Gold Price: மீண்டும் அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. கலக்கத்தில் நகை பிரியர்கள்.. இன்றைய ரேட் என்ன?
சென்னை: தங்கம் விலை (Gold Price) கடந்த சில நாட்களாகவே குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் உயரத் தொடங்கியிருக்கிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் சவரனு ரூ.3,040 அதிகரித்து பெரிய ஷாக் கொடுத்தது. மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை கடும் அதிர்ச்சி அளித்த நிலையில் இன்று குறைய வாய்ப்பு உள்ளதா என எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.
தங்கம் விலை கடந்த 30 ஆம் தேதி காலையில் குறைந்து இருந்த நிலையில் மாலை தாறுமாறாக உயர்ந்தது. சென்னையில் ஒரு சவரன் ரூ.1,10,160 என்ற அளவில் இருந்து. ஆனால் நேற்று முன் தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து இருந்தது.

தொடர்ந்து சரிந்த தங்கம் விலை
சென்னையில் தங்கம் விலையானது கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி, ஒரு சவரன் ரூ.1,26,200 -க்கு விற்பனை ஆனது. ஆனால் அதற்கு அடுத்தடுத்த நாட்களில் தங்கம் விலை தொடர்ச்சியாக சரியத் தொடங்கியது. நாளுக்கு நாள் விலை குறைந்துகொண்டே வந்தது. தொடர்ந்து ஏறி வந்த தங்கம் விலை திடீரென சரியத் தொடங்கியது நகைப் பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
குறிப்பாக மார்ச் 1 ஆம் தேதியில் இருந்து நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வந்த தங்கம் விலை 23 ஆம் தேதி சரமாரியாக குறைந்தது. அதாவது சென்னையில் ஒரு சவரன் ரூ.1,03,600-க்கு விற்பனை ஆனது. இது தான் தங்கம் வாங்க சரியான நேரமா? அல்லது இன்னும் குறையுமா என்ற குழப்பம் நகை பிரியர்கள் மத்தியில் ஏற்பட்டது. ஒரு சிலர் குறைந்த வரைக்கும் போது நகைகளை வாங்குவோம் என சிலர் வாங்கிவிட்டனர்.
மீண்டும் அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை
ஆனால் மேலும் தங்கம் விலை குறையும் என நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதற்கு பிறகு தங்கம் விலை குறைந்தாலும் அதைவிட அதிகரித்ததே அதிகம் ஆகும். பெயரளவில் குறைந்துவிட்டு உயரும்போது பல மடங்காக உயர்ந்து நகை பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த வகையில் தான் நேற்று முன் தினம் சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,10,160 -க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று சென்னையில் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,040 அதிகரித்து ரூ.1,12,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.380 அதிகரித்து 14,050-க்கு விற்பனை செய்யப்பட்டது. திடீரென தங்கம் விலை பெரிய அளவில் உயர்ந்தது நகை பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனால் தங்கம் விலை இன்று எப்படி இருக்குமோ என கலக்கமடைந்துள்ளனர்.
வெள்ளி விலை என்ன?
கடந்த சில நாட்களாகவே வெள்ளி விலையும் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. கடந்த 30 ஆம் தேதி சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன் தினம் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.250-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் நேற்று ஒரே அடியாக கிராமுக்கு ரூ.15 அதிகரித்தது. இதன்படி சென்னையில் நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.265-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலை நிலவரம்:
01.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,400 (நேற்று)
31.03.2026 - ஒரு சவரன் ரூ.1,10,160
30.03.2026 - ஒரு சவரன் ரூ.1,10,160 (மாலை)
30.03.2026 - ஒரு சவரன் ரூ.1,08,800 (காலை)
29.03.2026 - ஒரு சவரன் ரூ.1,09,280
28.03.2026 - ஒரு சவரன் ரூ.1,09,280
27.03.2026- ஒரு சவரன் ரூ.1,07,440
26.03.2026- ஒரு சவரன் ரூ.1,06,800 (மாலை)
26.03.2026- ஒரு சவரன் ரூ.1,09,360 (காலை)
25.03.2026- ஒரு சவரன் ரூ.1,08,800
24.03.2026- ஒரு சவரன் ரூ.1,06,000
23.03.2026- ஒரு சவரன் ரூ.1,06,720 (மாலை)
23.03.2026- ஒரு சவரன் ரூ.1,01,360 (மதியம்)
23.03.2026- ஒரு சவரன் ரூ.1,03,600 (காலை)
22.03.2026- ஒரு சவரன் ரூ.1,08,960
21.03.2026- ஒரு சவரன் ரூ.1,08,960
20.03.2026- ஒரு சவரன் ரூ.1,11,600
19.03.2026- ஒரு சவரன் ரூ.1,11,200 (மாலை)
19.03.2026- ஒரு சவரன் ரூ.1,14,400 (காலை)
18.03.2026- ஒரு சவரன் ரூ.1,16,560
17.03.2026- ஒரு சவரன் ரூ.1,17,200
16.03.2026- ஒரு சவரன் ரூ.1,17,680
15.03.2026- ஒரு சவரன் ரூ.1,18,080
14.03.2026- ஒரு சவரன் ரூ.1,18,080
13.03.2026- ஒரு சவரன் ரூ.1,19,200
12.03.2026- ஒரு சவரன் ரூ.1,19,760
11.03.2026- ஒரு சவரன் ரூ.1,20,960
10.03.2026- ஒரு சவரன் ரூ.1,20,400
9.03.2026- ஒரு சவரன் ரூ.1,19,600
8.03.2026- ஒரு சவரன் ரூ.1,20,400
7.03.2026- ஒரு சவரன் ரூ.1,20,400
6.03.2026 - ஒரு சவரன் ரூ.1,19,680
5.03.2026 - ஒரு சவரன் ரூ.1,20,960
4.03.2026 - ஒரு சவரன் ரூ.1,21,600
3.03.2026 - ஒரு சவரன் ரூ.1,23,720 (மாலை)
3.03.2026 - ஒரு சவரன் ரூ.1,25,200 (காலை)
2.03.2026 - ஒரு சவரன் ரூ.1,25,280
1.03.2026 - ஒரு சவரன் ரூ.1,26,200
-
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
இங்கிட்டு ஹரி நாடார் மாதிரி..அங்கிட்டு அவரு! கழுத்து வலிக்க வலிக்க தங்கநகைகள்! ஒரே நாளில் உடைத்த ஐடி -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்?












Click it and Unblock the Notifications