புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா பெற சூப்பர் சான்ஸ்! அரசு தந்த அதிர்ஷ்டம்.. பிப்ரவரி 28 வரைதான் டைம்
சென்னை: நீண்டகாலமாக பட்டா கிடைக்காமல் தவித்த சென்னை உள்ளிட்ட நகரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஒரு மிகப்பெரிய நிம்மதி செய்தி வந்துள்ளது.. தமிழக அரசு இப்படியொரு சர்ப்ரைஸை தந்துள்ளது. இது தொடர்பான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.. அதுகுறித்த விவரங்களை இங்கே சுருக்கமாக பார்ப்போம்...!!
தமிழகத்தில் புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்க, சிறப்பு வரன்முறை திட்டம், கடந்த வருடம் அறிவிக்கப்பட்டது. பல்வேறு தொழில்நுட்ப மற்றும் புவியியல் காரணங்களால் பட்டா பெற முடியாத மக்களுக்கு உதவும் வகையில் இது அப்போது வடிவமைக்கப்பட்டது.

புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா
இந்த திட்டம், நகரங்களின் எல்லையில் இருந்து, 8 அல்லது 16 கி.மீ., சுற்றளவுக்குள், பெல்ட் ஏரியா எனப்படும் இடங்களில் வசிப்போருக்கானது.. இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமே, சட்டப்பூர்வமாக நில உரிமையின்றி தவிக்கும் எளிய மக்களுக்கு ஒரு நிரந்தர தீர்வை வழங்குவதுதான். இதன் மூலம் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் தங்களின் ஆவணங்களை சமர்ப்பித்து நிலத்தை வரன்முறை செய்து கொள்ள முடியும்.
நகரங்களின் எல்லைப்பகுதிகளில் இருந்து குறிப்பிட்ட சுற்றளவுக்குள் அமைந்துள்ள இடங்கள்தான் பெல்ட் ஏரியா என அழைக்கப்படுகின்றன. ஆனால் இந்த பகுதிகளில் பல தலைமுறைகளாக மக்கள் வசித்து வந்தாலும், நில வகைப்பாடு உள்ளிட்ட பல்வேறு விதிகளால் அவர்களுக்கு சொந்தமாகப் பட்டா வழங்க முடியாத சிக்கல் நீடித்து வந்தது. இந்த நிலங்களை வரன்முறைபடுத்த முடியாத சூழல் நிலவியது.
தமிழக அரசு சூப்பர் சான்ஸ்
அதனால்தான் மக்களின் இந்த நியாயமான கோரிக்கைகளை நீண்டகாலமாகப் பரிசீலித்த தமிழக அரசு, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு அரசாணையை வெளியிட்டு இந்த சிறப்பு வரன்முறை திட்டத்தை அமல்படுத்தியது.
இப்படிப்பட்ட சூழலில், நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள புறம்போக்கு நிலங்களில் குடியிருப்பவர்கள் தங்கள் நிலத்தை வரன்முறைப்படுத்தி பட்டா பெறுவதற்கான காலக்கெடு வரும் பிப்ரவரி 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கால அவகாசம் நீட்டிப்பு
இந்த கால அவகாசம் நீட்டிப்பு, விடுபட்ட தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு ஒரு கடைசி வாய்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான விரிவான வழிகாட்டுதல்களை அந்தந்த மாவட்ட வருவாய்த் துறையினர் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக, தமிழக அரசு பிறப்பித்து உள்ள அரசாணையில் உள்ளதாவது:
"அரசுக்கு ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களுக்கு, சிறப்பு வரன்முறை திட்டத்தில் பட்டா கேட்டு வரும் மனுக்களை பரிசீலிக்க, சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு கூட்டம் இதுவரை ஆறு முறை நடந்துள்ளது. அதில், 7,458 நில தொகுதிகளில், 80,816 பேருக்கு பட்டா வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பிப்ரவரி 28 வரைதான் டைம்
இதில், 76,229 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது, மீதமுள்ள, 4587 பேருக்கு விரைவில் பட்டா வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்துக்கான கால அவகாசம், 2025 டிச., 31ல் முடிந்தது. பின், 2026 ஜன., 31 வரை நீட்டிக்கப்பட்டது. இது தொடர்பான மனுக்கள் தொடர்ந்து வருவதாக, மாவட்ட கலெக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை கருத்தில் வைத்து, இதற்கான கால அவகாசம், வரும், 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில், சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், விண்ணப்பம் அளிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது..
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications