Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாதம் ரூ.9,250 வருமானம் தரும் அஞ்சலக சேமிப்பு திட்டம்.. போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் செம வட்டி.. சூப்பர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீட்டிலிருந்தபடியே மாதம் ரூ.9,250 வருமானத்தை தரக்கூடிய சேமிப்பு திட்டம் குறித்து தெரியுமா? இந்த திட்டத்தில் எப்படி இணையலாம்?

நாம் பாடுபட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை சரியான வகையில் முதலீடு செய்வதன் மூலம், மிகப்பெரிய பலனை ஈட்டிவிட முடியும்.. நிரந்தர வைப்பு நிதி திட்டங்களில் முதலீடு செய்வது அதிக ஆபத்து இல்லாத முதலீடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது என்றாலும், அஞ்சலக திட்டங்களில் முதலீடு செய்வதும், பெருத்த பலனை வாடிக்கையாளர்களுக்கு தருகிறது.
உத்தரவாதம்: அதுமட்டுமல்ல, உத்தரவாதமான லாபத்தை தரும் வகையிலான பல்வேறு சேமிப்பு திட்டங்களை நம்முடைய அஞ்சலகங்கள் செயல்படுத்தி வருகின்றன. பொதுமக்களின் நன்மதிப்பையும், வரவேற்பையும் அஞ்சலக திட்டங்கள் எப்போதுமே பெற்றுவரக் காரணம் அரசு ஆதரவு பெற்றவை என்பதுடன், எப்போதுமே பாதுகாப்பானதாகவும், நம்பகமானதாகவும் திகழ்ந்து வருவதுதான்.

post office MIS scheme POMIS post office scheme

சேமிப்பு திட்டம்: இப்படியுள்ள பல திட்டங்களில் ஒன்றுதான், போஸ்ட் ஆபிஸ் மாதாந்திர சேமிப்புத் திட்டம் (MIS அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் 2024).. தபால் அலுவலக மாதாந்திர சேமிப்பு திட்டம் என்பது ஒரு வைப்பு திட்டமாகும். இந்த திட்டமானது நடுத்தர மக்களுக்கு மிகவும் பயனுள்ள திட்டங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.. இந்த போடப்படும் பணத்திற்கு நல்ல வட்டி கிடைக்கிறது.

மொத்த தொகை டெபாசிட்டால் ஒவ்வொரு மாதமும் வருமானம் கிடைக்கும்... இந்த மாதாந்திர சேமிப்புத் திட்டத்தில் சிங்கிள் அக்கவுண்ட் மற்றும் ஜாயிண்ட் அக்கவுண்ட் என்று 2 வகைகள் உள்ளன. ஜாயிண்ட் அக்கவுண்ட் முறையில் அதிகபட்சமாக 3 பேர் மட்டுமே இணைய முடியும்.

தபால் நிலையம்: கூட்டுக்கணக்கு தொடங்கும்போது அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இதே திட்டத்தில் தனிநபர் கணக்கில் முதலீடு செய்ய நினைத்தால் ரூ.9 லட்சம் வரை மட்டுமே முதலீடு செய்ய முடியும். போஸ்ட் ஆபிஸின் இந்த கூட்டுக் கணக்கை துவங்குவதுடன் மூலம் ஒவ்வொரு மாதமும் நாம் ரூ.9,250 வருமானத்தை ஈஸியாக பெறலாம்...

கணவன் - மனைவி இணைந்தோ அல்லது குடும்ப உறுப்பினர்கள் 2 பேர் சேர்ந்து தபால் நிலையத்தில் கூட்டுக்கணக்கு தொடங்கலாம். இந்த திட்டத்தின் கீழ் கூட்டுக்கணக்கு ஆரம்பித்து முதலீடு செய்வதால் ரூ.5.55 லட்சம் வரை சம்பாதிக்கலாம். அதாவது, கூட்டாக தொடங்குவீர்களானால், உங்களுக்கான டெபாசிட் வரம்பும் அதிகரிக்கும்... அந்தவகையில் ரூ.5,55,000 எளிதாக சம்பாதிக்கலாம். ஒவ்வொரு மாதமும் கணக்கு துவங்கிய நாளிலிருந்து முதிர்வு காலம் வரை வட்டி செலுத்தப்படும்.

வருமானம்: இந்த திட்டத்தில் பணத்தை மொத்தமாக டெபாசிட் செய்வதால் ஒவ்வொரு மாதமும் வருமானம் பெற முடியும். அஞ்சல் அலுவலக மாதாந்திர சேமிப்புத் திட்டத்திற்கு இப்போது 7.4 சதவீதம் வட்டி கிடைக்கிறது.

இதன்படி, தபால் அலுவலக மாதாந்திர சேமிப்புத் திட்டத்தில் தனிப்பட்ட கணக்கில் ரூ.9 லட்சத்தை முதலீடு செய்தால், 7.4 சதவீத வட்டி விகிதத்தில், ஒவ்வொரு மாதமும் ரூ.5,500 மாத வருமானம் பெறலாம். அதேசமயம், கூட்டாக கணக்கினை தொடக்கினால் ரூ.15 லட்சத்தை முதலீடு (Investment Tips) செய்து, ஒவ்வொரு மாதமும் ரூ.9,250 வருமானம் ஈட்டலாம்.

வருமானம்: அஞ்சல் அலுவலக மாதாந்திர சேமிப்புத் திட்டத்திற்கு இப்போது 7.4 சதவீதம் வட்டி கிடைக்கிறது. அதன்படி ஜாயிண்ட் அக்கவுண்ட்டில் ஒருவர் 5 வருடத்தில் ரூ.15 லட்சத்தை சேமித்தால் செய்தால் அவருக்கு ஆண்டுக்கு 7.4 சதவீத வட்டி கிடைக்கும். அதாவது ஆண்டுக்கு ரூ.1.11 லட்சம் வட்டியாக கிடைக்கும். இதுவே 12 மாதங்களுக்கென்றால், ஒவ்வொரு மாதமும் ரூ.9,250 எளிதாக கிடைக்கும்.

சிங்கிள் அக்கவுண்ட் முறையில் ரூ.9 லட்சம் முதலீடு செய்தால், வருடத்துக்கு ரூ.66,600 வட்டியாக கிடைக்கும். அதாவது ஒவ்வொரு மாதமும் ரூ.5,550யை பெற முடியும். ஒருவேளை இந்த வட்டித்தொகையை மாதந்தோறும் நீங்கள் எடுக்காவிட்டால், இதுவொரு நல்ல அசல் தொகையுடன் சேரும்... இந்த அசல் தொகையுடன் வட்டி தொகையும் சேரும்..

ஒருவேளை உங்களுக்கு விருப்பமானால், அசல் தொகையை 5 வருட முதிர்வு காலத்திற்கு பிறகு திருப்ப பெறலாம். அதே நேரத்தில், இது மேலும் 5 - 5 வருடங்களுக்கு நீட்டித்து அதன் மூலமும் மாத வருமானம் பெறலாம்.

எப்படி இணைவது: இந்த திட்டத்தில் நீங்கள் இணைய விரும்பினால், அருகிலுள்ள அஞ்சலகங்களுக்கு சென்று, POMIS பிஓஎம்ஐஎஸ் திட்டத்துக்கான விண்ணப்பித்தினை பூர்த்தி செய்ய வேண்டும். ஆதார்கார்டு, பான்கார்டு உங்களிடம் கண்டிப்பாக இருக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட தொகையை பணமாகவோ, காசோலை வழியாகவோ செலுத்தி இந்த திட்டத்தில் இணையலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+