார்கள். OLX போன்றே, Quikr, India Mart, E-bay போன்ற வெப்சைட்டிலும் விற்கலாம். இதில், E-bay வெப்சைட் பழைய நோட்டுகள் அல்லது நாணயங்களை விற்பனை செய்வதற்கானது.
இந்த ரூபாய் நோட்டுகளுக்கு, அந்த சமயத்தில் இருக்கும் டிமாண்ட் மற்றும் கஸ்டமர்களின் விருப்பத்தை பொறுத்தே பணம் கிடைக்கும். ஆனால், இந்த விஷயத்தில் முழுக்க முழுக்க கவனமுடன் நீங்கள் மட்டுமே செயல்பட வேண்டும். ஏனென்றால், ஆன்லைன் மூலமாக ரூபாய் நோட்டுகளையும் நாணயங்களையும் விற்பனை செய்வதையும், வாங்குவதையும் ரிசர்வ் வங்கி துளியும் ஆதரிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications